கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில் கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!

கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில் கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!

ஒரு அழகான முகத்தை எடுப்பாக காட்டுவது கண்கள்தான். அதே நேரம் சில சமயங்களில் கண்களில் ஏற்படும் கருவளையங்கள் ( Dark circles) முகத்தின் அழகை மறைத்து விடுகிறது.


முகம் அழகாக இருந்தாலும் கருவளையங்கள் இருந்தால் அந்த முகம் பொலிவாகவே இருக்காது. சரியான தூக்கமின்மை கவலைகள் போன்றவற்றால் உங்கள் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படலாம்


எளிய வழியில் நிரந்தரமாக கண் கருவளையத்தை நீக்கி விடலாம். பார்லருக்கு பணம் தர தேவையில்லை. இதனை சரி செய்ய எவ்வளவு முயற்சித்தும் சரியாகத்தவர்கள் இந்த முயற்சியை செய்து பாருங்கள்.


முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!இயற்கை பூச்சு 1இந்த இயற்கையான பூச்சு உங்கள் கண்களின் கருவளையங்களை நீக்கி முகத்தை பொலிவாக்கும். தேவையானவை


வெள்ளரிக்காய் 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு 3 துண்டுகள்
தேன் 1 ஸ்பூன்
கற்றாழை ஜெல் 1 ஸ்பூன்


வெள்ளரிக்காய் மற்றும் உருளை கிழங்கு துண்டுகளை தனித்தனியாக துருவி அதன் சாற்றை மற்றும் எடுத்து ஒன்றாக இணையுங்கள். இதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்கு கலந்து கொள்ளுங்கள். இயற்கை பூச்சு தயாராகி விட்டது.


இதனை கண்களை சுற்றி தடவும் முன்னர் பன்னீரை பஞ்சுகளில் நனைத்து உங்கள் கண்களை சுற்றி துடைத்து ஆற விடுங்கள். அதன் பின்னர் நன்கு கலக்கப்பட்ட இந்த கலவையை உறங்குமுன் கண்களில் தடவி விடுங்கள். மறுநாள் காலை இதனை கழுவுங்கள். ஒரு வாரத்திலேயே நல்ல பலன்கள் கிடைத்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.


மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !இயற்கை பூச்சு 2


கண்களின் கருவளையத்தை விரைவாக போக்கிட க்ரீன் டீயை பயன்படுத்த வேண்டும். இதனை தயாரிக்கும் முறையை பார்க்கலாம். தேவையானவை


பாதாம் எண்ணெய் 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் 1 ஸ்பூன்
க்ரீன் டீ 1 ஸ்பூன்இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து நன்கு ஸ்பூன் மூலம் கிளறி ஒன்றோடு ஒன்றாகும்படி கலக்கவும். இதனை ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள். இந்த க்ரீமை தினமும் இரவில் உங்கள் கண்களை சுற்றி தடவி விடவும். இதன் பின்னர் விரல்களால் வலது புறம் மற்றும் இடது புறம் என மென்மையாக வட்டமாக மசாஜ் செய்யுங்கள்.


பத்தே நாட்களில் உங்கள் கருவளையங்கள் காணாமல் போயிருக்கும். முகம் இப்போது அதிக தெளிவுடன் ஜொலிக்கும்.


என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா ! செய்து பாருங்கள் கொலாஜென் ஃபேஷியல் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்     


உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்                        


---                                             


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                    


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.