வேம்பு அல்லது வேப்பை (Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி இது மூலிகை மரம் என்று அழைக்கப்படுகின்றது. வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் மற்றும் அணுகவிடா தன்மை கொண்டவை. வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது. வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது. மேலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.
பூச்சி கடிகள் மற்றும் வயிற்று அலர்ஜியால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் திறன் வேப்பை இலைக்கு உள்ளது. இதன் சாற்றை அரைத்து சாறு எடுத்து சிறிது காயம் பட்ட அல்லது பூச்சி கடித்த இடத்தில் தடவலாம். வயிற்று போக்கால் அவதிபடுவோம் வேப்பை இலையின் சாற்றை பருகினால் போதும். விஷத்தின் தன்மை முறிந்து குணமாகும்.
சமீபத்திய ஆராய்ச்சியில் வேப்பிலை புற்றுநோயை சரிசெய்ய பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் தான், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடலாம்.
மலேரியாவிலிருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையிலும், மதிய வேளையிலும் குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்.
வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியா பண்புகள், சரும பிரச்சனைகளான எக்ஸிமா, ஸ்கேபீஸ் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். அதற்கு வேப்பிலை போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரால், சருமத்தைக் கழுவ வேண்டும். இதனால் விரைவில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பக்கவாதம் போன்றது தான் கரோனரி இதய நோயும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான் கரோனரி இரத்த நோயால் பாதிக்கப்படுவார்கள். உடல் பருமன் உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.
வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடியுங்கள்.
சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்ததும் அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
* 3 டம்ளர் நீரில், 5 வேப்பிலைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அது குளிர்ந்த பின் வடிகட்டி, அதில் தேன் சிறிது கலந்து உடனே குடிக்க வேண்டும்.
* 3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளைப் போட்டு, 1 டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதனை வடிகட்டி, அந்நீரை காலை, மதியம் மற்றும் மாலையில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
கிராம்பு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்!
வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு வேப்பிலையை அப்படியே சாப்பிடுவதை விட, அவற்றைக் கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும். வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்க கொடுக்கலாம்.
உடலில் உள்ள காயங்களில் பாக்டீரியாக்கள் அல்லது இதர கிருமிகளின் பெருக்கத்தைத் தடுக்க வேப்பிலை உதவும். அதற்கு சிறிது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் காயம் உள்ள பகுதியைக் கழுவுங்கள். இதனால் வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டிரியல் பண்புகள், காயங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கும்.
சிலருக்கு அதகமான உடல் சூடு மற்றும் பிரயாணம் அதிகம் செய்பவர்களுக்கு இது போன்ற சீறுநீரக பாதை தொற்று அடிக்கடி ஏற்படும். சிறுநீரக பாதை தொற்றின் காரணமாக பளுதடைந்தால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இதை ஆரம்பத்திலேயே மிக எளிய முறையில் தடுக்கலாம். எப்படியெனில் தினமும் காலையல் வெறும் வயிற்றில் வேப்பை இலையை தண்ணீரில் பிச்சுப்போட்டு முதல் நாள்ளே ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது அடிக்கடி வெளி இடங்களுக்கு செல்பவர்கள் வேப்பை இலையை வேக வைத்த தண்ணீரை லெமன்னுடன் சேர்த்து குடிக்கலாம்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பை இலை மிகச்சிறந்த நிவாரணம் தரும். அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வேப்பை இலையை அரைத்து நெற்றியில் பத்து பேன்று போட்டுக்கொள்ளலாம். வேப்பை இலை படுக்கை செய்து படுப்பார்கள். மேலும் வேப்பை சாற்றை சிறிது அரைத்து உள்ளே குடிக்க கொடுப்பார்கள். வேப்பை இலையில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அம்மை நோயை முற்றிலுமாக நீக்கும் தறன் கொண்டுள்ளது.
வரண்ட சருமத்திற்கு வேப்பை இலை நல்ல பலனை தருகின்றது. வரண்ட சருமத்தால் அவதிப்படுபவர்கள் வேப்பை இலை பவுடருடன் தேன் அல்லது பால் சேர்த்து முகத்தில் பேக் போன்று போட்டு வந்தால் முகம் நல்ல பொலிவுடன் ஈரப்பதமாகவும் இருக்கும்.
வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
முகம் பளபளப்பாக இருக்க நினைப்பவரகள் வேப்பை இலையை தண்ணீரில் போட்டு வேக வைத்து வடி கட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தினமும் முகத்தில் ஸ்ப்ரே போன்று பயன்படுத்தி வந்தால் முகம் நன்கு பளபளப்பை பெறும்.
உடல் சூடு அல்லது கம்பியூட்டரில் அதிகம் வேலை செய்பவர்கள் கண்கள் மிகவும் சோர்வுடனும் வலியுடனும் காணப்படும். அப்படி சோர்வுடன் இருப்பவர்கள் தினமும் கண்களை வேப்பை இலையில் தண்ணீரில் கழுவினால் கண்களின் சூடு குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தொடர்ந்து வேப்பை இலைக்கொண்ட பேஷ் வாசினை பயன்படுத்தி வந்தால் போதும். அல்லது வேப்பை இலையை நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் எண்ணெய் இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
சுத்தமான சருமம் வேண்டும் என நினைப்பவர்கள் வேப்பை இலையில் பேக் போட்டுக்கொள்ளலாம்.
சரும பேக் (Neem face Pack for Clear and Glowing Skin)
வேப்பை இலை பவுடருடன் தயிர் கலந்து வாரம் ஒரு முறை பேக் போட்டுக்கொண்டால் போதும். முகம் நன்கு பளிச்சென்று தூய்மையானதாக காட்சியளிக்கும்.
சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சணை தீராத ஒரு வருத்தத்தை தரும். அப்படி இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
அலர்ஜி பேக் (Neem face pack for Reduce Skin allergy)
சரும அலர்ஜியால் தொடர்ந்து அவதிப்படுவோர் வேப்பை இலை தண்ணீரில் தொடர்ந்து முகத்தை கழுவலாம். வேப்பை இலை பவுடர் கொண்டு முகத்தை தேய்த்து கழுவலாம். வேப்பை இலையை மட்டும் கொண்டு பேக் போன்று போட்டுக்கொள்ளலாம்.
வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.
கரும்புள்ளிகளுக்கான பேக் (Neem face pack for Pigmentation)
வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
சிலருக்கு தலையில் முடி வளரும் இடத்தில் காயம் மற்றும் வரண்டு காணப்படும். இதனால் முடி வளர்வதில் அதிக சிரமம் ஏற்படலாம். ஸ்கால்ப் மிகவும் பாதிக்கப்பட்டு வரண்டு போய் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட வேப்பை இலை சிறந்த நண்பனாக பயன்படுகின்றது.
ஸ்கால்ப் ஆரோக்கியத்திற்கு (Neem Hair Pack For Scalp)
அரை கப் தேங்காய் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் மற்றும் 10 துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். இதனை லேசாக சூடுபடுத்தி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாக் முடி உதிர்வது தடுக்கப்பட்டு நீளமாக வளரும்.
அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது மற்றும் சருமம் வரட்சியால் பொடுகு தொல்லை ஏற்படும். பொடுகு மெல்ல மெல்ல நமது கூந்தல் வளர்ச்சியை தடுப்பதுடன் முடியின் அடர்த்தியை முற்றிலுமாக குறைத்துவிடும். இந்த பிரச்சணை இருப்பவர்கள் கீழ் உள்ள முறையை பயன்படுத்தலாம்.
பொடுகிற்கான பேக் (Neem Hair Pack For Dandruff Removal)
1 டீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ் பூன் நெல்லிக்காய் பொடி, 2 துளி தேயிலை மர எண்ணெய் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின் தலைமுடியை அலசவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
மிருதுவான தலைமுடியை பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. எல்லோருக்கும் அந்த ஆசை கண்டிப்பாக இருக்கும். அப்படி மிருதுவான தலைமுடியை இயற்கையாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் கீழே உள்ள இந்த முறையை பின்பற்றலாம்.
பளபளப்பான முடியை பெற (Neem Hair Pack For Moisture)
சம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் பின்பு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலாசுங்கள். வறட்சி மறைந்து கூந்தல் பளபளக்கும்.
தலைமுடி வேர்க்கால்களுக்கு பலம் தரும் வகையில் , வேப்பெண்ணெயுடன் ஒரு முட்டை வெள்ளைக் கருவை கலந்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். முடி காய்ந்தவுடன் தலைக்கு குளிக்கவும்.
நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புவுடன் சிறிது வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலைக்கு குளிக்கும்போது உபயோகித்தால் ஷாம்புவினால் வறட்சி உண்டாகாமல் கூந்தல் மிருதுவாகும். ரசாயன பாதிப்புகள் இருக்காது.
மிருதுவான கூந்தலுக்கு (Neema pack for Soft Hair)
வேப்பை இலையை நன்கு அரைத்து தயிருடன் கலந்து பேக் போன்று போட்டுக் கொள்ளலாம். இதனால் கூந்தல் மிருதுவாவதுடன் நல்ல பளபளப்பையும் பெறும். இந்த கலவையை 30 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். சளி பிடிக்க அல்லது சிலருக்கு தலை வலி வர வாய்ப்பு உள்ளது.
பெண்களின் முதல் ஹீரோ தந்தை - தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது!
வேப்பை இலை சருமத்திற்கு ஏற்றதா?
இதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். கட்டாயம் வேப்பை இலை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சருமத்தை நன்கு பாதுகாக்க உதவுகின்றது.
வேப்பை இலை பயன்படுத்த கடினமானதா?
வேப்பை இலையில் இருக்கும் கசப்பு தன்மை பயன்படுத்த கொஞ்ச சிரமத்தை தந்தாலும் நன்ன முன்னேற்றத்தை தரும்.
வேப்பை மரம் வாஸ்துவிற்கு நல்லதா?
வாஸ்துவிற்கு நல்லது என்று எந்த குறிப்பு களிலும் கூறப்படவில்லை. ஆனால் வீட்டில் வைத்திருப்பதற்கு மகவும் நல்லது.
கூந்தலுக்கு வேப்பை இலை ஏற்றதா?
கூந்தல் பராமரிப்பிற்கு வேப்பை இலை மிகவும் சிறந்தது தான். கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து பாதுகாக்க வேப்பை இலை பெரிதும் உதவுகின்றது
இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகின்றதா?
கட்டாயம் வேப்பை இலை தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தக்கொதிப்பின் அளவு அதிக அளவில் குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo