ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஆப்பிள் பேஷியல் மூலம் அழகை பராமரியுங்கள் !

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஆப்பிள் பேஷியல் மூலம் அழகை பராமரியுங்கள் !

ஆப்பிள்  ( Apple ) உடல் ஆரோக்கியதிற்கு நன்மை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் ஆப்பிளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். இதில் ஆன்டி- ஏஜிங் உள்ளதால் முகத்தில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு மட்டுமல்லாமல் ஆப்பிள் போன்ற கன்னங்களையும் நாம் பெற முடியும்.


ஆப்பிளை நன்கு மசித்து ஒரு பேஸ்ட் ஆக செய்து முகத்தில் தடவி வந்தால் விரைவில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் குறைந்து முகம் இளமையாக இருக்கும். இது ஒரு சிறந்த கிளன்சர். இதில் இருக்கும் அமிலத்தன்மை முகத்தில் இருக்கும் அதிகமான எண்ணெய் பசையை போக்கி பொலிவாக வைத்திருக்கும்.


டல்லான முகத்தையும் தகதகக்க வைக்க செலவே இல்லாமல் செய்யலாமா "கோல்டன் பேஷியல்" !



கிளன்சரை தயாரிக்க முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் பலன்கள் இதன் முடிவில் நன்றாக தெரியும். முகம் புத்துணர்வோடு ஜொலிக்கும்.


ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்யும் முறை. மாஸ்க் போடுவதன் மூலம் ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக முகத்தில் இறங்கும். மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்ட்,டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் அதோடு 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி விடுங்கள். 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக பிங்கிஷ் க்ளோவுடன் ஒளிரும்.


நார்த் இண்டியன்ஸ் போல கண்ணாடி மேனி வேண்டுமா ! தலைமுடி முதல் கால்நுனி வரை அழகிற்கு உத்தரவாதம் தரும் ஒரே எண்ணெய் இதுதான் !



ஆப்பிளானது பருக்கள் கொப்புளங்கள் கரும்புள்ளிகளை நீக்கும். இதனை செய்ய 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு கால்மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும். பருக்கள் மறைய தொடங்கும்.


ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. அதற்கு குளிக்கும் முன் ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அதன் பின்னர் குளிக்கவும். இதனால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, பொலிவாக இருக்கும்.


"கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில்
கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!"



பின்னர் உங்கள் கணவர் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்று உங்களோடு காதல் செய்வார்!                           


உங்கள் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்                       


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                        


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.