Acne

உங்கள் பளபளப்பான முக அழகை சில பருக்கள் வந்து கெடுக்கிறதா! சிம்பிளாக சரி செய்து விடலாம்!

Deepa Lakshmi  |  Dec 11, 2019
உங்கள் பளபளப்பான முக அழகை சில பருக்கள் வந்து கெடுக்கிறதா! சிம்பிளாக சரி செய்து விடலாம்!

இந்தப் பருக்கள் மட்டும் இல்லை என்றால் நான் இன்னும் அழகாகத் தெரிவேனே என்கிற ஏக்கம் பல கோடி பெண்களுக்கு இருக்கிறது. உங்கள் முக அழகைக் குறைத்துக் காட்டும் பருக்களை (pimples) எளிய முறையில் நீக்க முடியும் என்றால் மகிழ்ச்சிதான் இல்லையா.

அதற்கான வழிகளை பார்க்கலாம்.                                                                             

சாலிசிலிக் அமிலம் என்கிற அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும். இதனை பரு மறையும் வரை பயன்படுத்தலாம்.

பருக்கள் நீங்க ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலில் ஊறவைத்து அரைத்த ஆப்ரிகாட் பயன்படுத்துங்கள்.

க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பருக்கள் மூலம் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம். க்ரீன் டீ பையை பருக்கள் மீது வைப்பதன் மூலமும் நிவாரணம் கிடைக்கும்.                                                                 

 

Pinterest

வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போன்று உபயோகித்து வர அது முகத்தை மேம்படுத்தி முழு நிறைவாக்கும். அதனை அறை வெப்பநிலையில் காய விடுங்கள். காற்றாடிக்கு முன் நின்று காய வைத்தல் எந்தப் பயனையும் தராது. காய்ந்த பிறகு அதை உரித்து எடுத்து, கழுவி எடுக்க வேண்டும். மேலும் முகப்பருவின் மீது பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தாலும், முகப்பருவின் அளவை அது குறைக்கும்.

பஞ்சு சிறிது எடுத்துக் கொண்டு, பெராக்சைடில் நனைத்து முகப்பருவின் மீது தடவுங்கள். இது எரிச்சலை தரும் ஆனால் நல்ல மாற்றத்தை தரும். நீங்கள் விருப்பபட்டால் ஆல்கஹாலை கூட இவ்வாறு பயன்படுத்தலாம்.                             

பருக்களை நீக்க ஸ்ட்ரிடெக்ஸ் (Stridex) எனப்படும் துடைப்பான்களை உபயோகப்படுத்தலாம். இவை சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற நல்ல வினைப் பொருட்களுடன் கூடிய வட்டவடிவிலான பஞ்சு. இதிலேயே ஆல்கஹால் அற்ற வகைகளும் கிடைக்கின்றன. எரிச்சலை தராது. தினமும் இரவு இதை முகத்தின் மீது காயும் வரை வைக்கவும். கொஞ்சம் முகத்தை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், முகத்திற்கு சிறந்த முறையில் உதவும். தொடக்கத்தில் இது முகத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். தொடர்ந்து உபயோகிக்க சருமம் இதற்கு பழக்கப்பட்டுவிடும்.

 

 

Youtube

பருக்கள் வராமல் இருக்க குறிப்புகள்

முகத்தை தொடுவதற்கு முன் உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள்.
சமச்சீரான உணவு மாசற்ற சருமத்தை பேண உதவும்.
மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இது முகப்பருவை உண்டாக்கலாம்.

கவனம்

எல்லா முறைகளையும் ஒரே நாளில் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறை மற்றும் சில தினங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.ஒரே நாளில் முகப்பரு மறையும் என்று எதிர்பார்க்க கூடாது சில காலம் பிடிக்கும்.பருவை கிள்ளிடவோ, உடைக்கவோ முயல வேண்டாம். அது ஆறாத வடுவாய் அமைய நேரிடும்.

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Acne