சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் சென்று கலக்கி கொண்டு வருகிறார்கள். தெய்வமகள் சீரியல் சத்யா என்கிற வாணி போஜன் அவர்கள் வெள்ளித்திரையில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சிரியலில் நடித்த பிரியா பவானி சங்கரும் தமிழில் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு உள்ளார்.
இந்த வரிசையில் தற்போது நம்ம பஞ்சு மிட்டாய் நட்சத்திரா நாகேஷ் அவர்கள் வெள்ளித்திரையில் ஜொலிக்க போகிறார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நட்சத்திரா.
தன் திறமையால் படிப்படியாக வளர்ந்து பிரபலங்கள் நேர்காணல், கலைநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என முன்னேறி வந்த நிலையில் ராதிகாவின் வாணி ராணி தொடரில் ருத்ரா என்கிற சிறிய வில்லி கேரக்டர் அவருக்கு அரிதாரம் பூச, தற்போது, குஷ்பு சுந்தர்.சியின் லட்சுமி ஸ்டோர்ஸ்தொடரில் நடிகையாகி (natchathira) விட்டார்.
இதற்கிடையில் கனா காதல் என் இனிய பொன் நிலாவே தோட்டாக்கள் பூவாச்சு ஏனோ வானிலை மாறுதே இவள் அழகு & ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல் போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!
நட்சத்திராவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. லட்சுமி ஸ்டோர் சீரியல் மூலம் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் சேர்த்து உள்ளார் நடிகை நட்சத்திர நாகேஷ். லட்சுமி ஸ்டோர் தொடரில் நடிப்பது குறித்து நட்சத்திரா கூறும் போது எனக்கு ரொம்ப அருமையான கேரக்டர்.
நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது. இந்த கேரக்டரில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை நம்பி இவ்வளவு பெரிய கேரக்டரை கொடுத்த குஷ்பு மேடத்துக்கும், சுந்தர் சி. சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
சீரியல், குறும்படங்கள் என நட்சத்திரா பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது அவரது புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்தும் வருகிறார்.
இந்நிலையில் வெள்ளித்திரையில் வணிகன் என்ற திரைப்படத்தில் நாயகியாக களம் இறங்க இருக்கிறார் நட்சத்திரா நாகேஷ் (natchathira) . இவர் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அப்ளைட் நியூட்ரிஷனில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார்.
பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்… உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!
வணிகன் படத்தின் கதாநாயகனாக ஆனந்த் நாக் நடிக்கிறார். மேலும், வி.பி.டேனியல் அவர்கள் இந்த வணிகன் படத்தை இயக்குகிறார். சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோரும் புச்சட்னி இணைந்து உள்ளனர்.
இந்த படத்திற்கு சுரேஷ் குமார் இசையமைக்க, அகஸ்டின் இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து பேசிய நட்சத்திரா, டிவி தொகுப்பாளினியாக வலம் வரும் நான், இப்படம் மூலம், பெரிய திரையில் அறிமுகம் ஆகிறேன் (natchathira) .
‘திரில்லர்’ படம் என்றாலும், காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறியுள்ளார். செந்தில் விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார்.
அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!