பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவால் (aradhya) மீண்டும் கடுமையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறார்.
அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் தம்பதிகளுக்கு பிறந்த ஒரே குழந்தையான ஆராத்யாவிற்கு தற்போது எட்டு வயதாகிறது. பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் என்பதால் ஐஸ்வர்யா எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அது உடனே மீடியா வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது.
சோனம் கபூரின் காஸ்ட்லீ ஹாண்ட் பேக் ! விலை வெறும் 18 லட்சம்தான்!
சமீபத்தில் மும்பையில் உள்ள தனது மகளுடன் உணவு விடுதிக்கு ஐஸ்வர்யா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
தனது மகளின் கையை பிடித்தபடி நடக்கும் ஐஸ்வர்யாவை பார்த்த நெட்டிசன்களுக்கு எதனாலோ அது பிடிக்காமல் போயிருக்கிறது. அந்த புகைப்படத்தை வைத்து ஐஸ்வர்யாவை தாறுமாறாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?
ஆராத்யாவை ஏன் இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறீர்கள் என்றும் உங்களுக்கும் ஆராத்யாவிற்குமான தொப்புள் கொடியை எப்போது அறுப்பீர்கள் என்றும் நாகரிகமே இல்லாமல் ஐஸ்வர்யாவை கேள்விகளால் துளைக்கின்றனர்.
ஒரு சிலரோ ஆராத்யாவிற்கு 8 வயது ஆகிறது ஏன் இன்னும் சிறு குழந்தை போல அவரை நடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
க்ரஷ்ஷால் தொடங்கிய நட்பு.. கஜோல் பற்றி கரண் ஜோகர்
வேறு சிலரோ இன்னும் அதிக உரிமை எடுத்து கொள்வதாக நினைத்து கொண்டு ஆராத்யாவை சுதந்திரமாக நடக்க விடுங்கள். அவருக்கு 8 வயது ஆகிவிட்டது என்று கூறியிருக்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய் ஐஸ்வர்யா ஆராத்யாவின் கைகளை பிடித்திருப்பதால் ஆராத்யாவிற்கு கைகள் வலிக்கும் என்றும் கழுத்து வலி வரலாம் என்றும் ஆராத்யா பாவம் அவரை பிடிப்பதை விட்டு விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.
View this post on Instagram#aishwaryabachchan #aradhyabachchan with family for dinner @viralbhayani
இதே நேரத்தில் ஒரு அம்மாவிற்கு தனது மகளின் கரத்தை எப்போது விட வேண்டும் என்பது தெரியும். அவரது மகளின் கைகளை அவர் பிடித்திருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்னை என்று ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆராத்யாவோடு எப்போதுமே ஐஸ்வர்யா இணைபிரியாமல் இருப்பதாலோ என்னவோ ஒரு சிலர் இதனால் பொறாமையோடு விமர்சிக்கின்றனர். முன்பொருமுறை ஐஸ்வர்யா தனது மகளுக்கு தந்த உதட்டு முத்தத்தால் மக்களிடம் திட்டு வாங்கினார். அதில் கூட ஒரு நியாயம் இருந்தது. இப்போது கைகளை பிடித்திருப்பது ஒரு குற்றம் என்கின்றனர் இணையவாசிகள்.
நட்சத்திரங்கள் என்றால் பின்னர் எப்படித்தான் இருப்பதோ !
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ், instagram
மலாய்காவின் மகன் மற்றும் ஜான்வி மற்றும் ஆறு வித்யாசங்கள் ! நெட்டிசன்ஸ் கிண்டல் !
---
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.