தமிழ் சினிமாவில் இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இருந்தே பிற மொழி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, அசின் போன்றோர் தான் டாப்பில் இருந்து வந்தனர்.
ஆனால் அதன் பிறகு பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சமந்தா. அறிமுக நடிகையில் இருந்து மெல்ல மெல்ல முன்னணி நடிகளுக்கே டப் கொடுக்கும் அளவில் சமந்தாவின் வளர்ச்சி இருந்தது.
தற்போது நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார் சமந்தா.
கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் மாமனார் குடும்பத்துடன் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணவர் நாகசைதன்யாவை பிரிய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதற்கேற்றார் போலவே மாமனார் வீட்டு நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வருகிறார் சமந்தா. மேலும் விஜய் சேதுபதி, பயத் பாசில், சமத்தா ஆகியோர் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!
ஆனால் நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து சமந்தாவின் ஆடை, கதைத்தேர்வு விஷயங்களில் கொஞ்சம் சலசலப்பு வந்து கொண்டிருப்பதாக சில செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் சமந்தாவின் மாமியாரும் நடிகர் நாகர்ஜூனாவின் மனைவியுமான அமலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் விலங்குகள் மீது தனக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
மேலும் ஹைதராபாத்தில் சொந்தமாக ப்ளூ கிராஸ் அமைப்பை நடத்தி வரும் அமலா, தனது கணவர் நாகர்ஜூனா தனக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பை தொடங்க அவர் உதவியதாகவும் இப்போது வரை அவர் பெரிய நன்கொடை அளித்து வருவதாகவும் கூறினார்.
தனது மருமகளான சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமலா, அவர் மிகவும் திறமையானவர் என்றார். மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாப்பாத்திரத்தை பார்த்து ரசித்ததாகவும் அவர் கூறினார்.
சமந்தாவின் ஆடை விஷயத்தில் குடும்பத்தினர் கோபமாக இருப்பதாகவும் இதனால் சமந்தா விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து எதுவும் பேசாமல் மருமகளின் திறமையை பாராட்டி இருக்கிறார் மாமியார் அமலா.
சேலையில் க்யூட் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை பேபி அனிகா… கடும் வியப்பில் ரசிகர்கள்!
சமந்தாவின் ஆடை விஷயத்தில் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் வந்தது என்று பரவி வந்த செய்திகளுக்கு தற்போது அமலா முற்றுப்புள்ளி வைத்துதுள்ளார்.
இதனிடையே தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது.
அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் “பிராணம் ” என்ற முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பாடலுக்காக சமந்தாவின் தெலுங்கு , தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்… உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!