தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!

தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!

சிலரது முகங்களை பார்த்தாலே கண்ணாடி போன்ற மினுமினுப்பும் பார்த்தவுடனே தொட்டு பார்க்கத் தூண்டும் ஈர்ப்பும் இருக்கும். கள்ளம் கபடமற்ற உங்கள் முகம் பார்ப்பவர் கண்களை எல்லாம் கவர்ந்திழுக்கும் படி செய்ய வேண்டும் என்றால் வெண்ணெய் பேக் உபயோகியுங்கள்.

முகம் பளபளப்பாக மறுப்பதற்கு முக்கிய காரணம் உங்கள் சருமம் மாசுக்களாலும் மற்றவைகளாலும் வறண்டு போய் இருப்பதுதான். உங்கள் தோல் வறண்டு உரிந்து போவதால் சில மாய்ச்சுரைசர்கள் உங்கள் சருமத்தை எரிச்சலைடையவும் செய்கிறது.                 

இந்த வறண்ட சரும பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகவும் அதே சமயம் உங்கள் முகம் பச்சிளம் குழந்தையைப் போல மிருதுவடையவும் உங்களை பார்த்தாலே தொட்டு பார்க்க தோன்றும் அழகு வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்த வேண்டியது வெண்ணெய் மட்டுமே.

Pexels

வெண்ணெயில் அதிகப்படியான கொழுப்பு தன்மை உள்ளது. கூடவே சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. இது உங்கள் சருமத்திற்கு பளபளப்பு, ஈரப்பதம் மற்றும் மற்றும் ஒளிரும் (glowing) தன்மையை கொடுக்கிறது.                                   

இந்த அழகான முகம் பெற நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு விஷயங்கள்தான். வெண்ணெய் மற்றும் வாழைப்பழம் இவைதான் இந்த பேக்கிற்கான மூலப்பொருள்கள். ஒரு வாழைப்பழத்தை எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி மசித்துக் கொள்ளுங்கள்.   

மினுமினுக்கும் முக வசீகரம் உங்களுக்கும் வேண்டுமா ! இருக்கவே இருக்கிறது மினிமல் மேக்கப் !                   

 

Pexels

அதனுடன் நீங்கள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கப்படாத வெண்ணையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்தப் பேக்கை ப்ரஷ் மூலமாகவோ விரல்களை கொண்டோ முகம் முழுதும் தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் முகத்தில் இருந்தால் போதுமானது. சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இதற்கு மேல் இருந்தால் தலைவலி வரலாம்.                                     

அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி பருத்தி துணியால் முகத்தை ஒற்றி எடுங்கள். முகம் நன்கு உலர்ந்த உடன் மாய்ச்சுரைசர் தடவிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் பளபளப்பான முகத்தால் பார்ப்பவர்களை வசீகரிப்பீர்கள்.                          

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                           

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!