logo
Logo
User
home / Ayurveda
விளக்கெண்ணெய் என்றால் என்ன? நன்மைகள்! (Castor Oil Benefits In Tamil)

விளக்கெண்ணெய் என்றால் என்ன? நன்மைகள்! (Castor Oil Benefits In Tamil)

விளக்கெண்ணெய்(castor Oil) எடுக்கப் பயன்படும் “ஆமணக்கு” எனும் தாவரம், இந்தியாவில் பரவலாக எல்லாப் பாகங்களிலும் எண்ணெய்க்காகப் பயிரிடப்படுகிறது. உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய் நன்மைகள் (Benefits Of Castor Oil In Tamil)

வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது. குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் (castor oil)எடுக்கப்படுகிறது.

Castor-Oil-Benefits-1
இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.

Read About கெமோமில் எண்ணெய்

ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன. வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும்.

Castor-Oil-Benefits-2
இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.

மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய்(castor Oil) அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது.

கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது. விளக்கெண்ணெயுடன்(castor Oil) ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.

குழந்தைகளுக்கு (Children)

விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.

சரும அழகை பாதுகாக்கும் ஆலிவ் ஆயில்

மலச்சிக்கல் (Constipation)

மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணையின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கழிக்க

தோல் (Leather)

விளக்கெண்ணையின் சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இப்பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.


வீக்கம் உடலில் சில பகுதிகளில் தசைகள் முறுக்கிக்கொள்வதால் சுளுக்கு ஏற்படுகிறது. மேலும் உடலின் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டாலும் அந்த இடம் வீங்கிவிடுகிறது. விளக்கெண்ணையின் சில துளிகளை இடம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும்.

தலைமுடி (Hair)

எல்லோருக்குமே தலை முடி நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும் விளக்கெண்ணையின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை தலை உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

கண்கள் (Eyes)

இன்று பெரும்பாலானவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் கண்பார்வைத் அழுத்தம் பாதிக்கிறது.தினமும் இரவில் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும்.

இலவங்கப்பட்டை தூளின் நன்மைகளையும் படிக்கவும்


பாத வெடிப்புகள்

உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படி பட்ட நபர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணையின் சில உறங்க பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Also read everything you need to know about jojoba oil

Also read essential oils which are good for beauty sleep

Castor Oil Uses in Hindi

15 Jan 2019

Read More

read more articles like this

Read More

read more articles like this
good points logo

good points text