நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்

நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்..  உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்

தமிழ் திரையுலகில் நடிகர்கள் நடிகைகள் என பலர் திருமணங்கள் நிறைய முறை விவகாரத்தில் முடிந்திருக்கின்றன. இதில் எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட நடிகர் விஷ்ணு விஷாலும் தப்பவில்லை.


2011 ஆம் ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்தவர் விஷ்ணு விஷால். அவர் மிகவும் அமைதியானவர் என்று அவரே கூறுகிறார். தமிழ் சினிமாவில் குறைவாக மதிப்பிடப்படும் நிறைவான திறமைசாலிகளில் விஷ்ணு விஷாலும் ஒருவர்.தனது விவாகரத்து (divorce) பற்றி ஆங்கில நாளிதழில் விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசியிருக்கிறார். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதையே நான் இன்னும் நம்பவில்லை. ஜீரணிக்க முடியாமல் இருக்கிறேன். வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.


என் வாழ்வில் மிக சரியாக நடந்த ஒரு விஷயம் என்றால் அது எனது திருமணம்தான் என்று நினைத்தேன். ஆனால் இப்போது அதுவும் விவகாரத்தில் முடிந்து விட்டது. நிலைக்கவில்லை.


என்னுடைய குணம் மிக அமைதியானது. யாருடனும் அதிகம் பேச மாட்டேன். காரணம் எனது தன்னம்பிக்கை குறைவாக இருந்தது. சினிமாவில் இருந்து கொண்டு யாரிடமும் பேசாமல் இருப்பது எனது வாய்ப்புகளை வீணாக்கியது.


ஜெஸ்ஸி.. ஜானு..மற்றும் த்ரிஷா... ஹாப்பி பர்த் டே !இதனை உணர்ந்த பின்னர் என்னை நான் மாற்றி கொண்டு அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். ரொமான்ஸ் காட்சிகள் சரியாக வர நடிகைகளுடன் நன்றாக ஃப்ரெண்ட்லியாகப் பேச தொடங்கினேன். இந்த இடத்தில் தான் எனது பிரச்னை ஆரம்பித்தது.


நான் முன்பு போல இல்லை என்றும் மாறிவிட்டதாகவும் என் மனைவி திருமணம் செய்கையில் நான் இந்த குணத்தில் இல்லை என்றும் சண்டைகள் ஆரம்பித்தது. ஒருவிதத்தில் அது உண்மைதான்


ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?நான் மாறியதால் நாங்கள் பிரிந்து விட்டோம். எதற்காகவும் யாரையும் கட்டாயப்படுத்த நான் விரும்பவில்லை . நாங்கள் பிரிந்து விட்டோம். நான் என் மனைவியை பிரிந்தாலும் நட்புடன் இருப்பேன்


என் மனைவியையும் மகனையும் நான் இன்னும் நேசிக்கிறேன். என்னை ஒருநாள் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு சில நேரங்களில் சிலர் ஒன்றாக இருப்பது இந்த ப்ரபஞ்சத்துக்கே பிடிக்காமல் போய்விடுகிறது.என்று தனது விவாகரத்து குறித்து மனம் திறந்திருக்கிறார் விஷ்ணு விஷால்.


கல்லூரி நாட்களில் இருந்தே காதல் செய்து திருமணம் செய்த விஷ்ணு விஷால் தம்பதிக்கு ஆர்யன் எனும் ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்முன்னதாக இவர் நடிப்பில் அமோக வெற்றி பெற்ற திரைப்படமான ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடிகை அமலா பால் இணைந்து நடித்தார். அந்த சமயம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் எழுந்தன. விவாகரத்து வரை சென்றதற்கு அவர்தான் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்


திருமணத்திற்கு சம்மதித்த நயன்தாரா.. இந்த வருட இறுதியில் கெட்டி மேளம் ?வாழ்க்கை எப்போதும் பரீட்சைகள் வைத்த பின்னர்தான் பாடங்களை நடத்துகிறது.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---                                                                


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!             


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.