முகத்தின் அழகு நகத்திலும் ஒளிரட்டும்! நெய்ல் ஸ்டிக்கர்கள் ஒரு அறிமுகம்!

முகத்தின் அழகு நகத்திலும் ஒளிரட்டும்! நெய்ல் ஸ்டிக்கர்கள் ஒரு அறிமுகம்!

பெண்களுக்கு மிகவும் பிடித்த உடல்பாகங்கள் எது எனக் கேட்டோமானால் நிச்சயம் நகங்கள் என்பதும் அதில் ஒரு பதிலாகத்தான் இருக்கும். மிக சிறிய கீறல் கூட விழாமல் தங்கள் நகங்களை அத்தனை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நகங்களுக்காக இப்போது வந்திருக்கும் புதிய பேஷன் தான் நெய்ல் ஸ்டிக்கர்ஸ்.                                    


முன்பெல்லாம் கலர் கலராக நெய்ல் பாலிஷ் போடுவதுதான் ஆகச் சிறந்த அழகுக்கு கலையாக பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.               


  


அதிலும் டார்க் மெரூன், சிவப்பு, பிங்க் போன்ற கலர்கள்தான் அவர்களுக்கு அதிகம் விற்கப்பட்டது. அதற்குப் பின் அனைத்து நிறங்களிலும் பிராண்டட் நெய்ல் பாலிஷ்கள் வரத் தொடங்கின. அது பெண்களுக்கான பொற்காலம் என்றுதான் கூற வேண்டும்.


ஆனால் அதெல்லாம் தாண்டி பெண்கள் இப்போதுதான் நாகரிகத்தின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள் என்று சொல்லலாம். ஏனெனில் பெண்கள் தங்கள் நகங்களை முகத்தைக் கவனிப்பது போலக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றனர். இதனை அறிந்த பேஷன் உலகம் இப்போது நகங்களில் தங்கள் புதுமைகளை புகுத்தி பெண்களின் நகங்களைக் கலைநயமாக்குகிறது.     


               


நெய்ல் ஆர்ட்டில் இரண்டு வகை உண்டு . ஒன்று சிறப்பு நகப்பூச்சை உபயோகித்து நிஜமாகவே ஓவியம் வரைவது. இதற்கு ஜெல் எனப்படும் நெய்ல் பாலிஷ் பயன்படுத்தப்படுகிறது.                               


இரண்டாவது நம் தலைப்பில் உள்ள நெய்ல் ஸ்டிக்கர் வகைகள். முதலாவது வகைக்கு அதிக நேரம் எடுக்கும். உடனடியாக அகற்ற மனது வராது. இரண்டாவது வகை இன்ஸ்டன்ட் பெண்களுக்கானது. நிமிடங்களில் அழகு செய்து விடலாம். இதற்கான ஸ்டிக்கர்களை வழக்கமான பேன்சி கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு பார்ட்டி அல்லது விழா என திடீர் அழைப்புகள் வரும்போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.              நகங்கள் பெண்களின் அழகை மற்றும் கலைநயத்தை வெளிக்காட்டும் உறுப்பாகும். நல்ல நிறம் கொண்டவர்கள் அழுத்தமான நிறங்களில் நகத்தை அழகுபடுத்தலாம். மாநிறம் கொண்டவர்கள் வெளிர்நிறங்களில் அழகுபடுத்தலாம். நமது உடையின் வடிவத்திற்கேற்ப (design) இப்போது நம் நகங்களை வடிவமைக்கலாம் என்றால் மகிழ்ச்சிதான் இல்லையா.             


இப்படிப்பட்டநெய்ல் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி விருந்து விழாக்களுக்கு செல்லுங்கள்! முகத்தின் அழகு நகத்திலும் ஒளிரட்டும்!      படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.