logo
ADVERTISEMENT
home / Ayurveda
அந்த’ இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் சில எளிய தீர்வுகள் !

அந்த’ இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் சில எளிய தீர்வுகள் !

பெண்களால் வெளியே சொல்லி கொள்ள முடியாத அவஸ்தைகளில் அவர்கள் அந்தரங்க இடம் சுற்றி இருக்கும் கருமையும் ஒன்று. இதை வெளியே சொல்லி தீர்வு தேட தெரியாமல் மனதிற்குள் புழுங்கி கொண்டிருப்பவர்களுக்கான தீர்வு தான் இந்த கட்டுரை.

முதலில் இது எதனால் ஏற்படுகிறது என்பதனை நீங்கள் அறிந்து கொண்டால் அதன் பின்னர் அதற்கான தீர்வுகளை அறிவதில் உங்களுக்கு கஷ்டம் இருக்காது.

இந்தியா வெப்ப நாடு. அதனால் உள்ளே பூக்கும் வியர்வையில் வெளியேற வழி இருக்காது. செயற்கை இழைகளால் ஆன உள்ளாடைகள் சாட்டின் சில்க் போன்றவை பயன்படுத்துவதால் இந்த வியர்வை உறிஞ்சப்படாமால் அங்கேயே ( Vagina) தங்கி விடுவதால் கறுத்து விடுகிறது.

அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்கள்!

ADVERTISEMENT

கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் – ட்வீட் செய்த சின்மயி

அது மட்டும் இல்லாமல் அதிகம் நடப்பது வேலை செய்வதன் மூலம் நம் தொடைகள் உராய்கின்றன. மிக மென்மையான அந்தரங்க பகுதிகள் தொடர்ந்த உராய்வினால் பாதிக்கப்பட்டு வெகு விரைவில் கருமையடைகின்றன. நாளாக நாளாக அது ஒரு தழும்பை போலவே மாறி கறுத்து போகிறது.

அடிக்கடி பெண் உறுப்பை சவரம் செய்வதால் தோல் தடித்து கருமையடைகிறது. க்ரீம்களும் இதைத்தான் செய்கின்றன. அடிக்கடி செய்யாமல் இடைவெளி விட்டு செய்வதும் கத்தரிக்கோல் மூலம் கத்தரிப்பதும் தோலை நல்லமுறையில் வைத்திருக்கும்.

ADVERTISEMENT

மேலும் இறுக்கமான ஜீன் போன்ற உடைகளை விட பலாஸோ போன்ற உடைகள் உள்ளே வியர்வை ஏற்படுவதை தவிர்க்கும். பருத்தி உள்ளாடைகள் அணிவதுதான் சிறந்தது.

உங்கள் முக அழகினை பலமடங்காக்கும் முட்டை ஓடு.. ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணுங்கள் !

உள் தொடை மற்றும் அக்குள் கருமையை போக்க சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. இதில் எது உங்கள் சருமத்திற்கு நல்லதோ அதனை பயன்படுத்துங்கள்.

ADVERTISEMENT

எலுமிச்சை கருமையை நீக்குவதில் வல்லது. எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் மற்றும் ரோஸ் வாட்டர் 10 சொட்டுக்கள் சேர்த்து கலந்து அந்த இடத்தில் பஞ்சினால் நனைத்து தடவி விடுங்கள். 5 நிமிடம் கழித்து நல்ல நீரில் அலச வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் இரண்டு வாரங்களில் பலன் கிடைக்கும்.

மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!

அரிசி மாவு சருமத்திற்கு நிறம் கொடுப்பதில் பெரிய உதவி செய்கிறது. அரிசி மாவு இரண்டு ஸ்பூன் மஞ்சள் ஒரு சிட்டிகை மற்றும் தயிர் ஒரு ஸ்பூன் இதனை நன்கு கலக்கவும். அதன் பின் சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டு நீங்கள் அந்த இடத்தில் பேக் போடவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட்டு நல்ல மாய்ச்சுரைஸர் தடவி விடுங்கள்.

ADVERTISEMENT

கொரிய பெண்களின் “க்ளாஸி லுக்” சருமம் உங்களுக்கும் வேண்டுமா! இந்த பத்து ரகசியங்களை மட்டும் பின்பற்றுங்கள் !

கற்றாழை அந்த இடத்தில் இருக்கும் கிருமிகளை நீக்குவதோடு குளிர்ச்சி மற்றும் இதமும் கொடுக்கிறது. இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் மஞ்சள் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். அதனை அங்கே தடவி காய விட்டு 20 நிமிடம் கழித்து அலசி விடுங்கள். இப்படி செய்து வர விரைவில் கருமை நிறம் மாறி விடும்.

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஆப்பிள் பேஷியல் மூலம் அழகை பராமரியுங்கள் !

ADVERTISEMENT

சந்தன பொடி ஒரு ஸ்பூன் மற்றும் ஆரஞ்சு பொடி ஒரு ஸ்பூன் இரண்டையும் ஒன்றாக கலந்து ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். இதனை அந்தரங்க பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் இரண்டே வாரங்களில் கருமை குறைந்திருக்கும்.

“கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில்
கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!”

ADVERTISEMENT

இன்னும் விரைவாக செய்ய வேண்டும் என்றால் முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதனை நீங்கள் நன்றாக அடித்தால் நுரை வரும். அதன் பின் அந்த நுரையை அந்த இடத்தில் தடவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து பஞ்சின் மூலம் துடைத்து எடுக்க வேண்டும். அதன் பின்னர் தண்ணீரினால் கழுவி கொள்ளலாம். இந்த முறையை தினமும் செய்து வந்தால் விரைவாக கருமையான இடம் வெண்மையாக மாறும்.

தேங்காய் எண்ணெயை முடியை நீக்கிய உடன் தடவி வர வேண்டும். தினமும் தடவி வந்தால் ஒரு மாதத்தில் பலன் கிடைக்கும்.

தயிரை மட்டும் இரண்டு ஸ்பூன் எடுத்து அந்த இடத்தில் மசாஜ் போல செய்து தடவி வர சில நாட்களில் நிறமாற்றம் ஏற்படும்.

ADVERTISEMENT

இதையெல்லாம் விடவும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது.. ஆண்கள் இதனை ஒரு பிரச்னையாக பார்ப்பதே இல்லை என்பதுதான் அது. ஆண்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலைதான் பெண்களுக்கு அதிகம் என்பதால் இதனை இங்கே கூறுகிறேன்.

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

19 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT