நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !

நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !

காதலர்கள் என்றாலே கொடுத்து வைத்தவர்கள் தான். எப்போதும் கற்பனைகள் யதார்த்தத்தை தாண்டிய உணர்வு நிலைகள் என உலகின் சந்திசோஷங்களால் நிரம்பிய உயிர்களாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.


காதல் என்பதே பரவசப்படுத்தும் வேளையில் பிரபலங்களின் காதல்கள் நமக்கு இன்னும் உற்சாகம் அளிக்கின்றன.


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !


தனிப்பட்ட பெண்ணாக நயன்தாரா மிகவும் தைரியமானவர், தவறுகளில் பாடம் கற்று கொண்டு மீண்டு வந்தவர். நடிகர்களுக்கு இணையாக நயன்தாரா இன்று உயர்ந்து நிற்க அவரது திறமை மட்டும் அல்ல எதையும் எதிர்கொள்ளும் பாங்கும் மிக முக்கியமானது.


ஆரம்பத்தில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த நயன்தாரா அதன் மூலம் வாழ்வில் பட்ட கசப்புகளால் இப்போது உணர்வுகளை சமநிலைப்படுத்த கற்று கொண்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். நயன்தாரா இத்தனை நிதானமானவராக மாறியதற்கு பின்னணியில் இருப்பவர் விக்னேஷ் ஷிவன் (vignesh shivan) என்பதும் உண்மை.நிச்சயம் தனக்கு உறுதுணையாக ஒருவர் நிற்பதை உணர்ந்த எந்த பெண்ணும் உலகையே தன் வசமாக்கும் வலிமையை பெறுவாள் என்பது உறுதி. அது நயன்தாராவிற்கு இந்த முறை சரியாக அமைந்திருக்கிறது. நயன்தாரா செல்லும் எல்லா இடங்களிலும் உடன் விக்னேஷ் ஷிவன் இருக்கிறார்.


மனதளவில் தன்னை தாங்க ஒருவர் இருக்கிறார் என்கிற நினைப்பே பெண்களுக்கு ஆயிரம் பலம் தரும். அதிலும் தன்னை மட்டுமே நேசிக்கும் நேர்மையான ஒருவர் வாய்த்து விட்டால் நிச்சயம் அந்தப் பெண் இறைவனால் நேரடியாக ஆசிர்வதிக்கப்பட்டவள். அதில் நயன்தாரா ஒருவர்.


அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !


நேசிப்பவருக்கு பிறந்த நாள் என்றால் கௌரவமாக வாழ்த்து கூட சொல்லாமல் இருப்பது இப்போதைய நவீன யுக அறிவாளிகளின் பழக்கம். ஆனால் விக்னேஷ் ஷிவன் சிறு வயது என்றாலும் இன்னமும் காதலுக்கான பிறந்த நாள் சர்ப்ரைஸ்களை தருவதில் முதலிடத்தில் இருக்கிறார். நிச்சயம் எல்லா காதலர்கள் மற்றும் காதலிகள் தனக்கு முக்கியமானவர்கள் மீதான நேசத்தை இந்த நாளன்று வெளிப்படுத்திய ஆக வேண்டும்.

உங்கள் துணையுடன் புகைப்படம்


நிச்சயம் ஒரு புகைப்படம் என்பது அந்த பெண்ணுக்கு அதிக நம்பிக்கை தரும் ஒன்றுதான். தன்னுடன் ஆன உறவை ரகசியமாக வைத்து பின்னர் அவசியமில்லாமல் போகும் பொழுதில் அப்பெண்ணை விட்டு விலக நினைக்கும் தந்திரமான ஆண்கள் தான் காதலியோடு செல்பி எடுக்க மறுப்பார்கள். அதனை சமூக வலைத்தளங்களில் பகிரவும் விட மாட்டார்கள்.


பிக் பாஸ் 3 வெளியாகும் தேதி இதுதான்! வித்யாசமான அடுத்த ப்ரமோ !


ஆனால் விக்னேஷ் ஷிவன் வெளியே தெரிய ஆரம்பித்ததே அவரது இந்த நேர்மையான செல்பிக்களால் தான். நயன்தாராகும் விக்னேஷ் ஷிவனுக்கு சமமான நேர்மையோடு அவரை இறுக பற்றியபடிதான் அதிக போஸ் கொடுத்திருப்பார். இது காதலின் அன்யோன்யத்தை மட்டும் அல்ல.. உறவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

அவர்களை உத்வேகப்படுத்துங்கள்


உங்கள் பெண் துணை பெறும் வெற்றி என்பது மிக முக்கியமானது. அது எந்த அளவில் இருந்தாலும் சரி.. நீங்கள் அதற்கு உறுதுணையாக இருங்கள். அவர்கள் ஒரு நான்கு வரி கவிதை எழுதினாலும் அதனை சரியான கோணத்தில் பாராட்டுங்கள். மேலும் எழுத மேலும் புது செயல்கள் புரிய ஊக்கப்படுத்துங்கள். அதை விடுத்தது எங்கே நம்மை இவர் மிஞ்சினால் நமக்கு மரியாதை இல்லாமல் பொய் விடுமோ என்று நினைத்து அவர்களின் திறமைகளை ஒடுக்க நினைக்காதீர்கள்.


கோடிகளில் புரளும் நயன்தாராவின் தர்பார் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஈகோவை கழற்றி வையுங்கள்


காதல் உங்களின் வலிமையை நிரூபிக்கும் போட்டி அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். விட்டு கொடுங்கள். அவர்களும் வெல்லட்டும். அதனால் நீங்கள் பெற போகும் சந்தோஷம் நீங்கள் ஜெயிப்பதை விடவும் அதிக அளவாக இருக்கும்.


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்! 

எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம்


எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அன்யோன்யமாக இருங்கள். உங்கள் காதலை வெளிக்காட்டி கொண்டே இருங்கள்.. எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளே வைத்து கொண்டு புன்னகைப்பதே போதுமானது என்று சிலர் இருக்கலாம். காமத்தில் காதலை காட்டினாலே போதும் நான் மிகப்பெரிய தயை செய்திருக்கிறேன் என் கால்களில் நீ கிடக்க வேண்டும் என்பது போலான போலான ஆதிக்க எண்ணங்களை கரைத்து விடுங்கள். உங்களையும் அவரையும் இணைக்கும் எதுவாக இருந்தாலும் கூச்சமில்லாமல் செய்து அவரை சந்தோஷம் கொள்ள செய்யுங்கள்.


ஐஸ்வர்யாவின் அன்ஸீன் புகைப்படங்கள்.. !
 

 

 


View this post on Instagram


 

 

📸 🎛 😎😎 clicked by who🤔🤔 #Moments 😇💥💥 #lasvegas ruthless #casinos 🌍👀🧨 #funclicks📷 #fun #clicks


A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on
காதல் என்பது நான்கு சுவர்களுக்குள் முடியும் விஷயம் கிடையாது. உங்கள் துணைக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். உங்களை மையப்படுத்தி மட்டுமே யோசிக்காமல் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுங்கள். நேரம் செலவழியுங்கள்.. எங்கோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு நதியில் உங்களை நீங்களே கரைத்து விடுங்கள்.


ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.