ரன்பீரின் ரகசியத்தை அம்பலப்படுத்திய கத்ரீனா.. இது உங்களுக்கு தேவையா ரன்பீர் ?

ரன்பீரின் ரகசியத்தை அம்பலப்படுத்திய கத்ரீனா.. இது உங்களுக்கு தேவையா ரன்பீர் ?

பாலிவுட் நடிகர்கள் என்றாலே காதலிப்பதும் பின்னர் பிரிவதும் தங்கள் எக்ஸ்களுடன் நட்பாக பழகுவதும் மிக சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் ரன்பீரின் முன்னாள் காதலியான கத்ரீனா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரன்பீர் பற்றிய ரகசியம் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.              


ரன்பீரும் கத்ரினாவும் 7 ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். அதன் பின்னர் பிரிந்தனர். தீபிகாவை காதலித்த ரன்பீரை கத்ரீனாவுடன் கையும் களவுமாக பார்த்த தீபிகா ரன்பீரை விட்டு விலகினார். காதல் முறிந்தது என்று செய்திகள் வந்தது.       


கங்கணாவின் தொடர் மௌனம்.. எட்டு நாட்கள் என்ன செய்தார்..    


   


அதன் பின்னர் நீண்ட நாள் கழித்து தற்போதுதான் பாலிவுட் இளம் நடிகை ஆலியா பட் உடன் காதலில் இருக்கிறார் ரன்பீர். இருவரும் ஒரே வீட்டில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.             


இந்த நிலையில்தான் கத்ரீனா கைப் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ் நடத்தும் பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் நீங்கள் இன்ஸ்டாக்ராமில் போலி கணக்கு வைத்திருக்கிறீர்களா என்றும் அதன் மூலம் மற்றவர்களை ரகசியமாக கண்காணிக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.           


 நான் சாகும் கடைசி நிமிடம் வரை கங்கணாவைத் தவறாக பேச மாட்டேன்.. நெகிழும் இயக்குனர் மகேஷ்பட்


இதற்கு கத்ரீனா இல்லை என்று கூறியிருந்தால் சிக்கல் இருந்திருக்காது. அவரோ எனக்கு போலி கணக்குகள் இல்லை ஆனால் ரன்பீருக்கு உண்டு என்று தன்னை நோக்கி வந்த அம்பை கேட்ச் பிடித்து ரன்பீர் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்.                


தனக்கு இன்ஸ்டாக்ராமை அறிமுகம் செய்து வைத்ததே ரண்பீர்தான் என கூறும் கத்ரீனா.. தனக்கு சொல்லி கொடுத்த குருவையே காட்டியும் (reveals) கொடுத்திருக்கிறார். 2017 ல் இன்ஸ்டா கணக்கு தொடங்கிய இவருக்கு இன்ஸ்டாக்ராமில் 21.5மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.            
 

 

 


View this post on Instagram


 

 

#feetupwiththestars @anaitashroffadajania 🦋💕🌟


A post shared by Katrina Kaif (@katrinakaif) on
ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்ரன்பீரின் இந்நாள் காதலியான ஆலியாவும் முன்னாள் காதலியான கத்ரீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது!                


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் 


சாரா அலிகான் வீட்டில் கார்த்திக் ஆர்யான்.. முகத்தை மறைத்தபடி சென்ற வினோதம்..          


---                                                        


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.