உங்கள் மனதை அமைதியாக்கி நிம்மதியாகத் தூங்க வைக்கும் இயற்கை எண்ணெய் வகைகள்

உங்கள் மனதை அமைதியாக்கி நிம்மதியாகத் தூங்க வைக்கும் இயற்கை எண்ணெய் வகைகள்

ஒரு நல்ல தூக்கத்தை தன்வசமாக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். அது உங்களை நல்ல மனநிலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் நீண்ட நாளுக்குப் பின்பான சோர்வையும் போக்குகிறது.


உங்கள் தூக்கத்தை பல்வேறு விஷயங்கள் கெடுக்க நேரிடலாம். வெறுமனே இரவு முழுதும் விழித்திருப்பது முதல் உங்கள் வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்கள் போன்றவை காரணமாக நீங்கள் சரிவர தூங்காமல் இருக்கலாம்.


இந்த அற்புத இயற்கை எண்ணெய் (Essential Oil) வகைகள் உங்கள் தூக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்


இயற்கை எண்ணெய் வகைகள் என்றால் என்ன


இயற்கை எண்ணெய் எவ்வாறு ஒருவருக்கு நல்ல தூக்கத்தை வழங்குகிறது?


இந்த இயற்கை எண்ணெய்கள் நம்மை ஓய்வுக்கு தயாராக்கி நமது தூக்கத்தை மேம்பட செய்கிறது


இயற்கை எண்ணெய் வகைகள் என்றால் என்ன? (What Are Essential Oils?)


இயற்கை எண்ணெய் (Essential Oils)வகைகள் என்பது இயற்கையான தாவரத்தின் மூலம் வடிகட்டி எடுக்கப்படுகிறது. தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட போதிலும் அந்த தாவரத்தின் அசல் வாசனையை இந்த எண்ணெய் தன்னிடம் பத்திரமாக வைத்திருக்கும். குறிப்பிட்ட தாவரத்தின் தனித்துவமான வாசனையை அதன் சாரத்தை இந்த எண்ணெய் தன்னிடம் கொண்டிருக்கும்.


வடிகட்டுதல் என்பது ஒரு மூலிகை எண்ணெயை தாவரத்தில் இருந்து பிரிப்பதற்கு முக்கிய படியாக இருக்கிறது. இருந்த போதிலும் செக்கில் பிழிந்து எடுப்பதன் மூலமும் இவ்வகை எண்ணெயை நாம் பிரித்தெடுக்கலாம். ஒருமுறை தாவரத்தில் இருந்து மூலிகையை சாறு பிழிந்து எடுத்தவுடன் அந்த சாற்றோடு மற்றொரு எண்ணெய் வகையை சேர்ப்பதன் மூலம் மூலிகை சாறு என்பது மூலிகை எண்ணெயாக மாறுகிறது.


இயற்கை முறையில் எடுக்கப்படுவதுதான் இயற்கை மூலிகை எண்ணையாக இருக்குமே தவிர ரசாயனம் பயன்படுத்தி செய்யப்படும் எந்த ஒரு எண்ணையும் இயற்கை எண்ணெய் (essential oils) ஆகிவிட முடியாது.


அரோமாதெரபி எனும் இவ்வகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இதுவும் ஒரு மருத்துவ முறையே. இந்த வகை தெரபியில் வாசனையை நுகர்வதன் மூலமும் அல்லது அந்த குறிப்பிட்ட எண்ணையை உடலில் படும்படி தேய்ப்பதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இயற்கை எண்ணெய் எவ்வாறு ஒருவருக்கு நல்ல தூக்கத்தை வழங்குகிறது? (How Does Essential Oils Provide Good Sleep?)


இந்த வகை எண்ணெய்கள் நம் மன அழுத்தம், மனா சோர்வு உணர்வுகள் மற்றும் மனபதட்டம் ஆகியவற்றை நீக்குகிறது. நமது மூளையில் உள்ள சில நரம்பு மண்டலங்களை தூண்டி விடுவதன் மூலம் இந்த செயலை செய்கிறது.மூளையில் இந்த இடம்தான் நமது செயல்களை கட்டுப்படுத்துதல், அறிவாற்றலை மேம்படுத்துதல், நமது உணர்வுகள், நடத்தை மற்றும் நுகரும் தன்மை ஆகியவற்றை கவனித்துக் கொள்கிறது.


மூளையில் உள்ள இந்த முக்கியமான பாகம்தான் நாம் அனிச்சையாக செய்யும் சில செயல்கள் நடக்க உதவி செய்கிறது. உதாரணம் மூச்சு விடுதல், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை.


இந்த இயற்கை எண்ணெய்கள் நம்மை ஓய்வுக்கு தயாராக்கி நமது தூக்கத்தை மேம்பட செய்கிறது (7 Essential Oils For Good And Sound Sleep)


90க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இந்த வகையான இயற்கை மூலிகை எண்ணெய்கள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவைதான். அதில் மிக அத்தியாவசியமான 7 மூலிகை எண்ணெய்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பார்க்கலாம்.


1. லாவண்டர் எண்ணெய் (Lavender Oil)


Lavender-Oil-essential-oils-for-sleep
தேவையான பொருட்கள்


3 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய்.


1 டிப்யூசர் (diffuser)


தண்ணீர்.ஒரு டிப்யூசரை நீர் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன் பின் அதில் 3 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய்யை விட(Lavender Oil) வேண்டும்.
அதன் பின் அதனை சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.
பின் அந்த வாசனையை நுகர வேண்டும்.


இதனோடு சில சொட்டுகள் லாவண்டர் எண்ணையை உங்கள் தலையணையில் விடுவதன் மூலம் இன்னும் அதிக பலன் பெறலாம்.ஏன் லாவண்டர் எண்ணெய்? (Why Lavender Oil?)


இந்த எண்ணெய் நமது மன சோர்வையும் பதட்டத்தையும் தலைகீழாக மாற்றி நம் மனநிலையை சமப்படுத்துகிறது.
மேலும் நமது தூக்கத்தை தூண்டி அறிவாற்றலையும் மேம்படுத்த இது உதவுகிறது.2. பிராங்கின்சென்ஸ் எண்ணெய் (Frankincense Oil)


essential-oils-for-sleep-2


தேவையான பொருட்கள்


3 சொட்டுகள்பிராங்கின்சென்ஸ் எண்ணெய்.


1 டிப்யூசர் (diffuser)


தண்ணீர்.ஒரு டிப்யூசரை நீர் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன் பின் அதில் 3 சொட்டுகள் பிராங்கின்சென்ஸ் எண்ணெய்யை விட வேண்டும்.
அதன் பின் அதனை சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.
பின் அந்த வாசனையை நுகர வேண்டும்.


ஏன் பிராங்கின்சென்ஸ் எண்ணெய்? (Why Frankincense Oil)


இந்த எண்ணெய்யில் பல்வேறு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. அதில் முதலாவது சோர்வு. இந்த எண்ணையை நுகர்வதன் மூலம் நமது சோர்வுகள் நீங்கி புத்துணர்வடைவோம். இதன் மூலம் உங்கள் பதட்டம் சோர்வு போன்றவை நீங்கி உடல் தளர்வடைந்து நிம்மதியாக உறங்குவீர்கள்.


3. செடார்வுட் எண்ணெய் (Cedarwood Oil)


essential-oils-for-sleep-3


தேவையான பொருட்கள்


3 சொட்டுகள்செடார்வுட் எண்ணெய்.


1 டிப்யூசர் (diffuser)


தண்ணீர்.ஒரு டிப்யூசரை நீர் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன் பின் அதில் 3 சொட்டுகள் செடார்வுட் எண்ணெய்யை விட வேண்டும்.
அதன் பின் அதனை சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.
பின் அந்த வாசனையை நுகர வேண்டும்.


ஏன் செடார்வுட் எண்ணெய்? (Why Cedarwood Oil)


இதில் உள்ள செட்ரால் எனும் மூல பொருள் நம்மை அறியாமல் தூங்க வைத்துவிடும். தூங்க போகும் முன் இதனை நுகர்ந்து விட்டு படுத்தால் அன்றைய தூக்கம் அற்புதமாக இருக்கும்.


 4. லாங் லாங் எண்ணெய் (Ylang Ylang Oil)


கார்காலத்தின் மொத்த நிறமே.. பெண்மை எழுதும் கண்மை நிறமே ! கருமையான அடர்த்தியான கூந்தலுக்கான குறிப்புகள் !


essential-oils-for-sleep-4


தேவையான பொருட்கள்


3 சொட்டுகள் லாங் லாங் எண்ணெய்.


1 டிப்யூசர் (diffuser)


தண்ணீர்.ஒரு டிப்யூசரை நீர் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன் பின் அதில் 3 சொட்டுகள் லாங் லாங் எண்ணெய்யை விட வேண்டும்.
அதன் பின் அதனை சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.
பின் அந்த வாசனையை நுகர வேண்டும்.


இதனோடு இந்த எண்ணெயை உங்கள் தலையணையில் இரண்டு சொட்டுகள் விடலாம். அல்லது உங்கள் மணிக்கட்டில் தேய்த்துக் கொள்ளலாம். மென்மையான சருமம் கொண்டவர்கள் இதனோடு தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணையை சேர்த்து உடலில் தடவலாம்.


ஏன் லாங் லாங் எண்ணெய்? (Why Ylang Ylang Oil)


லாங் லாங் எண்ணெய் மன பதட்டத்தை நீக்கி நல்ல அமைதியான மனநிலைக்கு நம்மை கொண்டு செல்கிறது. பொதுவாக இந்த எண்ணெயை நமது சருமத்தில் ஒரு பேட்ச் போல ஒட்டிவிடுவார்கள். அதன் மூலக் கூறுகளை நமது தோல் உறிஞ்சுவதால் மூலம் பல்வேறு நோய்கள் குணமாவதாக கூறப்படுகிறது.


5. ரோமன் சாமோமின் எண்ணெய் (Roman Chamomile Oil)


கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!


essential-oils-for-sleep-5


தேவையான பொருட்கள்


3 சொட்டுகள் ரோமன் சாமோமின் எண்ணெய்.


1 டிப்யூசர் (diffuser)


தண்ணீர்.ஒரு டிப்யூசரை நீர் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன் பின் அதில் 3 சொட்டுகள் ரோமன் சாமோமின் எண்ணெய்யை (Roman Chamomile Oil) விட வேண்டும்.
அதன் பின் அதனை சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.
பின் அந்த வாசனையை நுகர வேண்டும்.


இதனோடு உங்கள் தலையணையில் மேலும் 3 சொட்டுக்கள் விட்டு இரவு முழுதும் இதன் வாசத்தை நுகரலாம்.
அல்லது குளிக்கும் நீரில் 15 சொட்டுகள் விட்டு ஊற வைத்து குளிக்கலாம்.


ஏன் ரோமன் சாமோமின் எண்ணெய் ? (Roman Chamomile Oil)


இந்த எண்ணெய் உங்கள் உறக்கத்தை தூண்டி விடும் மூலப் பொருட்களை கொண்டது. ஆகவே இதனை உபயோகிப்பதன் மூலம் ஆழமான தூக்கம் கிடைக்கும்.


6. மல்லிகை எண்ணெய் (Jasmine Oil)


கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய சில அழகான உடைகள் மற்றும் அதற்கான கடைகள்


essential-oils-for-sleep-6


தேவையான பொருட்கள்


3 சொட்டுகள் மல்லிகை எண்ணெய்.
உடன் இணைத்துக் கொள்ள இரண்டு டீஸ்பூன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்.


இந்த எண்ணெயை கலந்து உடலில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் உடலில் ஊறிய பிறகு ஷவரில் குளிக்கவும்.


ஏன் மல்லிகை எண்ணெய் (Why Jasmine Oi)


மல்லிகை எண்ணை நம் மனதை லேசானதாக்கி ஒரு நல்ல தூக்கத்திற்கு நம்மை தயார் செய்கிறது. மேலும் மன பதட்டம் மற்றும் சோர்வு ஆகியவற்றை நீக்குகிறது.


 7. பெர்கமாட் எண்ணெய் (Bergamot Oil)தேவையான பொருட்கள்


3 சொட்டுகள் பெர்கமாட் எண்ணெய்.


1 டிப்யூசர் (diffuser)


தண்ணீர்.ஒரு டிப்யூசரை நீர் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன் பின் அதில் 3 சொட்டுகள் பெர்கமாட் எண்ணெயை விட வேண்டும்.
அதன் பின் அதனை சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.
பின் அந்த வாசனையை நுகர வேண்டும்.


ஏன் பெர்கமாட் எண்ணெய்? (Why Bergamot Oil)


இந்த எண்ணெய் உங்கள் பதட்டம் மற்றும படபடப்பை போக்கி உங்களை நிதானமாக வைக்கிறது. மேலும் உங்கள் உடலை தளர்த்தி உங்களை நிம்மதியான உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது.


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


 Also read benefits of jojoba oil for skin and hair.