logo
ADVERTISEMENT
home / அழகு
அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..

அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..

இளமையை அப்படியே தக்க வைக்க மிக சிறந்த வழிகளில் ஒன்றுதான் ஆயில் மசாஜ்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள் நடிகர்கள் நடிகைகள் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்து தங்கள் இளமையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய பணி அழுத்தங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் என்று. அது நிஜம்தான்.            

இப்போது ஆயில் மசாஜ் (oil massage) என்றால் கேரளா செல்ல வேண்டாம். அதற்கென கேரளாவே தமிழகம் வந்திருக்கிறது. அதாவது பல கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தமிழகம் எங்கும் கிளை பரப்பி உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஸ்பா சிகிச்சையிலும் எண்ணெய் மசாஜ்கள் தரப்படுகின்றன. நிறைய அழகு நிலையங்கள் தற்போது இந்த ஆயில் மசாஜ்களில் ஈடுபட்டுள்ளன.                    

தரமான மற்றும் சரியான மசாஜ் மையத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்யம் மற்றும் அழகு பாதுகாக்கப்படும். சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும்.                            

ADVERTISEMENT

youtube

திராட்சை எண்ணெய் மசாஜ்                     

வைட்டமின் இ நிறைய இருக்கும் திராட்சை முதுமையை தடுக்கும் முதல் மருந்து. இதனால் செய்யப்படும் மசாஜ்கள் உடல் தளர்ந்து போவதில் இருந்து தடுக்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ள திராட்சை எண்ணெய் சருமத்தில் உள்ள தளர்ச்சியை நீக்குகிறது. மேலும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் நீக்குகிறது. இளமையாக இருக்க விரும்பினால் இந்த எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.

அவகேடோ எண்ணெய்                    

ADVERTISEMENT

நாம் இளமையோடு இருக்க அவகேடோ எண்ணெய் பெரிதும் உதவுகிறது. நம் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்கிறது. மேலும் சுருக்கங்கள் வராமல் காக்கிறது. இதில் உள்ள அதிக வைட்டமின் இ சருமத்தை பலவேறு நோய்களில் இருந்து காக்கிறது.

youtube

கோதுமை எண்ணெய்

ADVERTISEMENT

உடலை இளமையாக வைக்க கோதுமை புல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதை போலவே கோதுமையில் இருந்து உருவாகும் எண்ணெய் நம்மை இளமை பொங்க பாதுகாக்கிறது. சருமத்தில் உள்ள பிரீ ரேடிகள் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது கோதுமை எண்ணெய். நமது செல்களை மீளுருவாக்கம் (Regeneration) செய்கிறது.

youtube

பாதாம் எண்ணெய்                        

ADVERTISEMENT

இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கே சருமத்தை முதுமையில் இருந்து மீட்கிறது. சுருக்கங்களை குறைக்கிறது. சீக்கிரமே வயதாகும் (anti ageing ) தோற்றத்தை உருவாகும் செல் சிதைவுகளில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.

ஆர்கன் எண்ணெய்                   

ஆர்கன் எண்ணெய் சருமத்தை சீக்கிரமே ஊடுருவி செல்லும்.சருமத்தை ஈரப்பதத்தோடு பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இ பிரீ ரேடிகள் சிதைவில் இருந்து செல்களை காப்பாற்றுகிறது. மேலும் சருமத்தை தளர்வாகாமல் பார்த்து கொள்கிறது. முதுமை சுருக்கங்களில் உடலை காக்கிறது.

ADVERTISEMENT

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

23 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT