logo
ADVERTISEMENT
home / அழகு
கெமோமில் தேநீர் மற்றும் பூக்களின் அழகு சார்ந்த நற்குணங்களும் உபாதைகளும் 

கெமோமில் தேநீர் மற்றும் பூக்களின் அழகு சார்ந்த நற்குணங்களும் உபாதைகளும் 

 

பல வகை தேநீர்கள் இன்று பெரும்பாலான மக்களால் அருந்தப் படுகின்றது. இந்த தேநீர்களை செய்ய, வெவ்வேறு வகையிலான தேயிலைகளும், பூக்களும் பயன் படுத்தப் படுகின்றது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான நற்குணங்கள் உள்ளன. மேலும் அவை அழகு சார்ந்த பலன்களை பெறவும் பெரிதும் பயன் படுத்தப் படுகின்றது. இந்த வகையில், கெமோமில் தேநீர் இன்று பிரபலமாகிக் கொண்டு வருகின்றது.  

இந்த கெமோமில் தேநீர் உடல் ஆரோக்கிய நலன்களுக்காக மட்டுமல்லாது, சரும ஆரோக்கியத்திற்காகவும் பயன் படுத்தப் படுகின்றது. இந்த வகையில் இதன் பயன்பாடு ஏராளம் என்றே கூறலாம். இந்த கெமோமில் தேநீரை அனைவரும் அருந்தலாம். இதனை பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியங்கள்!

கெமோமில் தேநீரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில அறிய தகவல்கள்

Untitled design %2814%29

ADVERTISEMENT

இந்த கெமோமில் தேநீர் பிரபலமாக இதன் நற்குணங்களும், இதில் அடங்கி உள்ள சத்துக்களும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்த தேநீரைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள, இங்கே சில அறிய தகவல்கள், உங்களுக்காக:

  1. கெமோமில் ஒரு மூலிகை. இது அஸ்டெரேசிய தாவர குடும்பத்தை சேர்ந்த டெய்சி மலர்களை போல இருக்கும்
  2. பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் இந்த மூலிகையை இயற்கை மருத்துவத்திற்காக பயன் படுத்தி வருகின்றனர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது
  3. இந்த தேநீரை செய்ய, கெமோமில் மலர்கள் நன்கு காய வைத்து உலர்ந்த பின் பயன் படுத்தப் படுகின்றது. பின் இதனை சுடு தண்ணீரில் அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தேநீர் போன்று செய்து அருந்துகின்றனர்
  4. இதில் காஃபின் இல்லாததால், க்ரீன் டீ அல்லது மற்ற தேநீர் வகைகளை விட அதிகம் மக்களால் விரும்பி தேர்ந்தெடுத்து அருந்தப் படுகின்றது
  5. இதன் இனிமையான சுவை, மக்கள் பெரிதும் விரும்பி பருக ஒரு முக்கிய காரணமாக உள்ளது
  6. இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளதால், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த தேநீருக்கு உள்ளது
  7. எகிப்தியர்கள், கிரேக்க நாட்டவர்கள் மற்றும் ரோமானியர்கள் இந்த தேநீரை அதிகம் விரும்பி அருந்துகின்றனர்
  8. இந்த மூலிகை எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பதே, இது அதிகம் பயன் படுத்தப் படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது
  9. இந்த மூலிகை மற்ற மூலிகைகளோடு சேர்த்து பயன் படுத்தும் போது, மேலும் பல நன்மைகளைத் தருகின்றது

உங்கள் சரும ஆரோகியதிர்க்கு கெமோமில் பூக்கள் மற்றும் தேநீர் (Chamomile Tea For Skin)

4

இந்த கெமோமில் பூக்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயன் படுத்தப் படுகின்றது. இந்த பூக்கள் பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன் படுத்தப் படுகின்றது. இந்த வகையில், நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில அழகு குறித்த பலன்கள் (benefits):

  • வறண்ட, மற்றும் எரிச்சல் தரக்கூடிய சருமம் இருந்தால், அதனை குணப்படுத்த இந்த கெமோமில் பூக்கள் பெரிதும் உதவுகின்றது. இதனை பிற சரும அழகு குறிப்பு பொருட்களோடு சேர்ந்து பயன் படுத்தி வரும் போது உங்கள் சருமம் மிருதுவாகவும் நல்ல பொலிவோடும் இருப்பதை காணலாம். இது உங்கள் சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்
  • சருமத்தில் அதிக எண்ணை கசிதல் இருந்தால், அதனை போக்கி உங்கள் முகம் நல்ல தோற்றம் பெற உதவும். இதனால் உங்கள் முகம் மற்றும் சருமம் இளமையான தோற்றம் பெற உதவும்
  • முகத்தில் வயதாகும் போது ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கரும் வளையங்களை போக்க இந்த பூக்கள் பெரிதும் உதவுகின்றது. இதனால் உங்கள் சருமம் நல்ல பொலிவோடு இருக்கின்றது
  • தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனைகளை போக்கவும் இந்த பூக்கள் பயன் படுத்தப் படுகின்றது. இதனால் தலை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக உள்ளது
  • உங்கள் சருமத்தில் ஏதாவது தழும்புகள், குறிப்பாக நெருப்பு காயம் அல்லது அம்மைப் போட்ட தழும்பு போன்று ஏதாவது இருந்தால் அதனை போக்க இந்த பூக்கள் உதவுகின்றது
  • சருமத்தில் பருக்கள், புண் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால், அதனை இது எளிதாக குணப்படுத்த உதவும்
  • இந்த பூக்கள் உங்கள் சருமத்தை மென்மையாக்கும். இதில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளதால் உங்கள் சருமம் எப்போதும் ஆரோக்கியத்தோடு இருக்க உதவும்

ஏன் சரும பாதுகாப்பிற்கு கெமோமில் தேர்ந்தெடுக்க வேண்டும்?

சரும பாதுகாப்பிற்கு பல மூலிகைகளும், இயற்கை பொருட்களும், நிறுவன தயாரிப்புகளும் இருந்தாலும், கெமோமில் ஒரு நல்ல தேர்வாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் கெமோமில்லை உங்கள் சரும பாதுகபிற்கு தேர்ந்தெடுக்க, இங்கே சில குறிப்பிடத் தக்க காரணங்கள்:

ADVERTISEMENT
  1. கெமோமில்லில் எதிர்ப்பு பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதனால் இது பரு, சொரியாசிஸ், எரிச்சல், தடிப்பு, சிவந்தல் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்
  2. ஈரப்பதம், சுத்தப்படுத்துதல் மற்றும் மிருதுவாக சருமத்தை வைத்துக் கொள்ளும் பண்புகள் இந்த கெமோமில் பூக்களில் உள்ளது. இதை நீங்கள் சருமத்தை ஸ்க்ரப் செய்யவும், முகத்திற்கு பேஸ் பாக் செய்யவும் கண்களுக்கு கீழ் இருக்கும் கரும் வளையங்களை போக்கவும் பயன் படுத்தலாம்
  3.  இது உங்கள் சருமத்திற்கு ஊட்ட சத்தை தரும். இந்த மூலிகையை நீங்கள் எளிதாக வீட்டில் உள்ள பிற பொருட்களோடு பயன் படுத்தி சருமத்தை பாதுகாக்கலாம்
  4. சருமம் மட்டுமல்லாது, தலையில் உள்ள பொடுகு மற்றும் புண் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்ய பயன் படுத்தலாம்
  5. உடம்பில் ஏதாவது பூச்சி கடி, புண், சூரிய கதிர்களால் சரும பாதிப்புகள் மற்றும் பிற தொற்று பிரச்சனைகளை குணப்படுத்த இது உதவுகின்றது
  6. இந்த பூக்கள் சருமத்தில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகின்றது

இது மட்டுமல்லாது மேலும் பல நற்பண்குகள் இந்த கெமோமில் பூக்களில் உள்ளது. இந்த பூக்கள் உலர்ந்து, அல்லது சாறு அல்லது எண்ணை வடிவத்திலும் கிடைகின்றது. இது முகத்திற்கு பயன் படுத்தும் கிரீம் மற்றும் ஆயின்மென்ட் போன்ற பொருட்களிலும் பயன் படுத்தப் படுகின்றது. செடியில் இருந்து எடுக்கப் பட்ட பூக்கள் அப்படியேவோ அல்லது உலர்ந்தோ அதிகம் பயன் படுத்தப் படுகின்றது.

கெமோமில் பேஸ் பாக் செய்வது எப்படி?

8

கெமோமில் பூக்களை வைத்து பேஸ் பாக்

உலர்ந்த கெமோமில் பூக்கள் எளிதில் கடைகளில் கிடைக்கும். இந்த பூக்களை நீங்கள் வீட்டிலேயே பேஸ் பாக் செய்ய பயன் படுத்தலாம். இதை எப்படி செய்வது என்று உங்களுக்காக இங்கே சில எளிய குறிப்புகள். முயற்சி செய்து பாருங்கள்;

தேவையான பொருட்கள்

ADVERTISEMENT
  • உலர்ந்த கெமோமில் 1 தேக்கரண்டி
  • தேன் 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை பழ சாறு 1 தேக்கரண்டி
  • 1 முட்டையின் வெள்ளை கரு

எப்படி செய்வது:

  • கொஞ்சம் சுடு தண்ணீர் எடுத்து அதில் இந்த உலர்ந்த கெமோமில் பூக்களை போடவும்
  • அப்படியே 2௦ நிமிடங்கள் விட்டு விடவும்
  • அதன் பின் பிற பொருட்களை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்
  • இந்த பேஸ் பாக்கை முகத்தில் நன்கு தேய்த்து 2௦ நிமிடங்கள் விட்டு விடவும்
  • அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி விடவும்
  • இதை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால் நல்ல பலனை நீங்கள் பெறலாம்

கெமோமில் மற்றும் புதினா பேஸ் பாக்

இது மற்றுமொரு எளிமையான பேஸ் பாக். இதனை நீங்கள் எளிதாக வீட்டில் செய்து பயன் படுத்தலாம். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

  • உலர்ந்த கெமோமில் பூக்கள் 1 தேக்கரண்டி
  • புதினா இலைகள் 1 தேக்கரண்டி அளவு
  • 1 முட்டையின் வெள்ளைக் கரு

எப்படி செய்வது:

  • புதினா இலைகளை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது நன்கு மசித்துக் கொள்ளவும்
  • இதனுடன் கெமோமில் பூக்களையும் நன்கு பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்
  • இதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்கு கலந்து, பின் முகத்தில் தேய்க்கவும்
  • அப்படியே 2௦ நிமிடங்கள் வரை விட்டு விடவும்
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி விடவும்

கெமோமில் மற்றும் கற்றாளை பேஸ் பாக்

இது மற்றுமொரு எளிமையான பேஸ் பாக். நீங்கள் இதனை வீட்டில் எளிதாக செய்து விடலாம். இதன் பலனை நீங்கள் உடனடியாக உங்கள் முகத்தில் காணலாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

  • உலர்ந்த கெமோமில் பூக்கள் 2 தேக்கரண்டி அளவு
  • கற்றாளை சாறு 1 தேக்கரண்டி
  • தேன் 1 தேக்கரண்டி

எப்படி செய்வது:

  • கெமோமில் பூக்களை ஒரு மிருதுவான பசை / பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் கற்றாளை சாறு மற்றும் தேனை சேர்த்து நன்கு கலக்கவும்
  • இந்த கலவையை உங்கள் முகத்தை சுத்தம் செய்த பின் தேய்க்கவும்
  • சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
  • பின் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி விடவும்

கண்களுக்கு கீழ் இருக்கும் கரும் வளையத்தை போக்க கெமோமில் பேஸ் பாக்

கண்களை சுற்றி இருக்கும் சருமம், பொதுவாக மெல்லியதாகவும் அதிகம் மென்மையானதாகவும் இருக்கும். இதனாலலேயே, முகத்தில் முதலில் பாதிக்கப் படுவது இந்த பகுதியாகத்தான் இருக்கும். மேலும் அப்படி கரும் வளையம் ஏற்படும் போது முக அழகும் சற்று பாதிக்கப் படும். எனினும், இதற்கு கெமோமில் ஒரு நல்ல தீர்வை உங்களுக்குத் தரும்.

எப்படி கண்களுக்குக் கீழ் கரும் வளையத்தை போக்குவது

ADVERTISEMENT
  • கெமோமில் டீ பாக்ஸ். இது கடைகளில் எளிதாக கிடைக்கும். அல்லது நீங்கள் உங்கள் வீட்டிலேயே, ஒரு சிறிய வெள்ளைத் துணியில் இந்த கெமோமில் உலர்ந்த பூக்களை கட்டி டீ பாக் போல பயன் படுத்தலாம்
  • இந்த டீ பாகை 5 நிமிடம் சுடு தண்ணீரில் முக்கி வைக்கவும்
  • பின் அதனை வெளியே எடுத்து ஆற விடவும்
  • அதன் பின் உங்கள் கண்கள் மீது, அதாவது கரும் வளையத்தை சுற்றி 5 நிமிடம் வைத்து விடவும்
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
  • இப்படி செய்வதால், உங்கள் கண்களை சுற்றி வீக்கம் இருந்தாலும் அது குறைந்து விடும்
  • இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் 

முகம் வெண்மையாக கெமோமில்

6

அனைத்து பெண்களும், தங்கள் முகம் நல்ல வெண்மை நிறம் பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக பல முயற்சிகளை செய்வார்கள். எனினும் அவர்கள் எடுக்கும் அணைத்து முயற்சிகளும் பலன் தரும் என்று கூற முடியாது. இந்த கெமோமில்லை பயன் படுத்தி நீங்கள் உங்கள் முகத்திற்கு நல்ல வெண்மை நிறத்தை பெறலாம்.

எப்படி நல்ல வெண்மை நிறத்தை பெறுவது என்று தெரிந்து கொள்ள, உங்களுக்காக இங்கே சில எளிய குறிப்புகள்

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடவும்
  • அதில் 2 தேக்கரண்டி உலர்ந்த கெமோமில் பூக்களை சேர்த்து, மிதமான சூட்டில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்
  • பின் இந்த சாரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  • இதில் தேன் மற்றும் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்கு கிளறவும்
  • இதனை நீங்கள் குளிர் சாதன பெட்டியில் வைத்து நான்கு நாட்களுக்கு பயன் படுத்தலாம்
  • இந்த சாரை முகத்தில் தடவி, 2௦ நிமிடம் விட்டு விடவும்
  • அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் முகம் நல்ல பல பலப்பாகவும் வெண்மை நிறமாகவும் மாறுவதை காணலாம்.

ADVERTISEMENT

இந்த அழகு குறிப்புக்கள் மட்டும் அல்லாது, மேலும் பல சரும பராமரிப்பு குறிப்புகளும் உள்ளது. அவை நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த அழகு குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உங்கள் முகத்தில் நல்ல பொலிவும், புத்துணர்ச்சியும் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.

கெமோமில் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உபாதைகள் என்ன?

கெமோமில் மலர்களை சருமத்திற்கு பயன் படுத்தும் போது பல நன்மைகள் ஏற்பட்டாலும், இதனை தவறாகவோ அல்லது அதிகமான அளவிலோ பயன் படுத்தும் போது பல உபாதைகளையும் ஏற்படுத்துக் கூடும்.

  • இந்த மலர்களில் ஃபிளாவனாய்டு என்ற இரசாயனம் இருப்பதால், சில உபாதைகளை சிலருக்கு ஏற்படுத்தக் கூடும்
  • இந்த பூக்களை அதிக அளவு சருமத்திற்கு பயன் படுத்தும் போது, குறிப்பாக முகத்தில் பயன் படுத்தும் போது எரிச்சல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்
  • அதிக அளவு பயன் படுத்தும் போது இந்த பூக்கள் அரிப்பு, வறண்ட சருமம் மற்றும் தடிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்
  • நீங்கள் ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த தேநீரை பயன் படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது. ஏனென்றால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் இந்த பூக்களின் குணங்களோடு ஒத்து போகவில்லை என்றாலம் பிற உபாதைகளை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்

கெமோமில் தேநீரை நீங்கள் அருந்தினாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இது உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனால் மேலும் உங்கள் அழகும் தோற்றமும் மெருகு பெரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.  

மேலும் படிக்க – முகத்தை பளபளப்பாக்கும் அதிசய நன்மைகள் தரும் அவகேடோ! 

ADVERTISEMENT

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,ஷடர்ஸ்டோக் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

31 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT