கங்கணாவின் தொடர் மௌனம்.. எட்டு நாட்கள் என்ன செய்தார்..

கங்கணாவின் தொடர் மௌனம்.. எட்டு நாட்கள் என்ன செய்தார்..

மீ டூ விவகாரம், மகேஷ் பட் உடன் லடாய் என மணிகர்ணிகா இயக்குனர் கங்கணா ரணாவத் மீடியாவின் வெளிச்சத்தில் பட்டு கொண்டே இருந்தார்.


ஆனால் சில நாட்களாக கங்கணா அமைதியாக இருக்கிறார் அவரது புகைப்படங்களையோ சூடான அறிக்கைகளையோ எங்கும் காண முடியவில்லை.


அவரை எங்கே என்று தேடியபோது அவர் கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் Silence த்யான வகுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


kangana


வெண்மை உடையில் தலையில் உயர்த்தி போடப்பட்ட கொண்டையுடன் கண்களை மூடி தியானத்தின் முழுமையை அனுபவிப்பது போன்ற ஒரு புகைப்படம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.


அவரது இன்ஸ்டா பக்கத்தை பராமரிக்கும் குழுதான் இந்த படத்தை வெளியிட்டிருக்கிறது.


இவரது இந்த த்யானத்திற்கான முகாம் எட்டு நாள் மௌனத்துடன் நீண்ட நேர தியானங்களை கொண்டது. ஈஷா யோகா மையம் பல விதமான மன அழுத்தங்கள் மற்றும் வாழ்வின் சமநிலையை பராமரிக்க முடியாமல் திண்டாடும் சமயங்கள் எண்ணங்களை கட்டுக்குள் வைப்பது பொறுமை மற்றும் நிதானம் போன்றவற்றை வாழ்க்கை முறையாகவே மாற்றி கொள்வது ஆகிய பல விஷயங்களை நமக்கு கற்று கொடுக்கிறது.மன அழுத்தங்கள், வேலை சிக்கல்கள், போட்டிகள் அதிகம் இருக்கிற இடம் சினிமா இண்டஸ்ட்ரி. அதனால் ஈஷா யோகா மையத்திற்கு அதிகம் வரும் த்யான அன்பர்களில் ஒரு சிலர் சினிமாவை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களும் நம்மை போன்ற சாதாரண ரத்தம் சதை உள்ள மனிதர்கள்தான் என்பதை அவ்வவ்போது மறந்து விடுபவர்கள் இவர்களுக்கு ஆசிரமத்தில் என்ன வேலை என்று கேட்கின்றனர்.


பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்அதிதி ராவ், காஜல் அகர்வால், சுஹாசினி மணிரத்னம், அமலா பால், தமன்னா என இங்கே த்யானம் கற்று தங்களுக்குள் தங்களை கண்டறிந்த நடிகைகள் பலர் இருக்கின்றனர். அதில் மற்றும் ஒரு சாட்சியாக தற்போது கங்கணா அங்கே சென்றிருக்கிறார்.


நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்
ஈஷா யோக மையத்தில் கங்கணாவின் அனுபவம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஸ்வர்க்க ருசியை அவருக்கு கொடுத்திருக்கிறது. இந்த வாழ்விற்கான காரணத்தை நீங்கள் அடி ஆழத்தில் இருந்து அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா.. இப்படி ஒரு ஆசை உங்களுக்கு வந்து விட்டால் நீங்கள் இப்போது இருப்பதில் இருந்து கொஞ்சம் முயற்சி அதிகம் எடுத்தால் போதுமானது எனும் சத்குருவின் வரிகளை எடுத்து கூறும் கங்கணா இதுதான் சம்யமா எனும் மௌன த்யானம் என்று தனது வார்த்தைகளில் கூறி இருக்கிறார்.


முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்... எமி ஜாக்சனின் புதிய பார்முலா !வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்புபவர்கள் சம்யமா நிகழ்வை அனுமதிக்க வேண்டும் என்பது ஈஷா அன்பர்களின் வேண்டுகோள்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


நான் சாகும் கடைசி நிமிடம் வரை கங்கணாவைத் தவறாக பேச மாட்டேன்.. நெகிழும் இயக்குனர் மகேஷ்பட்

 


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.