மஞ்சள் பற்கள் உங்கள் அழகை கேள்விக்குறி ஆக்குகிறதா? வெண்மை பற்களை வெகு சுலபமாக பெற சில எளிய குறிப்புகள் !

மஞ்சள் பற்கள் உங்கள் அழகை கேள்விக்குறி ஆக்குகிறதா? வெண்மை பற்களை வெகு சுலபமாக பெற சில எளிய குறிப்புகள் !

மற்ற எல்லா அழகு பொருட்கள் தரும் அழகை விடவும் புன்னகை தான் நம்மை அழகாக காட்டும் அற்புதமான மேக்கப் சாதனம். அந்த புன்னகை கூட சில சமயங்களில் மற்றவரின் முக சுழிப்பிற்கு காரணம் ஆகி விடுகிறது.


காரணம் மஞ்சள் பற்கள். இயல்பில் வெண்மையாக இருக்கும் பற்கள் நாம் பயன்படுத்தும் உணவு காரணமாக மஞ்சள் நிறத்திற்கு மாறி விடுகிறது. பல் மருத்துவம் என்பது இப்போதெல்லாம் பகல் கொள்ளை ஆகிப் போன நிலையில் மருத்துவம் மூலம் பற்களை வெண்மையாக்க நாம் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டும்.


"பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா !
இதை மட்டும் தொடர்ந்து செய்து வாங்க !"வெளியில் பற்களின் மஞ்சள் கறையை நீக்கும் என்று விற்கப்படும் பற்பசைகள் மூலம் பெரிய மாற்றங்கள் எதுவும் நம் பற்களில் நிகழ்வதில்லை. பேக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகள் நாளடைவில் வாய் துர்நாற்றமாகவும் மாறலாம்.


மஞ்சள் (yellow) உங்களுக்கு பிடித்த நிறமாக இருந்தாலும் அது பற்களில் இருப்பது நல்லதல்ல.. ஆகவே உங்கள் மஞ்சள் பற்களை சரி செய்ய கீழே தரப்பட்டிருக்கும் சில எளிய குறிப்புகளை பின்பற்றுங்கள்.


கொரிய பெண்களின் "க்ளாஸி லுக்" சருமம் உங்களுக்கும் வேண்டுமா! இந்த பத்து ரகசியங்களை மட்டும் பின்பற்றுங்கள் !தேங்காய் எண்ணெய் ஆன்டி பேக்டீரியல் கூறுகளை கொண்டது. தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி அதனை 10 நிமிடங்கள் கொப்பளித்து வாருங்கள். அதன் பின்னர் எண்ணையை கொப்பளித்து விட்டு வெறும் ப்ரஷ் கொண்டு பற்களை தேய்க்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வழக்கமான பற்பசை மூலம் பற்களை சுத்தம் செய்யுங்கள்.


இப்படி செய்வதன் மூலம் 10 நாட்களில் நல்ல மாற்றம் காணலாம்.


பற்காரைகளை சரி செய்ய எள் உதவுகிறது. ஒரு கையளவு எள் எடுத்து நன்றாக மெல்ல வேண்டும். அதன் பின் அவற்றை வெளியேற்றி விட்டு வெறும் ப்ரஷ் மூலம் பற்களை துலக்க வேண்டும். இதன் மூலம் பற்காரைகள் அகலும்.


தக்காளி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கி வெண்மையை நிலைக்க செய்கிறது. தக்காளியை கட் செய்து அதனை பற்களில் நன்றாக தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து பிரஷ் மூலம் பல் துலக்கி விட வேண்டும். இதனால் பற்கள் வெண்மையாகும்.ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 10 சொட்டுக்கள் எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். தினமும் இந்தக் கலவை மூலம் பற்களை வெறும் கைகளிலோ அல்லது ப்ரஷ் மூலமோ தேய்த்து வர பற்கள் பளிச்சிடும் வெண்மை பெறும்.


அத்திப்பழம் உடல் வலிமைக்கு மட்டுமல்ல ஈறுகளின் வலிமைக்கும் பயன்படும். தினமும் 3 அத்திப்பழங்களை வாயில் போட்டு மெல்லவும் இதனால் பேக்டீரியாக்கள் குறையும், பற்கள் வெண்மையாககும்,


இரண்டு ஸ்பூன் வினிகர் உடன் ஒரு ஸ்பூன் இந்து உப்பு சேர்த்து இதனோடு அரை கப் நீரை கலந்து பற்களை சுத்தம் செய்து வர வெகு விரைவில் பற்கள் சுத்தமான வெண்மையை அடையும்.மாதத்திற்கு ஒருமுறை பேக்கிங் சோடாவை ஈரமான ப்ரஷ் மூலம் தொட்டு பல் துலக்கி வந்தால் பற்களில் மஞ்சள் கறை படிவது முற்றிலுமாக தடுக்கப்படும்.


ஆரஞ்சு பழத்தோல் பற்களுக்கும் பயன்படும். இரவில் ஆரஞ்சு பழத்தோல் கொண்டு பற்களை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் உங்கள் பற்களை கழுவி விடுங்கள். இதனால் உங்கள் பற்கள் நிறம் வெண்மையாக பளிச்சிடும்.


முகத்தின் அழகு நகத்திலும் ஒளிரட்டும்! நெய்ல் ஸ்டிக்கர்கள் ஒரு அறிமுகம்!


அந்த' இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் எளிய தீர்வுகள் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.