மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகேடாபழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. எண்ணெய்ச் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது.
வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது. கலிஃபோர்னியாவில் பயிரிடப்படும் இந்தப் பழங்களுக்கு 34 லிட்டர் தண்ணீர் ஒரு அவுன்ஸிற்குத் தேவைப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் பலரும் அவகேடாவை உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் இந்த பழங்களின் வரத்தும் குறைந்து வருகிறது.
அவகேடோ சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்
சருமத்திற்கு நன்மை தரும் அவகேடோ
அவகேடோவின் நன்மைகள் (Avocado Benefits In Tamil- Health Benefits)
1. ஆரோக்கியமானது (Healthier)
இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உதவும். பொட்டாசிய சத்து உடலில் குறைந்ததால் தான் இரத்த அழுத்த பிரச்சனை வரும். அத்தகைய பொட்டாசியம் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். வாழைப்பழத்தை விட அதிக அளவிலான பொட்டாசியத்தை அவகேடோ பழம் கொண்டுள்ளது. கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை உடலில் தக்க வைக்க அவகேடா உதவுகின்றது.
Also Read : கிராம்புகளின் நன்மைகள்
2. ஆண்டி ஆக்சிடின் (Antioxidants)
சில பழங்களில் இயற்கையாகவே கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆண்டி ஆக்சிடின் நியூட்ரிசியன் இருக்கும். 2005ம் நடத்தப்பட்ட ஆராய்சியில் அவகேடோ மற்றும் அவகேடோ எண்ணெய்யில் இயற்கையாக ஆண்டி ஆக்சிடின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாகவே நோயை எதிர்க்கும் ஆண்டி ஆக்சிடின் சக்தி அவகேடோவில் உள்ளது.
Also Read: ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் (Health Benefits Of Nutmeg)
3. புற்றுநோயை எதிர்க்கும் (Prevents Cancer)
அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
4. இதயப் பாதுகாக்கிறது (Reduce Your Risk Of Heart Diseases)
இப்பழத்தில் காணப்படும் பீட்டா சைடோஸ்டெரால் உடலின் கொலஸ்ட்ரால். அளவினை சரியான விகிதத்தில் பராமரிக்கிறது. மேலும் இப்பழம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கிறது. இப்பழத்தில் உள்ள பொட்டாசியமானது இரத்தத்தில் சோடியத்தின் அளவினை சரிசெய்து உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு வருவது தடைசெய்யப்படுகிறது.
5. உடல் எடையை குறைக்கின்றது (Weight Loss)
அவகேடோ பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகின்றது. இதனால் ஊள சதை போட்ட பருமனாக இருப்பவர்களின் குறையும் என ஆராய்சிகள் தெரிவித்துள்ளன.
Also Read: இலவங்க பட்டையை பயன்படுத்தும் முறை
6. மூளை புத்துணர்ச்சி தருகின்றது (Boost Brain Health And Memory)
அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் மூளை புத்துணர்ச்சியுடன் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது. இப்பழத்தில் ஆலிக் ஆசிட் மற்றும் ஒமேகா oleic acid, omega-9 சரிவர இருப்பதால் மூளையை நன்கு புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகின்றது.
7. மன அழுத்தத்தை குறைக்கின்றது (Help Lower The Risk Of Depression)
அவகேடோ பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றது. விரைவில் செரிமானம் அடைவதுடன் தேவையற்ற கழிவுகளை உடலில் தங்க விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் மன அழுத்தம் இன்றி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க அவகேடோ உதவுகின்றது.
Also Read: நோய்களை குணமாக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு (Benefits Of Sweet Potato)
சுவையான சூடான செட்டிநாடு நண்டு கறி சாப்பிட ஆசையா?
8. ஆரோக்கியமான கண்களுக்கு (Keep Your Eyes Healthy As Your Age)
அவகேடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவுகின்றது.
9. வலுவான ஈறுகளுக்கு (Prevents Gum Disease)
பற்களை சுற்றி ஏற்படும் ஈறு பிரச்சணையிலிருந்த பாதுகாக்கின்றது அவகேடோ. பற்கள் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் பசை போன்று இந்த பழம் ஒட்டி இருப்பதால் கிருமி நாசினியாக செயல்பட்டு ஈறுகளை பலப்படுத்துகின்றது.
Also Read: Benefits Of Sesame Seeds In Tamil
10. உணவு ஒவ்வாமையை தடுக்கின்றது (Prevents Food Poisoning)
இப்பழத்தில் கரைக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு நச்சுப் பொருட்களை கழிவாகவும் வெளியேற்றுகின்றன. உணவில் உள்ள நுண்ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சுவதை இப்பழத்தில் உள்ள நார்சத்தானது ஊக்குவிக்கின்றது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு தொடர்பானவற்றையும் நார்ச்சத்து சரிசெய்கிறது. நமது அன்றாட நார்ச்சத்துத் தேவையில் 40 சதவீதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. இதனால் செரிமானக் கோளாரால் ஏற்படும் உணவு ஒவ்வாமை தடுக்கப்படுகின்றது.
11. சிறுநீரக பாதுகாப்பு (Reduce Liver Damage)
இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வரலாம்.
Also Read : வெல்லத்தின் நன்மைகள்
12. கர்ப்பிணிகளின் நலத்திற்கு (Great For Pregnant Women)
கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகளவு கிடைக்கிறது. ஃபோலிக் அமிலம் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்ய இன்றியமையாதது. மேலும் இப்பழத்தில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பினை அளிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துகிறது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தினை உண்டு உடல்நலம் பேணலாம்.
Also Read About அஸ்பாரகஸின் நன்மைகள்
13. எலும்புகளின் பலத்திற்கு (Strong Bone)
இப்பழத்தில் காணப்படும் தாதுஉப்புக்களான துத்தநாகம், பாஸ்பரஸ், காப்பர், கால்சியம் ஆகியவையும், பைட்டோ-நியூட்ரியனான லுடீன் ஸீக்ஸாத்தைனும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு எலும்புகளை வலுப்படுத்துகிறது. எனவே இப்பழத்தினை உண்டு எலும்புகளை பலப்படுத்தலாம்.
வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!
அவகேடோ(Avocado) சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் (How To Use Avocado For Skin)
சரும பளபளப்பிற்கு அவகேடோ பெரிதும் உதவுகின்றது. தற்போது க்ரீம்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சருமத்திற்கு நல்ல பளபளப்பையும் பொலிவையும் தந்து பாதுகாக்கிறது. கெல்தியான ஸ்கின் டோனை அசகேடோ தருகின்றது. இதனை க்ரீமாகவோ அல்லது மாஸ்க் போன்றோ அப்ளை செய்து பயன்படுத்தலாம்.
பழத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் முகத்தில் தடவிக்கொள்ளலாம். அல்லது இரவில் தூங்கும் போது ஒரு பேக் போன்று பயன்படுத்திக்கொள்ளலாம். சருமம் மென்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனுடன் தேன் அல்லது பால் கலந்தும் பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள் ஜாதிக்காயின் நன்மைகள்
சருமத்திற்கு நன்மை தரும் அவகேடோ (Benefits Of Avocado For The Skin)
1. மாய்சுரைசர் (Moisturizes Your Skin)
அவகேடோ நமது சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்சுரைசராக பயன்படுகின்றது. காலையில் எழுந்ததும் அவகேடோவுடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவி பிறகு ஈரமான டவலால் சுத்தம் செய்தால் போதும். முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கருமைகள் மறைந்து புத்திணர்வுடன் முகம் இருக்கும்.
2. கருவளையங்கள் (Smooth Out Wrinkles)
கண்கள் மற்றும் கழுத்தை சுற்றியுள்ள கருவளையங்களை மிகவும் மென்மையாக எடுக்கக்கூடிய சக்தி அவகேடோவிற்கு உள்ளது. அவகேடோ பழத்துடன் சிறித தேன் கலந்து கருமையாக உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் கருமை நிறம் மாறி ஸ்கின் இயல்பான நிலைக்கு திரும்பும்.
3. சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும்(Protects Your Skin From The Sun)
அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு முதம் மிகவும் டல்லான லுக்கிள் இருக்கும். முகம் வாடி சோர்ந்து போய் இருக்கும். என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் பழைய நிலைக்கு வராது. அப்படியானவர்கள் அவகேடோவுடன் முட்டை அல்லது தயிர் கலந்து தினமும் இரவு படுக்க போதும் முதல் ஒரு பேக் போன்று அப்ளை செய்து வந்தால் முகம் நல்ல பொலிவு தரும். வெயிளிலிருந்தும் முகத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
Also Read : ப்ரோக்கோலியின் முக்கியத்துவம்
4. பருக்கள் வராமல் பாதுகாக்கும் (Prevents And Treats Acne)
அவகேடோவுடன் சறிது எலும்பிச்சை அல்லது முட்டை வெள்ளைக்கரு மற்றும் தயிர் கலந்து திக்கான பேக் போன்று தயாரித்து வீட்டி வாரம் இரண்டு முறை இதை செய்த வந்தால் பரு தொல்லையிலிருந்த முற்றிலும் விடுதலை பெறலாம். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் எலும்பிச்சை சேர்ப்பதை தவிர்க்கவும்.
5. சன் டானை நீக்குகிறது (Removes Sun Tan)
வெளியின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நீண்ட நாள் கருமையை அவகேடோ நீக்குகிறது. முகத்தை நல்ல சுத்தமான தண்ணீரால் அவ்வப்போது தொடர்ந்து கழுவி வர வேண்டும். இரவில் அவகேடோவை பேக் போன்று பயன்படுத்தலாம்.
6. காயங்கள் (Heals Wounds)
அவகேடோவில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடின் இருப்பதால் நோயை எதிர்க்கும் சக்தி போராடும் சக்தி உள்ளது. காயம் அல்லது சிராய்ப்புகள் உள்ள இடத்தில் அவக்கேடோவை தடவி வந்தால் தழும்புகள் இன்றி குணம் பெறலாம்.
Also Read About ஜோவர் சுகாதார நன்மைகள்
7. மென்மையான சருமம் (Soft Skin)
சிலருக்கு இயற்கையாகவே சருமம் வரண்டு கடினமாக இருக்கும். அப்படியான வரண்ட கடினமான சருமம் இருப்பவர்கள் அவகேடோ க்ரீம் அல்லது பழத்தை முகத்தில் தடவி வந்தாலே போதும். முகம் மென்மையாக நல்ல பொலிவை பெரும். ஸ்கின் நாளடைவில் நல்ல மென்மையை பெரும்.
முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரி செய்ய என்ன செய்யலாம்?
அவகேடோ தொடர்பான கேள்விகள் (FAQ)
1. அவகேடோ சருமத்திற்கு நல்லதா?
கட்டாயம் பயமின்றி இதனை பயன்படுத்தலாம். முகத்தில் நல்ல மாய்சுரைசராக பயன்படுகின்றது. சரும பொலிவை அதிகரிப்பதுடன் மென்மையான பளபளப்பை தருகின்றது.
2. தினமும் அவகேடோ பழத்தை சாப்பிடலாமா?
தினமும் இந்த பழத்தை பயமின்றி சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு நல்ல உணர்வை தருவதுடன் உடலுக்கும் நல்லது.
3. தினமும் எத்தணை பழங்கள் சாப்பிடலாம்?
தினமும் ஒரு பழம் சாப்பிடுவது போதுமானது. அதிக சத்துக்கள் நிறைந்த அவகேடோ பழத்தை ஒன்றுக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
4. அவகேடோ சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
அவகேடோ சாப்பிடுவதால் கண்களுக்கும் கண் பார்வைக்கும் நல்லது, இதய நோயிலிருந்து தப்பலாம், கிட்னி நல்ல வழு பெருகின்றது. மலச்சிக்கல் நீங்கும்.
5. அவகேடோ ஆயில் சிறந்ததா?
அவகேடோ பழம் போன்று ஆயிலும் நல்ல பலனை தரும். முகம் மற்றும் காயம் ஏற்பட்ட தழும்புகள் உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வரலாம்.
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo