நான் சாகும் கடைசி நிமிடம் வரை கங்கணாவைத் தவறாக பேச மாட்டேன்.. நெகிழும் இயக்குனர் மகேஷ்பட்

நான் சாகும் கடைசி நிமிடம் வரை கங்கணாவைத் தவறாக பேச மாட்டேன்.. நெகிழும் இயக்குனர் மகேஷ்பட்

பாலிவுட்டில் நடிகை கங்கனாவிற்கும் இயக்குனர் மகேஷ்பட் குடும்பத்தாருக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வருகிறது.


பாலிவுட்டில் மூத்த அனுபவம் வாய்ந்த இயக்குனரான மகேஷ் பட் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி பேசி வருகிறார் கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி. ஆலியா பட் உடன் கங்கானாவை ஒப்பிட்டு ஒரு நாளிதழ் பேசியதே இதற்கு ஆரம்ப புள்ளியாக உணரப்படுகிறது.


ஆலியாவை அப்படி வளர்க்கவில்லை' - அம்மா சோனி; 'லவ் யூ ரன்பீர்' மகள் ஆலியா !கங்கணா தற்போதுதான் இயக்குனராக தனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார். மணிகர்ணிகா எனும் வரலாற்று படத்தை அவரே இயக்கி வணிக ரீதியாக அதில் மிக பெரிய வெற்றியும் அடைந்திருக்கிறார். கங்கணா எப்போதும் தைரியத்திற்கு பெயர் போனவர் மி டூ சமயத்திலும் அவரது புகார்கள் அதிரடியாக இருந்தது.


சமீபத்தில் கல்லி பாய் படத்தில் ஆலியா பட்டின் நடிப்பை கங்கணாவோடு ஒப்பிட்டு பேசியது அவரது மனதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த சிறப்பும் இல்லாத வாரிசுகளை தூக்கி வைத்து கொண்டாடுவதை மீடியா நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.


இயக்குனர் ஆகிறார் ஐஸ்வர்யா ராய் .. அடுத்த படம் பற்றிய ஸ்பெஷல் தகவல்கள் உள்ளே !மேலும் ஆலியா பட் இன்னமும் இளம் பெண் அல்ல அவருக்கு 27 வயதாகிவிட்டது என்றும் ஆலியாவை நேரடியாக தாக்கி பேசினார். அவரது மேனேஜர் அவரது சகோதரி ரங்கோலி என்பதால் ரங்கோலி பழைய விஷயங்களை கிளறி மகேஷ் பட்டின் குடும்பத்தை இழுத்து பேசி வருகிறார்.


ஒருமுறை கங்கணா ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட மகேஷ் பட் அவர் மீது செருப்பை வீசியதாகவும் கங்கணா நடித்த படத்தின் ப்ரீமியரை அவரே பார்க்க முடியாமல் செய்ததாகவும் அப்போது கங்கணாவிற்கு 19வயது என்றும் ஆதாரங்கள் அற்ற புகார்களை அடுக்கினார்.


இந்த வார்த்தை போரில் மகேஷின் மனைவி சோனி ரஸ்தான் மட்டும் பதில் பேசி வருகிறார். ஆலியாவோ அவரது அப்பா மகேஷ் பட் டோ இதை பற்றி பேசவேயில்லை.


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்சமீபத்தில் வெளியான யுவர்ஸ் ட்ரூலி திரைப்பட காட்சியின் போது இந்த பிரச்னை பற்றிய தனது கோணத்தை மீடியாக்களிடம் பதிவு செய்திருக்கிறார் மகேஷ் பட்.


கங்கணா (kangana) ஒரு குழந்தை (பச்சி) எனவும், எனது தயாரிப்பில் மூலம் சினிமாவிற்கு வந்து தான் வளர்த்து விட்ட குழந்தை கங்கணா என்பதால் அவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேச மாட்டேன். நமது பண்பாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை.


ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?அவரது உறவினரே (ரங்கோலி) என்னை தாக்குகிறார் என்பதற்காக நான் பதிலுக்கு கங்கணாவை தாக்கி பேச விரும்பவில்லை. நமது இந்திய பண்பாடு நாம் வளர்த்த குழந்தைகளை நாம் கை நீட்டி பேச கூடாது என்கிறது. கங்கணா தனது திரை வாழ்க்கையை எனது தயாரிப்பில் இருந்து தொடங்கினார். அவரும் எனக்கு ஒரு குழந்தைதான். ஆகவே என் உயிர் உள்ளவரை கங்கணாவை தவறாக பேச மாட்டேன். அது எனது வளர்ப்பில் இல்லை என்று அற்புதமாக பதில் அளித்திருக்கிறார் மகேஷ் பட்.


தன்னையும் தனது மகள் ஆலியாவையும் இந்தியர் அல்லாதவர்கள் என்று கங்கணாவின் சகோதரி வசை பாடியும் தனது நிலையில் இருந்து தரம் தாழ்ந்து போகாமல் மகேஷ் பட் பேசியிருப்பது அவரது பக்குவம் அனுபவத்தின் சிறப்பினை காட்டுகிறது என்கிறது பாலிவுட்.


பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.