Acne

களங்கமற்ற குழந்தை போல உங்கள் முகமும் ஆக விருப்பமா ! ஜப்பானியர்களின் ஷைனிங் மேனிக்கான அழகு குறிப்புகள் !

Deepa Lakshmi  |  May 30, 2019
களங்கமற்ற குழந்தை போல உங்கள் முகமும் ஆக விருப்பமா ! ஜப்பானியர்களின் ஷைனிங் மேனிக்கான அழகு குறிப்புகள் !

ஜப்பானியர்களின் ஷைனிங் முகம் போல உங்களுக்கும் மாசு மருவற்ற முகம் வேண்டுமா ! இந்த நான்கு விஷயங்களை மட்டும் செய்ங்க !

உலகில் பல்வேறு வித மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானிய (japanese) பெண்களின் அழகு என்பது ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் ரசிக்க வைக்கும் ஒரு குறையில்லாத அழகு என்று கூறலாம்.

ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் உழைப்புக்கும் பெயர் போன நாடு என்றால் அது ஜப்பான் தான். அவர்களே அழகுக்கும் பெயர்போனவர்களாக இருக்க அவர்கள் பின்பற்றும் பாரம்பர்ய ரகசியங்கள்தான் காரணம்.

உங்கள் முக அழகினை பலமடங்காக்கும் முட்டை ஓடு.. ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணுங்கள் !

பார்ப்பதற்கு செய்து வைத்த சிற்பம் போல இருக்கும் ஜப்பானிய பெண்களில் யார் இளமையானவர் யார் முதுமையானவர் என்பதை கூட கணிக்க முடியாது. அந்த அளவிற்கு முதுமையை போக்கி பொலிவை தரும் சில குறிப்புகள் உங்களுக்காக.

ஜப்பானியர்களின் ரகசிய அழகு சாதன பொருள் விலை அதிகமான அரிதான பூக்களோ அல்லது வாசனை எண்ணெய்களோ அல்ல. நமது வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி தான் அவர்களது ரகசிய அழகு சாதனம்.

அரிசி பேக்

தேவையானவை

அரிசி 1 கப்
நீர் 1 கப்

20 நிமிடங்கள் அரிசியை தண்ணீரில் ஊற விடுங்கள். பின்னர் அந்த அரிசியை தனியே வைத்து விட்டு அரிசி ஊறிய நீரில் பஞ்சினை நனைத்து முகம் முழுதும் ஒற்றி எடுங்கள். அதன் பின்னர் அதனை உலர விட்டு அதனுடன் ஊற வைத்த அரிசியை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். உளர் சருமம் கொண்டவர்கள் அரிசி அரைக்கும் போது கொஞ்சம் பால் விட்டு அரைத்து கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தை போல சருமம் மிருதுவாக மென்மையாக இருக்க இதனை தொடர்ந்து செய்து வரவும்.

மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!

இளமையான முகம் பெற

இளமையான முகம் யார் வேண்டாம் என்று சொல்ல முடியும். அப்படி என்றும் 16 ஆக நீங்கள் திகழ ஜப்பானியர்களின் இந்த முறையை கடைபிடித்தால் போதுமானது.

தேவையானவை

ஆர்கானிக் அரிசி – 3 ஸ்பூன்
அவகேடோ சாறு – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்

அந்த இரண்டு ஸ்பூன் அரிசியை நீங்கள் வேகவைக்க வேண்டும். அல்லது சமைக்கும் போது அதில் இரண்டு ஸ்பூன் சாதம் எடுத்து கொள்ளலாம். அதனோடு அவகேடோ பழ சாறு மற்றும் தேன் இரண்டையும் கலந்து நன்கு பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள். வாரம் மூன்று முறையாவது தொடர்ந்து 10 வாரங்கள் செய்து வர நல்ல மினுமினுப்பான களங்கம் அற்ற முகம் உங்களுக்கு வசப்படும்.

கொரிய பெண்களின் “க்ளாஸி லுக்” சருமம் உங்களுக்கும் வேண்டுமா! இந்த பத்து ரகசியங்களை மட்டும் பின்பற்றுங்கள் !

நிறமேற்றம் செய்ய

நிறம் அதிகரிக்க நாம் சிறப்பாக எதுவும் செய்ய தேவை இல்லை. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கினால் முகம் பிரகாசமாக இருக்கும். அப்படிப்பட்ட அழுக்கை நீக்க ஜப்பானியர்கள் கீழ்கண்ட முறையினை கையாள்கின்றனர்.

தேவையானவை

க்ரீன் டீ 1 கப்
அரிசிமாவு 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

க்ரீன் டீயில் தேன் மற்றும் அரிசி மாவினை கலந்து பேஸ்ட் போல ஆக்கி முகத்தில் பேக் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் அழுக்குகள் நீங்கி முகம் முன்பை விட நிறம் மற்றும் பொலிவோடு இருக்கும்.

அந்த’ இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் எளிய தீர்வுகள் !

முகப்பருக்கள்

பெரும்பாலான ஜப்பானிய பெண்கள் முகத்தை நீங்கள் ஆராய்ந்தால் அவற்றில் ஒரு முகத்தில் கூட பருக்களோ கரும்புள்ளிகளோ இருக்காது. பருக்களை நீக்க அவர்கள் வழியில் முயன்று பாருங்கள்.

தேவையானவை

ஆர்கானிக் அரிசி 1 ஸ்பூன்
பால் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

அரிசியை வேகவைத்து நீரை வடித்து கொள்ளுங்கள். அரிசியை நன்கு மசித்து அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து பசை போல ஆக்கி அதனை முகத்தில் கைகளில் என உங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். பருக்கள் இனிமேல் உங்கள் வீட்டு பக்கம் வராது.

முகத்தின் அழகு நகத்திலும் ஒளிரட்டும்! நெய்ல் ஸ்டிக்கர்கள் ஒரு அறிமுகம்!

இது தவிர ஜப்பானியர்களுக்கான சில பொதுவான அழகு ரகசியம் என்னவென்றால் அவர்களின் தட்பவெப்ப நிலை. சூரியன் அதிகம் இருக்கும் நாடுகளில் அடர் நிற மக்கள் இருப்பதும் சூரியன் குறைவாக வெப்பம் தரும் நாடுகளில் வெளிர்நிற மக்கள் இருப்பதும் ஒரு காரணம். அது மட்டும் அல்லாமல் அவர்கள் பழுப்பு நிற அரிசியை சாப்பிட பயன்படுத்துகின்றனர்.

அவர்களது சமையல்களில் எண்ணெய்யில் பொரிப்பதை விட வேக வைத்து உண்பதை அவர்கள் பின்தொடர்கிறார்கள். சாப்ஸ்டிக்ஸ் மூலம் சாப்பிடுவதால் குறைவான உணவு நீண்ட நேர உண்ணும் முறை மூலமாக செரிமானம் நன்றாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு ஒழுக்கத்துக்குள் கொண்டு வந்து விட்டதால் பாரம்பர்ய அழகை இன்னமும் பேணி காக்க அவர்களால் முடிகிறது.

மஞ்சள் பற்கள் உங்கள் அழகை கேள்விக்குறி ஆக்குகிறதா? வெண்மை பற்களை வெகு சுலபமாக பெற சில எளிய குறிப்புகள் !

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் 

நீண்ட சில்கி கூந்தல் உங்கள் கனவா ? முடி உதிர்வால் பாதிப்பா ? கவலைய விடுங்க! இந்த எண்ணெய் இருக்கே !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

Read More From Acne