ஆலிவ் ஆயிலை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது தான் இந்த ஆலிவ் ஆயில். நம்முடைய உடல்நலத்திற்கும் நம்முடைய சரும பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக இருக்கும்(olive oil benefits in tamil). இதில் உள்ள வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்முடைய அழகை பாதுகாக்கவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இந்த ஆலிவ் ஆயில் மிகவும் உதவுகிறது. நாம் இதற்க்கு கடைகளில் விற்கும் வேதி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தற்காலிக நிவாரணம் தருமே தவிர நிரந்தர நிவாரணம் தராது.மேலும் இதனால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும்.எனவே நாம் இயற்கை முறை மருத்துவத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். அத்தகைய இயற்கை முறையில் நோய்களை குணமாக்கும் சக்தி இந்த ஆலிவ் ஆயிலிற்கு உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதற்க்கு காரணம் நம்முடைய உணவு பழக்கம் மாறியதால் தான். அவசரமான உலகில் நாம் கடைகளை விற்கும் பொருட்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையற்ற உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன(olive oil benefits in tamil). எனவே நாம் இதை தவிர்க்க வேண்டும். ஆலிவ் ஆயிலை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் நமக்கு உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராகி நமக்கு சர்க்கரை நோய் வராமல் பார்த்து கொள்ளும். மேலும் இது டயாப்டிக்ஸ் தடுக்கும் நிவாரணமாகவும் உள்ளது.
ஆலிவ் ஆயிலில் சமைக்கும் உணவை எடுத்துக்கொள்ளும் போது கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் இது பார்த்துக்கொள்கின்றது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு செல்களை அகற்றி நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகின்றது. கெட்ட கொழுப்பு உடலில் இருந்து உடனுக்குடன் அகற்றப்படுவதால் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் ஆலிவ் ஆயில் தடுக்கின்றது.
எள் விதையின் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்(Sesame Seeds)
தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள ஒலெகெந்தஸ் எனும் ஊட்டத்தாது நம்முடைய உடலில் உள்ள திசுக்களின் அழற்சியை தடுக்கிறது. மேலு ம் இதில் அளவற்ற வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடென்ட்களும் உள்ளது.எனவே பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் சரும கேன்சர், உடல்குழாய் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
ஆலிவ் ஆயில் இயற்கையாகவே கொழுப்பை கறைக்கும் சக்தி இருக்கின்றது. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தந்து தருந்த ஊட்டச்சத்தை அழிக்கிறது. கெட்ட கொழுப்பை கறைத்து நல்ல கொழுப்பை உடலில் தக்க வைத்து உடலுக்கு தேவையான ஆற்றலை தந்து உதவுகின்றது.
நம்முடைய கல்லீரலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு நாம் எலுமிச்சை சாறுடன் இந்த ஆலிவ் ஆயிலை கலந்து உபயோகிப்பதால் நமக்கு இந்த பிரச்சனை நீங்கும். மேலும் நம்முடைய கல்லீரலையும் வலுவாக்கும். தினமும் இந்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் ஆகிஜனேற்ற தடுப்பாக செயல்பட்டு நம்முடைய கல்லீரலை பாதுகாக்கிறது. மேலும் இது கல்லீரல் சுத்திகரிப்பனாகவும் செயல்படுகிறது.
ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள நம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். இதில் உள்ள நாள் கொழுப்புக்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவும். எனவே இதனை நாம் தினமும் எடுத்து கொள்வது நல்லது.
ஆலிவ் ஆயில் நம்முடைய மூளையில் அல்சைமர் எனும் ஞாபக மறதியை குணமாக்க பெரிதும் உதவுகிறது. இது நம்முடைய மூளையில் ஏற்படும் அபரிமித அமிலாய்டு புரத படலத்தை தடுக்கிறது. இதனால் நமக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் தடுக்க படுகிறது. இதற்க்கு காரணம் இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள ஒகெலானாய்டு தான. எனவே தினமும் இதனை எடுத்து கொள்வது நல்லது.
நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்க இந்த ஆலிவ் ஆயில் உதவுகிறது. இதில் உள்ள ஒலெயூரோபின் சத்து நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது. எனவே தினமும் இந்த ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்வது நல்லது.
தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நம்முடைய இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். நமக்கு நோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.
தினமும் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்வதால் எடை குறைக்கப்படுகின்றது என ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலிவ் ஆயிலை சுடு தண்ணீரில் கலந்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை பருகினால் உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
இயற்கையாகவே ஆலிவ் ஆயிலிற்கு செரிமானத்தை அதிகரிக்கும் திறன் உள்ளது. செரிமான மண்டலத்தை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ப்ரெஷ்ஷாகவும் வைத்திருக்கும் திறன் ஆலிவ் ஆயிலிறகு உள்ளது. இதனால் செரிமானப் பிரச்சணை இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஆலிவ் ஆயில் ஒரு மிகச்சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படுகின்றது. நேயை எதிர்த்து போராடும் சக்தி ஆலிவ் ஆயிலிற்கு இயற்கையாகவே உள்ளது. இதனால் நோயை உண்டாக்கும் கிருமிகளை ஆரம்பத்திலேயே எதர்த்து போராடி அழிக்கக்கூடிய சக்தி இயற்கையாகவே ஆலிவ் ஆயிலிற்கு உள்ளது.
ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்க உதவுகின்றது.
சிலருக்கு வரட்சி காரணமாக சருமத்தில் வெடிப்பு ஏற்படும். இது முற்றிலும் சரும அழகை பாதிக்கும். இப்படியான வெடிப்பு உள்ளர்கள் ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால் போதும். வெடிப்புகள் மறைந்து நல்ல பொலிவான தோற்றத்தை பெறலாம்.
கெவியான மேக்கப் போடும் தருணத்தில் மேக்கப்பை ரிமுவ் செய்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். பார்ட்டி, வெட்டிங் மற்றும் ரிசப்ஸன் போன்ற இடங்களுக்கு செல்லும் போது கெவியான மேக்கப் போட வேண்டி இருக்கும். அந்த மாதிரியான தருணத்தில் வீட்டிற்கு வந்ததும் ஆலிவ் ஆயில் கொண்டு சிறிது மசாஜ் செய்து முகத்தை சுத்தம் செய்யலாம். மேக்கப்பால் ஏற்படும் பாதிப்பை ஆலிவ் ஆயில் தடுக்கின்றது.
பொதுவாக மசாஜ் செய்தால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முக தோற்றத்தை பெறலாம்.
முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து, அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.
சரும வரட்சியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் சருமம் வரட்சியாவது தடுக்கப்படும். வைட்டமின் ஈ, சரும செல்கள் பாதிப்பை தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.
ஆலிவ் ஆயில் கொண்டு முடிகள் மற்றும் தலைப்பகுதியில் மசாஜ் செய்வதால், முடி வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தடிமனான முடி வளரவும், முடி வளர்ச்சியை இரட்டிப்பாக்கவும் உதவுகிறது. ஆலிவ் ஆயிலை மென்மையாக தலையில் தடவ வேண்டும். இதன்மூலம் தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும்.
மேலும் பாதாம் எண்ணெய், கற்பூரம், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து தடவலாம். அதேசமயம் முடி கருகருவென்று இருக்கவும் ஆலிவ் ஆயில் உதவுகிறது
பொடுகு தான் முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தலை அதிகமாக தனது ஈரபதத்தை இழக்கும் போது தான் இந்த பொடுகு தொல்லை அதிகம் ஏற்படுகின்றது. கூந்தலின் ஈரப்பதத்தை அதிகரிக்க ஆலிவ் ஆயில் பெரிதும் உதவுகின்றது, இதில் நலம் தரும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் இருப்பதால், தலைப்பகுதிக்கு மிகவும் சிறந்தது.
ஆரோக்கியமான முடி என்பது ஆரோக்கியமான தலைப்பகுதியைக் குறிக்கிறது. முடி உதிர்விற்கு காரணம், தலைப்பகுதிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததே ஆகும். ஆலிவ் ஆயிலில் இயற்கையாகவே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் முடி வளர்ச்சியை அதிகரித்து கூந்தலை மென்மையாக்குகின்றது.
கூந்தலுக்கு ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் கூந்தல் வலுவானதாகவும், அடர்த்தியாவதுடன் கூந்தல் செழுமையாகவும் காட்சி தரும். ஆலிவ் ஆயில் உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனராகவும், பொடுகுத் தொல்லை தீரவும் உதவும்.
1. தேவையான அளவு
முதலில் உங்கள் கூந்தலின் அடர்த்தி பொருத்து தேவையான அளவில் ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொள்ளவும். குறைந்தது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது முடி மிகவும் அடர்த்தியாக அல்லது நீண்ட கூந்தலாக இருப்பின் 1/4 கப் எடுத்துக்கொள்ளலாம். தேவைக்கு அதிகமாக எடுத்தால் ஆலிவ் ஆயில் வீணாகத்தான் போகுமே தவிர அதிக பயன் தராது.
2. மசாஜ்
எடுத்துக்கொண்ட அளவை உள்ளங்கையில் நன்றாக ஊற்றி தலை முடியில் வேரில் படும்படியாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது கை மற்றும் நகங்களை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்தவும். இல்லையெனில் அதன் அழுக்குகள் தலையில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். 10 முதல் 15 நிமிடம் நல்ல மிருதுவான மசாஜ் செய்யவும். உங்களுக்கு தெரியும் போதும் என்கிற அளவு வந்தவுடன் மசாஜ் செய்வதை நிறுத்தி கொஞ்ச நேரம் ரிலாக்ஷாக அமரவும். இந்த மசாஜ் தலையில் உள்ள இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. தலைக்கு நல்ல நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
3. கூந்தலை அலசவும்
மசாஜ் செய்து முடித்த பிறது கூந்தலை அலசுவதற்கு முன் பெரிய பல் கொண்ட சீப்பாள் நன்கு சிக்கு இல்லாமல் சீவிக் கொள்ளவும். இது உங்கள் கூந்தல் உடைவதை தடுக்க உதவும். முடியை ஷாம்பு அல்லது வளமையாக நீங்கள் என்ன பயன்படுத்துவீர்களோ அதை கொண்டு முடியை நன்கு அலசவும். இதனால் கூந்தல் மென்மை அடைவதை உணர முடியும். கூந்தலை நன்கு அலசிய பிறகு அதன் மாற்றத்தை நீங்களே பார்க்கலாம். முடி நல்ல பொலிவுடன் மிகவும் அழகாக பலபலப்புடன் இருப்பதை உணருவீர்கள்.
குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?
சிலருக்கு அலிவ் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் அலர்ஜி, அரிப்பு மற்றும் சருமத்தில் ஓவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சணை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தலாம்.
சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதால் அல்லது பிற மருத்துவ சிகிச்சை எடுப்பவர்கள் பயன்படுத்தினாலும் சருமத்தில் தடிப்பு, அரிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆலிவ் ஆயில் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றது இல்லை என சில ஆய்வில் முடிவுகள் தெரிவிக்கின்றன. காரணம் அதிகமான ஊட்டச்சத்துக்கள் ஆலிவ் ஆயிலில் இருப்பதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அளவுக்கு அதிகமான வரண்ட சருமம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்ன பெயரில் பயன்படுத்தலாம். மிக குளிர் பிரதேசத்தில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
கொலஸ்ட்டிராலை குறைக்கும் திறன் ஆலிவ் ஆயிலில் இருப்பதால் இது இரத்தத்தின் அளவை குறைத்து குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட காரணமாகின்றது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் குறிப்பாக குறைந்த அழுத்த சர்க்கரை நோய் இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆலிவ் ஆயிலை தொடர்ந்த பயன்படுத்தலாம்.
வெறும் வயிற்றில் அதி காலையில் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சணை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெறும் வயிற்றி ஆலிவ் ஆயில் எடுக்கும் போது வயிற்றை சுத்தம் செய்யும் திறன் ஆலிவ் ஆயிலில் இருப்பதால் வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆலிவ் ஆயில் பாட்டிலை திறந்த பிறகு இரண்டு வருடங்கள் வரை பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனினும் ஆயிலில் தண்ணீர் சத்து அல்லது கெட்டியாக இருப்பின் பயன்படுத்த வேண்டாம்.
பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. பயன்படுத்தும் முன் நன்கு பரிசோதித்து பயன்படுத்துவது ஏற்றது.
நல்ல பிராண்டுகள் கொண்ட ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். விலை குறைந்த மலிவான ஆயிலை பயன்படுத்த வேண்டாம். ஆலிவ் ஆயிலின் நிறம் மற்றும் ஆயிலில் உள்ளே இருப்பது ஆலிவ் தானா என்பதை பரிசோதித்து பயன்படுத்தலாம்.
அதிக அவசியம் இல்லை. சாதாரண சூழ்நிலைக்கு ஏற்றது. மிக வெப்பமான பிரதேசத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் அவ்வாறு பயன்படுத்தலாம்.
கட்டாயம் மலச்சிக்கலை ஆலிவ் ஆயில் சரிசெய்கின்றது. மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் ஆலிவ் ஆயிலை காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் போதும். நல்ல தீர்வு கிடைக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறுபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும்.
அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்