மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!

மினுமினுப்பான முகம் முதல்..  தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!

பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க் முதல் முதுமை சுருக்கங்களை நீக்குவது வரை.. பயோ ஆயில் (bio oil)  பயன்கள் !


பயோ ஆயில் பற்றிய பல்வேறு விளம்பரங்களை நாம் பார்த்திருக்க கூடும். ஆனாலும் நம் மனதில் போய் அவ்வளவு எளிதில் உட்கார முடியாமல் பயோ ஆயில் திணறுகிறது. அதனை பார்க்க முடியாமல் நம்மை எது தடுக்கிறது என்றால் அது பற்றிய முக்கிய விஷயங்கள் நமக்கு தெரியாதது தான்.


ஒரு பொருளின் நன்மை தீமைகளை அறியாமல் நம்மால் எதையும் வாங்கி விட முடியாது இல்லையா. அதனால் இங்கே பயோ ஆயில் பற்றிய நன்மைகள் மற்றும் தீமைகளை உங்களுக்காக கோர்த்திருக்கிறோம். உங்களிடம் கரும்புள்ளிகள் , பிரசவ கோடுகள் , முதுமை சுருக்கங்கள் போன்ற சிக்கல்கள் இருந்தால் இந்த எண்ணையை முயற்சி செய்யுங்கள்.


மேற்கூறிய சிக்கல்கள் மட்டும் இல்லாமல் பொதுவாகவே நமது சருமத்திற்கும் கூந்தலுக்கும் இந்த பயோ எண்ணெய் பயன்பாடு நன்மை தருகிறது.


மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !பயோ ஆயில் என்றால் என்ன


பயோ ஆயில் பலவிதமான நன்மைகளை நமது சருமத்திற்கு தருகிறது. தழும்புகளை மறைய செய்வதில் இருந்து போகாத ஸ்ட்ரெச் மார்க்குகளை போக செய்வதில் இருந்து பல்வேறு வித நன்மைகளை பயோ ஆயில் தருகிறது.


பயோ ஆயில் எப்போதும் உங்களை ஏமாற்றாது. உலக அளவில் காயங்கள் மற்றும் தழும்புகள் நீங்கள் பயோ ஆயில் உபயோகப்படுத்தி பலன் கண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சருமத்திற்கான ஒரு ஆல்ரவுண்டர் என்று பயோ ஆயிலை குறிப்பிடுவதில் தவறே இல்லை.


பயோ ஆயில் பயன்பாடு பாதுகாப்பானதா


பயோ ஆயில் பலவிதமான விட்டமின்கள் மற்றும் எண்ணெய்களை கொண்டுள்ளது.இதில் லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் மற்றும் கெமோமில் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ அளவு அதிகமாக இருக்கிறது. நீங்கள் எந்த ஆங்கில மருந்துக்கு ஒவ்வாமை உள்ளவராக இருந்தாலும் பயோ ஆயில் உங்களுக்கு கை கொடுக்கும்.


இதில் உள்ள அனைத்து பொருட்களும் தர முறையில் பரிசோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளையும் ஐந்து வருடங்கள் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே உங்கள் கைக்கு இந்த ஆயில் வந்து சேர்க்கிறது.


என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா ! செய்து பாருங்கள் கொலாஜென் ஃபேஷியல் !


 பயோ ஆயில் பலன்கள்


இதற்கு முன் நீங்கள் பயோ ஆயில் பயன்படுத்தவில்லை என்றால் அதனை பயன்படுத்த இதுதான் சரியான நேரம். பயோ ஆயில் பலன்கள் பற்றி பார்க்கலாமா.


காயங்களால் ஏற்படும் தழும்புகளை போக்குகிறது


பயோ ஆயில் உடலில் சருமத்தில் எந்த விதமான தழும்புகள் மற்றும் அடையாளங்கள் இருந்தாலும் அதனை அழிக்க வல்லது.எல்லா அடையாளங்களும் மொத்தமாக அழிந்து விடும் என்று நீங்கள் நினைத்தால் அப்படியான ஒரு ப்ராடக்ட் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பயோ ஆயில் உங்கள் தழும்புகளை மங்க வைக்கும். அடர்த்தியாக தெரிந்த தழும்புகள் இப்போது மெல்லியதாக தெரியும். அதுதான் வித்யாசம்.


உங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்முகத்திற்கு பயோ ஆயில்


முகத்திற்கு பயோ ஆயில் பயன்படுத்தினால் என்ன மாற்றங்கள் நிகழும் என்றால் வறண்ட சருமத்தை அற்புதமாக பராமரிப்பதில் பயோ ஆயிலுக்கு நிகர் வேறில்லை. நீர் மற்றும் சோப் பயன்பாடுகளால் சருமம் தினமும் அதன் எண்ணெய்பசையை இழக்கிறது.பயோ ஆயில் பயன்படுத்தும்போது இந்த நிலை மாறுகிறது. உடலில் எங்கெல்லாம் சருமம் வறண்டிருக்கிறதோ அங்கெல்லாம் இதனை பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாமல் முகத்திற்கு கண்ணாடி போன்ற மினுமினுப்பை பயோ ஆயில் தருகிறது.


உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்சுருக்கங்களை நீக்குகிறது


முதுமை வர போவதை முன்கூட்டியே உலகிற்கு அறிவிக்கும் சுருக்கங்களை பயோ ஆயில் நீக்குகிறது. சுருக்கங்கள் சருமத்தில் கொலாஜென் பலவீனத்தால் வருகிறது. பயோ ஆயில் உங்கள் முகத்தை மென்மையாக மிருதுவாக வைக்கிறது. சருமத்தை மேம்படுத்துவதோடு சுருக்கங்களை நீக்கி தருகிறது. உங்கள் ஆன்டி ஏஜிங் க்ரீம்களை விட்டு தள்ளுங்கள். பயோ ஆயில் அதற்கும் மேலாக செயல் புரிகிறது.


தேவதை சருமத்தில் தென்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்ஸ்ட்ரெச் மார்க்கில் இருந்து விடுதலை


சருமம் அதன் இயல்பான வடிவத்தில் இருந்து நீளும் போது சருமம் பலவீனம் ஆகிறது. ஆகவே சாதாரண பாதுகாப்புகள் அதற்கு போதுமானதாக இருக்காது. லேசான கீறல் இருந்தாலும் அது உடலில் அப்படியே பதிகிறது.


இதனால்தான் உங்கள் அடிவயிற்றில் கோடுகள் விழுகின்றன. ஆரம்பத்தில் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த கோடுகள் நாட்கள் ஆக ஆக வெண்மை நிறமாக மாறுகின்றன. இது பெரும்பாலும் வயிறு, மார்பு, தொடை பகுதிகளில் காணப்படும்.பரம்பரை உடல் பருமன் பாதிப்பு கொண்டவர்கள் மற்றும் உடல் இளைக்க முயற்சிப்பவர்களுக்கு இது நேரலாம். இதனை பயோ ஆயில் நீக்கி தருகிறது.


கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!கூந்தலுக்கு பயோ ஆயில்


வறண்ட ஸ்கால்ப் அனைவருக்கும் சிக்கலானது. இந்த பயோ ஆயிலை நீங்கள் தலையில் தடவும்போது அது வறண்ட பிரச்னைகளை தீர்க்கிறது. கூந்தல் உதிர்வதை குறைத்து முடி வளர்வதை ஊக்குவிக்கிறது பயோ ஆயில். ஸ்ப்ளிட் எண்ட்களை தடுக்கிறது. கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


கார்காலத்தின் மொத்த நிறமே.. பெண்மை எழுதும் கண்மை நிறமே ! கருமையான அடர்த்தியான கூந்தலுக்கான குறிப்புகள் !பயோ ஆயிலை எப்படி பயன்படுத்தலாம்.


பயோ ஆயிலை பயன்படுத்துவது வெகு சுலபம். தினமும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தல் நன்மை தரும்,. குறைந்தது தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தினால் இதன் அற்புதமான பலன்களை காண முடியும்.கர்ப்பமாக இருக்கும் போது ஐந்து மாதத்திற்கு பின்னர் பயோ ஆயிலை பயன்படுத்தலாம். இதனால் ஸ்ட்ரெச் மார்க் சதவிகிதம் குறையும். அடிவயிறு, தொடை மற்றும் மார்புகளில் பூசுங்கள்.


வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !பயோ ஆயிலில் மற்ற பயன்பாடுகள்


மாய்ச்சுரைஸர்


பயோ ஆயிலை மாய்ச்சுரைசருக்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தலாம். சில சொட்டுகள் முகத்தில் விட்டால் போதுமானது. மற்ற எண்ணெய்களை போல பயோ ஆயில் முகத்தில் பிசுக்குகளை ஏற்படுத்துவதில்லை. சருமம் உடனே இந்த எண்ணையை உறிஞ்சி விடுகிறது.


மேக்கப் ரிமூவர்


உங்கள் அடர்த்தியான மேக்கப்களை அகற்ற பயோ ஆயில் உதவி செய்கிறது. பஞ்சில் கொஞ்சம் பயோ ஆயில் தொட்டு கொண்டு முகம் முழுவதும் துடைத்து எடுத்தால் சருமம் காயங்கள் இல்லாமல் தப்பிக்கும்.


"கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில் கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!"லிப் பாம்


உங்கள் உதடுகள் மென்மையாக இருக்க தினமும் இருவேளை பயோ ஆயிலை பஞ்சில் தொட்டு உதடுகளில் ஒற்றி எடுக்கலாம்.


பயோ ஆயில் கெடுதல்கள்


இத்தனை சிறப்புமிக்க பயோ ஆயில் மிகுந்த சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு கெடுதலானது. சிவப்பு நிற ரேஷஸ், அரிப்பு எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.


buy this here


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo