logo
ADVERTISEMENT
home / அழகு
உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய விருப்பமா?.. மிளிர வைக்கும் கப்பிங் தெரபி!

உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய விருப்பமா?.. மிளிர வைக்கும் கப்பிங் தெரபி!

கப்பிங் தெரபி என்பது கப்பை வைத்து செய்யப்படும் மூன்றாயிரம் ஆண்டுகள் பண்டைய கால சிகிச்சை முறையாகும். கப்பிங் தெரபி பண்டைய கிரேக்கர்களுக்கு எகிப்திய மக்கள் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் மற்ற நாடுகளுக்கு இதனைக் கொண்டு சேர்த்துள்ளனர். தற்போது தமிழகத்திலும் கப்பிங் தெரபி செய்யப்படுகிறது. 

நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம், சளி, மஞ்சள் பித்தம்மற்றும் கரும் பித்தம். இதில் நச்சுத்தன்மை வாய்ந்த கரும் பித்தம் உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குகிறது. இதை உடலில் இருந்து வெளியேற்ற இந்த தெரபி (cupping therapy) பயன்படுத்தப்படுகிறது. 

pixabay

ADVERTISEMENT

கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப் பகுதி ஆகிய இடங்களில் இந்த ‘கப்பிங் தெரபி’ செய்யப்படும். தெரபி செய்யப்படும் இடத்தில் ஒரு கப்பை வைத்து விடுவார். பின்னர் ஏர் பிரசர் மூலமாக கப்பில் உள்ள காற்றை வெளியற்றுவர். 

மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!

காற்று வெளியேறும் போது கப் தோலை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். கப்பின் உள்ளே காற்று இல்லாத காரணத்தால் சருமத்தில் சிகப்பு மார்க் விழும். சிறிது நேரம் கழித்து கப் அகற்றப்படும்.  இப்போது மார்க் விழுந்த இடத்தில் ஊசியைகொண்டு துளையிடுவார்கள். 

மீண்டும் ஏர்பிரசர் மூலமாக அதே இடத்தில் கப்பை பொறுத்தி கீறிய துளைகளின் வழியாக நச்சுக்கள் ரத்தத்தின் மூலமாக வெளியேற்றி, முழுவதுமாக வெளியேறிய பின்பு கப் அகற்றப்படும். கப்பானது ரப்பர், சிலிக்கோன், கிளாஸ் போன்றவற்றால் ஆனது. ஆனால் இந்த மருத்துவமுறை பயன்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் களிமண்ணால் ஆன கப்புகளே பயன்படுத்தப்பட்டன. 

ADVERTISEMENT

pixabay

கப்பிங் தெரபி – வகைகள்

கப்பிங் தெரபி பல்வேறு வகையில் செய்யப்படுகின்றன. பேம்பூ கப்பிங், ஐஸ் கப்பிங், பயர் கப்பிங், மேக்னட் கப்பிங், சிலிக்கான் கப்பிங், ஆயில் கப்பிங், சிலிக்கான் கப்பிங், மேக்னட் கப்பிங், வெட் கப்பிங், பேசியல் கப்பிங் உள்ளிட்டவை ஆகும். 

தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!

ADVERTISEMENT

இதனை வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் டிரை கப்பிங், வெட் கப்பிங் மற்றும் ஃபேசியல் கப்பிங் தான் பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கிறது. அவை குறித்து இங்கு விரிவாக பாப்போம். 

டிரை கப்பிங்

டிரை கப்பிங் (cupping therapy) என்பது வெற்றிடமான கப்பில் நெருப்பை உட்செலுத்தி அதன் வெப்பம் வெளிவருவதற்குள் உடனே உடம்பில் பொருத்திவிடுவார்கள். பின் அதன் வெப்பம் குறையக் குறைய அதனைச் சுற்றியுள்ள கெட்ட இரத்தம் உறிஞ்சப்படும். பின்னர் கப்புகளை நீக்கினால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். 

ADVERTISEMENT

pixabay

வெட் கப்பிங்

வெட் கப்பிங் என்பது கப்புகளை குறிப்பிட்ட பகுதியில் வைத்து அதற்குள் காற்றை பம்ப் செய்வதுதான் இந்த தெரபியில் சருமம் இறுகி சுற்றியுள்ள கெட்ட இரத்தம் குவிகிறது. பின் கப்புகளை நீக்கி அதன்மேல் நீடில் வைத்து லேசாக குத்துகின்றனர். 

மீண்டும் அதே பகுதியில் கப்புகளை வைத்து காற்றை மீண்டும் ஏற்றுகின்றனர். பின் நீடில் வைத்துக் குத்தியப் பகுதியிலிருந்து கெட்ட இரத்தம் உறிஞ்சப்பட்டு வெளியேறி கப்புக்குள்ளேயே தேங்குகிறது. பின் அதை அப்படியே இலாவகமாக துணியால் துடைத்துவிடுகின்றனர். இப்படி செய்வதால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 

ADVERTISEMENT

ஃபேசியல் கப்பிங் 

பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகமாக பேசியல் கப்பிங் எடுத்துக் கொள்கின்றனர். ஃபேசியல் கப்பிங் செய்வதால் முகத்தில் உள்ள நச்சுகள் நீக்கப்பட்டு முகம் தெளிவாகிறது. குறிப்பாக முகப்பருக்கள் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகமாக பேசியல் கப்பிங் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் முகப்பருக்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முகம் தெளிவாகவும் பளபளப்புத் தோற்றமும் கிடைக்கும்.

pixabay

ADVERTISEMENT

கப்பிங் தெரபி – நன்மைகள்

  • கப்பிங் தெரபி (cupping therapy) செய்பவர்களுக்கு மைக்ரைன் தலை வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இது உலக சுகாதார மையம் செய்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • குறிப்பாக அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கப்பிங் தெரபி மூலம் எடையை குறைக்கின்றனர்.
  •  கப்பிங் தெரபியில் இரத்த ஓட்டம் சீராகி சுத்தமான இரத்தம் உற்பத்தியாவதால் உங்கள் தோற்றம் எப்போதும் இளமையாகவே இருக்கும்.  
  • கப்பிங் தெரபி என்பது இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி , நல்ல இரத்தத்தை உடம்பில் பரவச் செய்ய உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படக்கூடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. 
  • மன அழுத்தம், தூக்கமின்மை, ஏதாவது ஒரே விஷயத்தை நினைத்துப் புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு கப்பிங் தெரபி சிறந்த பலனை கொடுக்கிறது.

pixabay

  • டிரை கப்பிங் செய்வதால் முதுகுவலி, கீழ் முதுகு வலி , உடல் வலி, உடல் சோர்வு என எல்லாவிதமான பிரச்னைகளும் சரிசெய்யப்படும்.
  • கப்பிங் தெரப்பியில் ஆஸ்துமா, ஒவ்வாமை, இரத்த அழுத்தம், உடல் சோர்வு, சருமத் தொற்றுகள், முதுகு வலி, கழுத்து வலி, அஜீரணக் கோளாறு, இரத்த சோகை, நச்சுகள் போன்ற பிரச்னைகைகள் குணமாகும். 
  • ஃபுட் கப்பிங் மூலம் கால்களில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. கப்பிங் முறையால் தசைகளை தளர்த்தி கால் எரிச்சல் குணப்படுத்தப்படுகிறது. 
  • கப்பிங் தெரபி மசாஜ் போன்றது. இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க –

Types of Cupping Therapy in Hindi

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

04 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT