logo
ADVERTISEMENT
home / அழகு
ப்ரோக்கோலி –  சருமம் மற்றும் முடி பாதுகாபிர்க்கு ப்ரோக்கோலியின் பயன்பாடுகள்!

ப்ரோக்கோலி – சருமம் மற்றும் முடி பாதுகாபிர்க்கு ப்ரோக்கோலியின் பயன்பாடுகள்!

காலிஃபிளவருக்கு அடுத்தபடியாக சமையலில் அதிகம் பயன் படுத்தப் படுவது இந்த ப்ரோக்கோலி. காலிஃபிளவரைப் போலவே தோற்றம் அளித்தாலும், இதற்கென சில தனி நற்குணங்கள் உள்ளது. இவைப் தற்போது மக்களால் விரும்பி வாங்கக் கூடிய ஒரு காய் வகையாக உள்ளது. இதில் பல வகையான ருசியான உணவுகள் சமைக்கலாம். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, பிறவியில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகளையும் குணப் படுத்த இது உதவுகின்றது.

ப்ரோக்கோலி – சில சுவாரசியமான தகவல்கள்!

இது நம் நாட்டு உணவு பட்டியலில் இல்லை என்றாலும், உலகமயமாக்கல் மூலமாக இன்று அனேக கடைகளிலும், சந்தைகளிலும் விற்கப் படுகின்றது, இது பச்சை காய் வகையை சேர்ந்தது. இது இத்தாலியா சாகுபவர் இனத்தை சேர்ந்த

ப்ராஸ்ஸேசேஸ் ஒலெலேசியா வகையில் வருகின்றது. இது முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்தது. பச்சை நிற பூ தலையே அதிகம் சமையலில் பயன் படுத்தப் படுகின்றது. இது ஒரு மரம் போன்ற தோற்றம் அளிக்கும். இதன் தண்டுகளும் ஒரு சில சமயளுக்குப் பயன் படுத்தப் படுகின்றது.

இந்த ப்ரோக்கோலி பல வகைகளில் கிடைக்கின்றது. உலகின் வெவ்வேறு பகுதிகளில், இது வெவ்வேறு விதமாக பயிரடப் பட்டு வேறுபடுகின்றது. இந்த விதத்தில், இதன் வகைகள், பின்வருமாறு:

ADVERTISEMENT
  • கலபெரெஸ் ப்ரோக்கோலி: இதை பொதுவாக ப்ரோக்கோலி என்றே அழைப்பார்கள்
  • ப்ரோக்கோலி முளைக்கும்: இதற்கு பல பூ தலைகள் உள்ளது. மேலும் இதன் தண்டு மிக மெல்லியதாக உள்ளது.
  • ஊதா காலிஃபிளவர்: இது காலிஃபிளவர் போன்று தோற்றம் தந்தாலும், இதன் பூக்கல் மிக சிறியதாக இருக்கும்.

ப்ரோக்கோலி  பொதுவாக கொஞ்சம் கசப்புத் தன்மையோடு இருக்கும். சிலர் இதன் சுவையை அதிக கசப்புத் தன்மையாக உணருவார்கள். க்லுகோசினோலேட் என்னும் கூட்டு இதன் சுவையை தீர்மானிக்கின்றது. ப்ரோக்கோலி யில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, அவை, புற்றுநோய் வராமல் தடுப்பது, ஜீரணத்தை அதிகப் படுத்துவது, உடலில் உள்ள அசுத்தங்களை சுத்தப் படுத்துவது, வைட்டமின் மற்றும் தாது பொருளின் அளவை உடலில் அதிகப் படுத்துவது என்று மேலும் பல.

இந்த ப்ரோக்கோலி  தலை முடி மற்றும் சரும ஆரோகியதிற்கும் உதவுகின்றது. இதன் பயன்கள் எண்ணிலடங்காதவை. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்!

5

ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள சத்துக்களின் விவரம்

ப்ரோக்கோலி பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நிறைந்துள்ள சத்துக்களுக்காகவே இது ஒரு அருமையான உணவு என்று கூறலாம். ப்ரோக்கோலி 9௦% நீர் சத்து உள்ளது. இதில் வைட்டமின் C, வைட்டமின் K1, வைட்டமின் B9, பொட்டசியம், மான்ஙகனீஸ் மற்றும் இருன்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள மேலும் பல சத்துக்களை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே சில தகவல்கள்;

ADVERTISEMENT

ஒரு கப் நறுக்கிய ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள சத்துக்கள் பின் வருமாறு:

·         கலோரிகள் 31

·      கார்போஹைட்ரேட்டுகள் 6 கிராம்

·      நார் சத்து 2.4 கிராம்

ADVERTISEMENT

·      கொழுப்பு சத்து 0.3 கிராம்

·      புரதம் 2.6 கிராம்

·      வைட்டமின் ஏ பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 11%

·      வைட்டமின் சி 135% DV

ADVERTISEMENT

·      வைட்டமின் கே 116% DV

·      ஃபோலேட் 14% DV

·      கால்சியம் 4% DV

·      இரும்பு 4% டிவி

ADVERTISEMENT

·      பொட்டாசியம் 8% டி.வி

இதில் இவ்வளவு சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இதை நீங்கள் சமைக்கும் விதத்திலேயே இதில் நிறைந்துள்ள சத்துக்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்குமா அல்லது குறைவாக கிடைக்குமா என்றுள்ளது. பிற சமையல் முறையை விட இதனை வேக வைத்து உண்பதால் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும்.

சரும ஆரோகியதிர்க்கு ப்ரோக்கோலி (Broccoli Skin Benefits)

ப்ரோக்கோலி பூக்களின் தலைகளை கொண்ட ஒரு காய் வகை. இதனை சாலட், சூப், குருமா, பிரியாணி என்று பல வகை உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். இது சற்று கசப்பாக இருந்தாலும், சுவையான ஒரு காய். இதில் பல ஆரோக்கிய குணங்களோடு, உங்கள் சருமத்தையும், தலை முடியையும் சீர் படுத்தி நல்ல தோற்றம் பெற உதவுகின்றது. இந்த வகையில், ப்ரோக்கோலி எப்படி உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகப் படுத்த உதவுகின்றது என்று பார்க்கலாம்

1. சிறந்த சன்ஸ்க்ரீன்

6

ADVERTISEMENT

ப்ரோக்கோலி செயற்கையான சன்ஸ்க்ரீன் லோசங்களை விட, இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு தருகின்றது. இதனால் சருமத்தில் ஏற்படும் புண், தடிப்பு மற்றும் சிவந்தல் போன்ற பிரச்சனைகள் குறைய இது உதவுகின்றது.

2. சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகின்றது

ப்ரோக்கோலி சேதமடைந்த சருமத்தை விரைவில் குணப்படுத்த உதவுகின்றது. இது இறந்த அணுக்களை வெளியேற்றி, புதிய அணுக்களை சருமத்தில் உற்பத்தி செய்ய உதவுகின்றது. இதனால் உங்கள் , புத்துணர்ச்சியையும் பெறுகின்றது.

3. சரும புற்றுநோய் ஏற்படாமல் தடுகின்றது

இது யு வி கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பதால், அதிக அளவு சருமத்தில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உதவுகின்றது. இதனால் உங்கள் சருமம் மேலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. மேலும் இரத்தத்தை சுத்தப் படுத்துவதால், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைகின்றது.

4. ஒளிரும் சருமம்

5

ADVERTISEMENT

ப்ரோக்கோலியில் நார் சத்து அதிகம் உள்ளதாலும், இது இரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதாலும், சருமதிற்கு தேவையான சத்துக்கள் எளிதாக கிடைகின்றது. இதனால் உங்கள் சருமம் மிருதுவாகவும் நல்ல பொலிவோடும் ஒளிருகின்றது.

மேலும் படிக்க – ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்) ! 

5. வயதான தோற்றத்தை குறைகின்றது

வயதாகும் போது முகத்தில் உள்ள சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் தோன்றும். இவை உங்களுக்கு வயதாகி விட்டது என்று காட்டுவதோடு, உங்கள் முக அழகையும் குறைக்கும். எனினும், ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் C, B மற்றும் E முகத்தில் ஏற்படும் மெளல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் பருக்களை போக்கி, இளமையான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சரும ஆரோகியத்தையும் அதிகப் படுத்தும்.

6. முக பருக்களை அகற்றும்

ஜின்க் அதிக அளவு இருப்பதால், முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை உடனடியாக குணப்படுத்த ப்ரோக்கோலி உதவுகின்றது. ப்ரோக்கோலியை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நாளடைவில் உங்கள் முகத்தில் மற்றும் சருமத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காணலாம். மேலும் இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் முகத்தில் இருக்கும் தழும்புகளை குணப்படுத்தவும் உதவுகின்றது.

ADVERTISEMENT

7.ஆரோக்கியமான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்

8

ப்ரோக்கோலியில் வைட்டமின் C மற்றும் E நிறைந்துள்ளதால் அதிக ஆக்ஸிஜனேற்றத்தைக் கொடுக்கின்றது. மேலும் வைட்டமின் C

8. கொலாஜன் உற்பத்தியை அதிகப் படுத்துவதால் சருமம்

எப்போதும் புதுனற்சியோடும், பொலிவோடும் இருகின்றது. இது மேலும் சூரிய கதிர்களால் எப்ராடும் பதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

9. சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

இதில் ஜின்க், செம்பு மற்றும் பாஸ்பராஸ் இருப்பதால் சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தி எந்த வித நோயும் தாக்காமல் இருக்க உதவுகின்றது, மேலும் இதில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் மற்றும் அமினோ அமிலங்கள் சருமம் இளமையாக இருக்க உதவுகின்றது.  

ADVERTISEMENT

10. ப்ரோக்கோலி மற்றும் தலை முடி வளர்ச்சி

9

சரும பாதுகாபிற்கும், ஆரோகியதிற்கும் ப்ரோக்கோலியின் பயன்களை பற்றி தெரிந்து கொண்ட பின், இப்போது தலை முடி நன்கு ஆரோகியத்தோடு வளர எப்படி பயன் படுகின்றது என்று பார்ப்போம்

11. முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்

இதில் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், தலை முடி வளர்ச்சியை அதிகப் படுத்த உதவுகின்றது. இந்த வைட்டமின்கள் சீபம் உற்பத்தியை அதிகப் படுத்துவதால், இயற்கையாகவே உங்கள் தலை முடிக்கு ஈரத்தன்மையை அதிகப் படுத்துகின்றது. இதனால் வேர் முதல் நுனி வரை தலை முடி நல்ல வளர்ச்சியை பெறுகின்றது.

12. தலை முடிக்கு போஷாக்களிகின்றது

ப்ரோக்கோலி சருமத்திற்கு மட்டுமல்லாது, தலை முடிக்கும் தேவையான போஷாக்கைத் தருகின்றது. இதனால், உங்கள் தலை முடி நல்ல அடர்த்தியாகவும், கருமையான நிறத்திலும் உங்கள் முகத்திற்கு மேலும் அழகை ஊட்டுகின்றது.
நல்ல கண்டிஷினர்: ப்ரோக்கோலி ஒரு இயற்கையான நல்ல கண்டிஷனராக செயல் படுவதால், இது உங்கள் தலை முடிக்கு பளபளப்பை தருகின்றது. மேலும் உங்கள் கூந்தல் மிருதுவாக இருப்பதையும் நீங்கள் உணருவீர்கள்.  இதனால் குறிப்பாக தலை முடி வரண்டு போகாது. மேலும் நல்ல நீளமாகவும் வளரும்.

ADVERTISEMENT

ப்ரோக்கோலியை ஏன் நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?

10

ப்ரோக்கோலியின் முக்கியத்துவம் –

  1. ப்ரோக்கோலி உங்கள் உடலுக்கு எப்படி நல்ல ஆரோக்கிய பலன்களை தருகின்றது என்று பார்த்தோம். இப்போது, நீங்கள் தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்வதால், எப்படி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகின்றது என்று பார்ப்போம்
  2. அணுக்களின் சிதைவை குறைக்கின்றது. இதில் குளுக்கோசினொலேட்ஸ் மற்றும் வைட்டமின் C இருப்பதால், விஷத்தன்மையான அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கின்றது. இதனால் சருமத்தில் இருக்கும் அணுக்கள் சிதைவடைவதை தடுகின்றது.
  3. கண் பார்வை சீராகின்றது. வயதாகும் போது பொதுவாக மனிதர்களுக்கு கண் பார்வை மங்கும் சூழல் ஏற்படும். ப்ரோக்கோலியில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் இருப்பதால் வயதாகும் போது கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, கண் பார்வை சீராக இருக்க உதவுகின்றது. குறிப்பாக மாலைக் கண் நோய் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும்போது, நாளைடைவில் கண் பார்வை சீராவதை காணலாம்.
  4. தைராய்டு பிரச்சனையை குறைக்கும். ப்ரோக்கோலியில் இருக்கும் சத்துக்கள், தைராய்டு சுரபி சீராக செயல் பட உதவுகின்றது. இதனால் எந்த வகை தைராய்டாக இருந்தாலும் அதனை குணப் படுத்த இது பெரிதும் உதவுகின்றது.
    நல்ல ஜீரணத்தை உண்டாக்கும். ப்ரோக்கோலி யை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், அஜீர்ண பிரச்சனைகள் குறையும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் எளிதாக உணவை ஜீரணமடைய உதவும். இதனால் நீங்கள் ஆரோக்கியமாக உணருவீர்கள்.
  5. இதில் புரத சத்து அதிகம் உள்ளதால் தலை முடி நன்கு ஆரோக்கியமாக இருக்க உதவும். ஒரு கப் வேக வைத்த ப்ரோக்கோலியை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், உங்கள் தலை முடி நன்கு வளர தேவையான போஷாக்கு இதில் இருந்து கிடைக்கும்
  6. இதில் இயற்கையாகவே சீபம் என்கின்ற சத்து நிறைந்துள்ளதால் தலை முடி வேர்களை பலபடுத்த உதவுவதோடு, உங்கள் கூந்தலுக்கு நல்ல பளபளப்பையும், அடர்த்தியையும், ஈரத்தன்மையையும் தருகின்றது.

ப்ரோக்கோலி விதை எண்ணை

ப்ரோக்கோலி விதை எண்ணையில் அதிகம் ஆக்ஸிஜனேற்றம் இருப்பதாலும், தனித்துவமான கொழுப்பு அமிலம் இருப்பதாலும் இது சருமம் மற்றும் தலை முடி பராமரிபிற்கு அதிகம் பயன் படுத்தப் படுகின்றது. இதனால் இரசாயனம் கலந்த பொருட்களை பயன் படுத்தும் தேவை குறைகின்றது.

இந்த ப்ரோக்கோலி விதைகள் முளைக்க வைக்கப்படுவதால் அதில் அதிகம் சத்துக்கள் நிறைந்திருக்கும். அதில் அதிகம் க்ளுகோரபனின்  அதிகம் இருப்பதால் மேலும் நல்ல பலன்களை தருகின்றது.

ப்ரோக்கோலி விதைகள் எப்படி உங்கள் சரும பாதுகாபிற்காக பயன் படுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

ADVERTISEMENT
  • இந்த விதை என்னை உங்கள் சருமம் எபோதும் ஈரத்தன்மையோடு இருக்க உதவுகின்றது.
  • இந்த எண்ணை தலை முடி பராமரிபிர்க்கும் பயன் படுத்தப் படுகின்றது. இதனால் உங்களுக்கு இளமையான தோற்றம் கிடைகின்றது
  • சுற்று சூழலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றது.
  • இந்த எண்ணையில் வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கு போதுமான ஊட்ட சத்தை தருகின்றது.
  • ரெட்டினால் இதில் அதிகம் உள்ளதால் உங்கள் சருமத்திற்கு
    போதுமான போஷாக்கை தருகின்றது
  • மேலும் இந்த என்னை உங்கள் சருமம் மிருதுவாகவும், நல்ல தோற்றத்தோடும் இருக்க உதவுகின்றது

ப்ரோக்கோலி பேஸ் பாக் எப்படி தயாரிப்பது?

11

ப்ரோக்கோலியில் பல நற்குணங்கள் இருகின்றது. இது உங்கள் சருமத்திற்கு எதிர் பார்த்த பலன்களை தருவதால் இது உங்கள் சருமம் இளமையாகவும், நல்ல பொலிவோடும் இருக்க உதவுகின்றது. ப்ரோக்கோலி பயன் படுத்தி நீங்கள் எளிதாக உங்கள் வீட்டிலேயே பேஸ் பாக் செய்து விடலாம். இது நீங்கள் எதிர் பார்த்த பலன்களை தருவதோடு, நீங்கள் உற்சாகம் படும் அளவிற்கு உங்கள் அழகையும் அதிகரிக்கும்.

நீங்கள் இந்த பேஸ் பக்கை ப்ரோக்கோலி பொடி கொண்டும் அல்லது நேரடியாக ப்ரோக்கோலி காயை கொண்டும் வீட்டில் தயாரித்து விடலாம்.

ப்ரோக்கோலி பொடியை பயன் படுத்தி எப்படி பேஸ் பாக் செய்வது?

செயல்முறை குறிப்பு:

ADVERTISEMENT
  • 1 தேக்கரண்டி ப்ரோக்கோலி பொடியை எடுத்துக் கொள்ளவும்
    அதனோடு 1 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்
  • இரண்டையும் நன்கு கலந்து ஒரு கலவை போல் ஆனதும் உங்கள் முகத்தில் தேய்க்கவும்
  • 1௦ முதல் 2௦ நிமிடங்கள் அப்படியே மசாஜ் செய்து விட்டு விடவும்
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

ப்ரோக்கோலி பச்சை காயை பயன் படுத்தி பேஸ் பாக் செய்வது எப்படி?

செயல் முறை குறிப்பு:

  • 4 சிறிய ப்ரோக்கோலி பூக்களை எடுத்துக் கொள்ளவும்
  • 1 தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும்
  • 2 தேக்கரண்டி கிரீன் டீ நன்கு ஆரியத்தை எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு ப்ளெண்டர் மற்றும் சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்

எப்படி செய்வது:

  • முதலில் கிரீன் டீ நன்கு கொதித்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ப்ரோக்கோலி பூக்களை எடுத்து நன்கு கழுவி சிறிதாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் ஆரிய கிரீன் டீ சேர்த்துக் கொள்ளவும்
  • 2 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்
  • இவை அனைத்தையும் நன்கு ப்ளெண்டர் வைத்து கலந்து கொள்ளவும்
  • பின் இந்த மாஸ்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் வரை விட்டுவிடவும்
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

இதனை மாதம் 2 அல்லது 3 முறை செய்து வந்தால், உங்கள் சருமம் நாளடைவில் நல்ல பொலிவையும், அழகையும், ஆரோகியத்தையும் பெரும்.

ப்ரோக்கோலி ஏற்படுத்தும் உபாதைகள்

ப்ரோக்கோலியில் பல நற் குணங்கள் இருந்தாலும், இதனை அதிகம் பயன் படுத்தும் போதோ, அல்லது, ஒவ்வாமை இருப்பவர்கள் பயன் படுத்தும் போதோ சில உபாதைகள் ஏற்படக் கூடும். அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே சில தகவல்கள்;

ADVERTISEMENT
  • அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது இரத்த உறைதல் ஏறபடக் கூடும்
  • இதன் பயன் பாடு சருமத்தில் அதிகமாகும் போது அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும்
  • இது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்
  • சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தக் கூடும்
  • தைராய்டு பிரச்சனைகளை குறைப்பதற்கு மாறாக அதிகப் படுத்தக் கூடும். இதனால், சருமம் வறண்டு போகவும் வாய்ப்பு உள்ளது  

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ் ,ஷ்டார்ஸ்டோக்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

30 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT