கொரிய பெண்களின் "க்ளாஸி லுக்" சருமம் உங்களுக்கும் வேண்டுமா! இந்த பத்து ரகசியங்களை மட்டும் பின்பற்றுங்கள் !

கொரிய பெண்களின் "க்ளாஸி லுக்" சருமம் உங்களுக்கும் வேண்டுமா! இந்த பத்து ரகசியங்களை மட்டும் பின்பற்றுங்கள் !

தமிழ்நாட்டில் இருக்கும் நம்மால் கொரிய பெண்களை நேரில் பார்த்திருக்க வாய்ப்பு குறைவுதான். என்றாலும் கொரிய படங்களை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். அதில் படத்தின் கதையோடு அதில் காட்டப்படும் பெண்களையும் கவனித்து பார்த்தால் வெகு சாதாரண காய்கறி விற்கும் பெண்ணாக இருந்தாலும் கூட அவர்கள் உடல் அற்புதமான பளபளப்பை கொண்டிருப்பதை பார்க்க முடியும்.


நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ஜொலிக்கும் மேனியை பெற கொரியர்கள் அவர்களின் பாரம்பர்ய அழகு ரகசியங்களை பின்பற்றுகிறார்கள்.அந்த ரகசிய முறைகளை சில கொரிய நடிகைகள் மீடியாவின் புண்ணியத்தால் வெளியே கொண்டு வந்துள்ளனர். இதனால் உலகம் முழுதும் இந்த அழகு ரகசியத்தை பின்பற்றி நம் சருமத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்.


சரும பாதுகாப்பு என்பது மனிதத்தின் ஒட்டு மொத்த பொறுப்பு என்பதை நன்கு உணர்ந்தவர்கள் கொரியர்கள் (Korean) . கூடவே அதனை சந்தோஷமாகவும் ஒரு தியானம் போன்றும் நடத்திக் கொள்வதுதான் அவர்கள் சிறப்பு.


என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா ! செய்து பாருங்கள் கொலாஜென் ஃபேஷியல் !முதல் ரகசியம்


க்ளென்சிங் தான் ஆனால் ஆயில் க்ளென்சிங்


முதலில் உங்கள் மேக்கப் தடயங்களை அழித்து விடுங்கள். ஒரு நல்ல ஆயில் க்ளென்சரை தேர்ந்தேடுங்கள். அதனை முகம் முழுதும் தடவுங்கள். கண்கள் மற்றும் உதடுகளை மட்டும் தவிருங்கள். முகத்தை மெண்மையாக மசாஜ் செய்து விடுங்கள். பின்னர் லேசாக நீர்துளிகளை முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். இந்த ஈரப்பதமான முகத்தை மீண்டும் மசாஜ் செய்து முகத்தை கழுவி விடுங்கள். இதனால் முகத்தில் மீதம் உள்ள மேக்கப் தடயங்கள் , தூசுகள், கிருமிகள் என முகத்தில் நாள்முழுதும் தங்கி இருந்த எல்லாம் சுத்தமாகி விடும்.


இந்த ஆயில் க்ளென்சர் உங்களுக்கு பிடிக்கிறதா பாருங்கள் 


இரண்டாவது ரகசியம் வாட்டர் க்ளென்சர்


ஆயில் க்ளென்சிங் முடிந்த உடன் உங்கள் க்ளென்சிங் வேலை முடிந்தது என்று நீங்கள் நினைக்காதீர்கள். அடுத்தது வாட்டர் க்ளென்சர் உண்டு. காரணம் முழுமையான இறந்த செல்கள் முதல் க்ளென்சரில் நீங்குவதில்லை, அதனால்தான். அதனை முழுதாக நீக்க கொரியர்கள் வாட்டர் க்ளென்சரை உபயோகிக்கின்றனர். முகத்தை ஈரமாகி விட்டு வாட்டர் க்ளென்சர் மூலம் மசாஜ் செய்யுங்கள். அதன் பின்னர் கழுவி விடுங்கள். இனி உங்கள் முகம் மாசு இல்லாமல் பரிசுத்தமாக இருக்கும்.


இந்த வாட்டர் க்ளென்சரை இங்கே வாங்குங்கள்


 


உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்மூன்றாவது ரகசியம் 


சிதைந்த செல்களை நீக்குதல்


இறந்த செல்களை நீக்கினால்தான் உண்மையான பாலிஷான ஒரிஜினல் சருமத்தை வெளியே கொண்டு வர முடியும். அதற்காகவே இந்த முறை பயன்படுகிறது. மேலும் இதனால் சருமம் முழுதும் நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருள்கள் நன்றக பரவி வேலை செய்யவும் இது உதவுகிறது.


உங்கள் முகத்தை ஈரமாக்கி பின்னர் இதனை நீங்கள் முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். வட்டவடிவத்தில் மென்மையாக தேய்த்து கொடுங்கள். வன்மையாக செய்ய வேண்டாம். இதனால் சருமத்தில் கீறல்கள் விழலாம். அதன் பின்னர் கழுவி விடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதுமானது.


இந்த எக்சிபோலியெட் ப்ராடக்ட் உங்களுக்கு பிடித்திருக்கிறதா பாருங்கள்தேவதை சருமத்தில் தென்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்


நான்காவது ரகசியம்


டோனிங் முறை


டோனர் பயன்பாடு எதற்கு என்றால் இது உங்கள் சருமத்தை நாள் முழுதும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நீங்கள் செய்யும் சரும பராமரிப்பு பொருள்களை சருமம் நன்கு உள்வாங்கி கொள்ள உதவுகிறது.


டோனரை உங்கள் விரல்களால் எடுத்து சருமத்தில் பொட்டு பொட்டாக தேய்க்கலாம்.தேய்க்கலாம். அல்லது பஞ்சில் டோனரை நனைத்து ஒற்றி எடுக்கலாம். அல்லது ஸ்பிரே செய்து உலர விடலாம். உங்கள் ஸ்டைலை நீங்கள் பின்பற்றுங்கள்.


இந்த பொருளை இங்கே வாங்கலாம்.கார்காலத்தின் மொத்த நிறமே.. பெண்மை எழுதும் கண்மை நிறமே ! கருமையான அடர்த்தியான கூந்தலுக்கான குறிப்புகள் !


ஐந்தாவது சிறப்பு ரகசியம்


சத்து சாறு (எசென்ஸ் )எசென்ஸ் தான் கொரிய பெண்களின் அழகிற்கான தனிப்பட்ட ரகசிய குறிப்பு. இது பொதுவாக டோனர் மற்றும் சீரம் அடங்கிய ஒரு பொருளாகும். இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்து சருமத்தின் இளமையை மீட்டெடுக்கிறது.


இரண்டு முறை க்ளென்ஸ் செய்த பிறகு உங்கள் சருமம் அதிக மாய்ச்சுரைஸரை எதிர்பார்க்கிறது. எசென்ஸ் பயன்படுத்துவதுதான் சருமம் கேட்கும் மாய்ச்சுரைஸரை தரும் வழியாகும். கூடவே முகத்தை பிரகாசமாக வைத்திருக்கவும் PH சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.


நீங்கள் டோன் செய்து முடித்த உடன் எசென்ஸை விரல்களாலோ அல்லது பஞ்சினாலோ தொட்டு முகம் முழுக்க தடவுங்கள். கொஞ்சம் உலர விடுங்கள்.


இந்த பொருளை இங்கே வாங்கலாம்.வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !


ஆறாவது ரகசியம் - சிகிச்சை


உங்கள் சிதைந்த சருமத்திற்கு சிகிச்சை தேவை. உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கின்றது , சமநிறமற்ற சருமம் இருக்கிறது, மங்கு போன்ற புள்ளிகள் இருக்கிறது என்றால் சரும சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.சீரம்கள், கேப்ஸுல்கள், அம்பவுல்கள் பூஸ்டர்ஸ் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தி முகத்தை சரி செய்து கொள்ளுங்கள்.


இந்த சிகிச்சைகள் முகத்தில் தேவையான இடங்களில் தேவையான மாற்றங்களை செய்கிறது. பருக்கள், சரும சுருக்கங்கள், பெரிய சரும துவாரங்கள் மற்றும் களையிழந்து சரும பிரச்னைகளை நீக்குகிறது. இந்த எசென்ஸை நீங்கள் விரல்களால் தொட்டு தேவைப்படும் இடத்தில் தடவி மெலிதாக மசாஜ் செய்யவும். சருமம் சில நாட்களில் அற்புத மாற்றத்தை பெறும்.


இந்த ப்ராடக் இங்கு வாங்கலாம்.டல்லான முகத்தையும் தகதகக்க வைக்க செலவே இல்லாமல் செய்யலாமா "கோல்டன் பேஷியல்" !


ஏழாவது ரகசியம்


உங்கள் முகத்திற்கு நீங்களே செல்லம் கொடுங்கள்


ஷீட்கள் உங்கள் முகத்திற்கு தேவையான ஒளி மற்றும் அழகை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.உங்களை அமைதியான மற்றும் தியான முறையில் மேலும் அழகாக மாற்ற உதவி செய்கிறது. உங்கள் முகத்திற்கு தேவையான பொருள்களை வைத்திருக்கும் சிறந்த ஷீட் மாஸ்க் பயன்படுத்துங்கள்.


ஷீட் மாஸ்குகள் உங்கள் சருமத்தோடு ஒட்டி உறவாடி உங்கள் சருமத்தை செல்லம் போல பராமரிக்கிறது.உங்கள் முகத்தில் இதனை போட்டு கொண்டு 20 நிமிடம் அமைதியாக மெல்லிய ஸ்பா மியூசிக் தவழ விட்டு கண்களை மூடி உடலையும் மனதையும் தளர விடுங்கள்.


இந்த மாஸ்க் உங்களுக்கு சரிவருமா பாருங்கள்


 நார்த் இண்டியன்ஸ் போல கண்ணாடி மேனி வேண்டுமா ! தலைமுடி முதல் கால்நுனி வரை அழகிற்கு உத்தரவாதம் தரும் ஒரே எண்ணெய் இதுதான் !


எட்டாவது ரகசியம்


கண்களை கவனியுங்கள்


இதற்கு அடுத்த படி என்ன என்றால் உங்கள் கண்களுக்கு கீழே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் மிருதுவான சருமம் கொண்ட அந்த இடங்கள் உங்கள் பாதுகாப்பிற்காக எப்போதும் காத்திருக்கின்றன.இதற்கான ஐ க்ரீம்கள் மார்க்கெட்டில் உள்ளன. அதுவே போதுமானது.


இந்த வகை க்ரீம்கள் உங்கள் கண்களை அதிக ப்ரகாசமுடன் வைத்து கொள்ள உதவுகின்றன. கருவளையங்கள் நீங்குகின்றன.இளமையாகவும் புத்துணர்வோடும் உங்களை பாதுகாக்கின்றன. தினமும் இரண்டு முறை இந்த க்ரீமை உபயோகிக்கவும். கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.


இந்த க்ரீமை இங்கு வாங்குங்கள்"கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில்
கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!"


ஒன்பதாவது ரகசியம்


மாய்ச்சுரைஸ்


மாய்ச்சுரைசர் உங்கள் முகத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சரும வகைக்கு ஏற்ற மாய்ச்சுரைசரை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு . அது லோஷன், க்ரீம் அல்லது ஜெல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.


தினமும் மாய்ச்சுரைஸரை பயன்படுத்துங்கள். காலை மற்றும் இரவு இரண்டு நேரமும் பயன்படுத்துங்கள். கொஞ்சம் கைகளில் எடுத்து முகத்தில் மென்மையாக தடவி உலர விடுங்கள்.


இந்த பொருளை இங்கே வாங்கலாம்ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஆப்பிள் பேஷியல் மூலம் அழகை பராமரியுங்கள் !


பத்தாவது ரகசியம்


காக்க காக்க சன்ஸ்க்ரீன் உடன் சருமத்தை காக்க


ஒரு நல்ல எஸ்பிஎப் உள்ள சன்ஸ்க்ரீன் உங்கள் சருமத்திற்கான முழு பாதுகாப்பை பெற்று தரும். சீக்கிரமாக வயதாகும் தோற்றத்தில் இருந்து விடுதலை தரும். வெளியே செல்லும் சமயம் புற ஊதா கதிர்களின் ஊடுருவலை தடுக்கும். சரும புற்று நோய் வராமல் காக்கும்.


சன்ஸ்க்ரீன் தான் நீங்கள் உங்கள் முகத்தில் இறுதியாக போடப்படும் க்ரீம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் வெளியே செல்லுங்கள்.


இந்த சன்ஸ்க்ரீன் உங்களுக்கு ஓகேயா என்று பாருங்கள்முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.