logo
ADVERTISEMENT
home / Bollywood
சாரா அலிகான் வீட்டில் கார்த்திக் ஆர்யான்.. முகத்தை மறைத்தபடி சென்ற வினோதம்..

சாரா அலிகான் வீட்டில் கார்த்திக் ஆர்யான்.. முகத்தை மறைத்தபடி சென்ற வினோதம்..

சாரா அலிகான் என்றாலே கிசுகிசுக்கள் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்ட் என்பது போலவே அவருக்கு நடந்து வருகிறது. சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாக இப்போது மூன்றாவது படமான ஆஜ் கல் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் இவருடன் இணைந்திருப்பவர் கார்த்திக் ஆர்யான். ஆஜ் கல் திரைப்படம் லவ் ஆஜ் கல் திரைப்படத்தின் அடுத்த கட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குபவர் தனது கதைகளால் சினிமா ரசிகர்களின் நெஞ்சின் அடி ஆழத்தை பிய்த்து மேலே கொண்டு வந்து சேர்க்கும் இயக்குனரான இம்தியாஸ் அலி ஆவார்.

பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்

ADVERTISEMENT

சாரா அலிகான் அவருடன் முதல் படத்தில் இணைந்து நடித்த சுஷாந்த் உடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. இவர்கள் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருந்ததை பேப்பரசிகள் புகைப்படம் மூலம் நிரூபித்து வந்தனர். சுஷாந்த் வீட்டிற்கு சாரா செல்வதும் சாரா வீட்டிற்கு சுஷாந்த் வருவதுமாக இருந்து வந்தது.

இதனிடையில் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஆஜ் கல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்கு முன்பாகவே கார்த்திக் ஆர்யான் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக சாரா கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்த திரைப்படம் காரணமாக கார்த்திக் ஆர்யான் (karthik aryaan) மற்றும் சாரா இடையே நெருக்கம் அதிகரிப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனை அறிந்த சுஷாந்த் சாராவுடன் இருந்த உறவை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

நான் சாகும் கடைசி நிமிடம் வரை கங்கணாவைத் தவறாக பேச மாட்டேன்.. நெகிழும் இயக்குனர் மகேஷ்பட்

ADVERTISEMENT

இந்நிலையில் முன்பை போலவே கார்த்திக் ஆர்யான் சாரா வீட்டிற்கு வருவதும் சாரா கார்த்திக் ஆர்யான் வீட்டிற்கு போவதுமாக கதை தொடர்கிறது. மதியம் கார்த்திக் சாரா வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அன்று மாலையே சாரா கார்த்திக் வீட்டிற்க்கு சென்றிருக்கிறார்.

கார்த்திக் ஆர்யான் சாரா வீட்டில் இருந்து கிளம்பும்போது பேப்பரசிகள் அவரை பார்த்ததால் வேக வேகமாக முகத்தை மறைத்து கொண்டு காரில் வெளியேறி இருக்கிறார். இதே விஷயத்தை தான் தனது முன்னாள் டேட்டிங் அனன்யா பாண்டேவுடன் இருக்கும்போதும் செய்திருக்கிறார் கார்த்திக். இது எல்லாம் தெரிந்த சாராவோ கூலாக இருக்கிறார்.

ADVERTISEMENT

இவர்கள் இருவருக்கும் காதல் என்று பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் இருவருமே பட விஷயமாகத்தான் சந்தித்து கொண்டோம் என்று கூறி வருகின்றனராம்.

நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்

திருமணத்திற்கு சம்மதித்த நயன்தாரா.. இந்த வருட இறுதியில் கெட்டி மேளம் ?

ADVERTISEMENT

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்     

ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்                       

—                                                                        

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

06 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT