logo
ADVERTISEMENT
home / Health

கருப்பட்டி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்!

கருப்பட்டி என்றால் என்ன? (What Is Jaggery)

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகளவு கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரையை போன்று கருப்பட்டி பதனீடு செய்யப்படாததால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பல்வேறு நிலைகளை கடந்து கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது முதலில் இயந்திரங்களை பயன்படுத்தி கரும்பில் இருந்து சாற்றை பிரித்து எடுப்பார்கள்.

gifskey, pexels, pixabay, Youtube

ADVERTISEMENT

பின்னர் இந்த சாற்றில் உள்ள கசடுகளை வடிகட்டி அதனை கொதிக்க வைப்பார்கள். இந்த சாறு பதமான நிலைக்கு வரும் வரை கொதிக்க வைப்பார்கள். சாறு கொதிக்கும் போது அதனை தொடர்ந்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும். சுமார் 200 டிகிரி செல்சியசில் கொதிக்க வைப்பார்கள். இதனால் கரும்பு சாற்றில் உள்ள நீர் ஆவியாகி பதமான நிலைக்கு வந்து விடும். இதனை தொடர்ந்து இந்த சாற்றை அச்சுகளில் ஊற்றி அவை கெட்டியானதும் கருப்பட்டி தயாராகிவிடும். சாறு ஆறியதும் அதனை கைகளால் பிடித்து தயார் செய்யப்படும் கருப்பட்டி மண்டை கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது.

கருப்பட்டி பலன்கள் (Benefits Of Jaggery )

கருப்பட்டியில் பல்வேறு நற்குணங்கள் நிறைந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. கருப்பட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை இங்கு பார்க்கலாம்.

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (Boosts Immunity)

உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட முக்கிய காரணமே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவது தான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் குறிப்பாக குழ்நதைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கருப்பட்டியால் செய்த உணவுகளை வழங்க வேண்டும். ஆரோக்கிய வாழ்விற்கு இனிப்பை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். ஆனால் சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தப்படும் கருப்பட்டியில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கருப்பட்டி பாகு செய்து அதில் நெல்லிக்காய்களை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

ADVERTISEMENT

2. இரத்த சோகையை தடுக்கிறது (Prevents Anemia)

இரத்த சோகையால் ஆயிரக்கணக்கான இளம் பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுகின்றனர். இரும்பு சத்து குறைவால் தான் இரத்த சோகை ஏற்படுகிறது. பனை வெல்லத்தை விட கரும்பில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டியில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.100 கிராம் வெல்லத்தில் 2.64 மி.கி இரும்பு சத்து உள்ளதால்,கருப்பட்டி இரத்த சோகையை குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. மேலும் இரத்த சோகை வராமல் இருக்க பயறு வகைகளுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் : அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

3. மூட்டு வலிக்கு நிவாரணம் (Relieves Joint Pain)

மூட்டு வலி, தசை வலி ஏற்படுவோருக்கு மருத்துவர்கள் கருப்பட்டி சாப்பிடுமாறு பரிந்துரைப்பார்கள். ருமாட்டிக் பெயின் எனப்படும் மூட்டு வலி, அசிடிட்டியால் ஏற்படுகிறது. பாலில் கருப்பட்டி சேர்த்து அருந்தி வர மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். கருப்பட்டி சாப்பிடுவதால் எலும்புகள் பலம் பெரும். இதனால் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு கருப்பட்டி நல்ல மருந்தாகும்.

4. நீரழிவு நோயை கட்டுப்படுத்த (Control The Diabetes)

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி(jaggery) சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுகுள் இருக்கும். சர்க்கரையில் ஏராளமான செயற்கை முகவர்கள் இருப்பதால் அது நீரழிவு நோயின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும். எனவே நீரழிவு நோயாளிகள் குறைந்த அளவு கருப்பட்டி சாப்பிடலாம். எனினும் மருத்துவர்கள் அறிவுரையின்படி சாப்பிடுவது நல்லது.

ADVERTISEMENT

5. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த (Improve Skin Health)

கருப்பட்டியில் தாதுக்கள், மினரல்ஸ் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. கருப்பட்டி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இதனால் தேக ஆரோக்கியம் மேம்படுகிறது. தோல் சுருக்கங்கள், கருப்பு திட்டுகள் உள்ளிட்டவற்றை கருப்பட்டி போக்கும் தண்மை கொண்டுள்ளது. பால், ஜூஸ் உள்ளிட்டவற்றில் கருப்பட்டியில் சேர்த்து சாப்பிட்டு வர தேகம் பொலிவு பெறும்.

6. இரத்தத்தை சுத்திகரிக்கிறது (Purifies Blood)

கருப்பட்டியில் அதிகளவிலான சத்துகள் உள்ளன. கருப்பட்டி சாப்பிடுவதால்,  உடலின் இருக்கும் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. தினசரி உணவில்  எப்போதும் சிறிதளவாவது கருப்பட்டி சாப்பிட வேண்டும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளிட்ட தீங்கு விளைவிப்பவற்றை நீக்கும் தன்மை கருப்பட்டியில் உள்ளது.

7. செரிமானத்தை மேம்படுத்த (Improve Digestion)

கருப்பட்டியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. உணவுக்குழல், வயிறு, நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் சக்தி வாய்ந்தது. உணவு உண்ட பிறகு ஒரு துண்டு கருப்பட்டி சாப்பிட்டால் செரிமானத் திரவங்களை தூண்டி, ஜீரணத்தை அதிகரிக்கும். மேலும் அசிடிட்டி எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்சனை கருப்பட்டி சாப்பிடுவதால் கட்டுக்குள் வைக்கப்படும்.

8. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது (Controls Blood Pressure)

கருப்பட்டியில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் உள்ளன. இவை உடலில் உள்ள அமில அளவை சீராக வைத்து கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே கருப்பட்டி தினசரி உணவில் சேர்த்து கொள்வதால் சாதாரண அளவிலான இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

ADVERTISEMENT

9. ஆக்ஸிஜனேற்றம் வழங்குகிறது (Provides Antioxidants)

கருப்பட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடன் சமச்சீர் நிலையை அடைந்துவிடும். உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் பாசிப்பருப்புடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சியடையும்.

gifskey, pexels, pixabay, Youtube

10. இயற்கை இனிப்பு முகவர் (Natural Sweetening Agent)

கருப்பட்டி நமது உடலுக்கு இயற்கையான இனிப்பு சத்தை வழங்குகிறது. சந்தையில் ஏராளமான இயற்கை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் கிடைக்கின்றன. ஆனால் வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை விட கருப்பட்டி ஆரோக்கியமானது. அனைத்து விதமான ரசாயனத்தையும் முறியடிக்கும் தன்மை கருப்பட்டியில் உள்ளது.

ADVERTISEMENT

11. ஆஸ்துமாவைத் தடுக்கிறது (Prevents Asthma)

ஒவ்வாமை எனப்படும் ஆஸ்துமா நோய்க்கு கருப்பட்டி நல்ல மருந்தாகும். கருப்பட்டியில் நீர்ப்புத் தன்மை அதிகம் இருப்பதால், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் சமச்சீர் அடைந்துவிடும். மேலும் கருப்பட்டி ஒரு ஆன்டி அலர்ஜிக் என்பது குறிப்பிடத்தக்கது.

12. ஆற்றல் நிறைந்தது (Good Source Of Energy)

100 கிராம் வெல்லத்தில் 80 மி.கி. கால்சியம் உள்ளது. மேலும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட சத்துகள் கருப்பட்டியில் உள்ளது. இதனால் கருப்பட்டி சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. போதுமான எனர்ஜி வெல்லத்தில் இருப்பதால் குழந்தகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.

13. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது (Boosts Body Metabolism)

தினசரி கருப்பட்டி சாப்பிட்டு வர உடல் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்த உணவை கொடுக்க வேண்டும். பயறு வகைகளை முளை கட்ட வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்னாக்சாக இதனை கொடுக்க உடல் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிப்பதை காணலாம்.

14. சுத்தப்படுத்தும் முகவர் (Cleansing Agent)

கருப்பட்டி இயற்கையிலேயே சுத்தப்படுத்தும் முகவராக செயல்படுகிறது. உடலில் உள்ள கெட்ட சத்துகள், தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால்கள் உள்ளிட்டவற்றை அழிக்கும் சக்தி கருப்பட்டியில் உள்ளது.

ADVERTISEMENT

15. தாதுக்கள் நிறைந்தவை (Rich In Minerals)

கருப்பட்டியில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம். கருப்பட்டி மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்து, தாதுக்கள், கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச் சேர்ப்பதால் இந்த தாது உள்ளிட்ட சத்துகள் அழிக்கப்படுகிறது. ஆனால் கருப்பட்டி தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை.இதனால் கருப்பட்டி சாப்பிடுவதால் இந்த சத்துக்கள் நமது உடலுக்கு நேரிடையாக கிடைக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு (Beauty Benefits Of Jaggery)

கருப்பட்டியில் பல்வேறு நற்குணங்கள் நிறைந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. கருப்பட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை இங்கு பார்க்கலாம்.

1. சரும நிறமிழப்பை சரி செய்கிறது (Removes Pigmentation)

கருப்பட்டி அழகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் உள்ள நிறமிகளை நீக்கி ஒளிரச்செய்கிறது. கருப்பட்டி தூளாக்கி அதனுடன் தக்காளி சாறு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு காய்ந்தடன் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வர முகம் புத்துணர்ச்சி பெறும்.

ADVERTISEMENT

gifskey, pexels, pixabay, Youtube

2. முகப்பருக்களை குறைகிறது (Reduces Pimples)

கருப்பட்டி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தேக அழகிற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி சாப்பிடுவதால் முகப்பருக்கள் குறைகிறது. தினமும் ஒரு எலுமிச்சை அளவிலான கருப்பட்டி சாப்பிட்டு வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை குறைந்து முகத்திற்கு பளபளப்பை தருகிறது.

3. கூந்தலுக்கு (Healthy hair)

கருப்பட்டியில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. கருப்பட்டி தூளுடன், இரண்டு கப் தயிர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து முடியில் தடவ வேண்டும். குளிக்கும் முன்னர் இதனை தடவி சூழல் முறையில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதனை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் தண்ணீரால் அலச வேண்டும். வாரம் ஒரு முறை குளித்து வர முடி மென்மையாகும்.

ADVERTISEMENT

4. தோலுக்கு ஊட்டமளிக்கிறது (Nourishes Skin)

கருப்பட்டியில் உள்ள க்ளைகோலிக் அமிலம் தோலுக்கு ஊட்டமளிக்கிறது. கட்டிகளை மற்றும் பருக்களால் உண்டான தழும்புகள் முகத்தில் இருந்து எளிதில் மறைவதில்லை. இதனை கருப்பட்டி பயன்படுத்தி போக்கலாம். கருப்பட்டித்தூளுடன், எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்ட் செய்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். தினமும் இந்த பேஸ்டை தடவி வர விரைவில் தழும்புகள் மறைந்து விடும்.

5. முக சுருக்கங்களை நீக்கும் (Fights Wrinkles)

கருப்பட்டியில் க்ளைகோலிக் என்ற அமிலம் உள்ளது. இந்த அமிலமானது சருமத்தில் உள்ள எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது.

வெல்லம் சாப்பிடும் முறை (How To Use)

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். பணியாரம், தோசை, ஆப்பம், சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளிலும் கருப்பட்டியை சேர்த்து சாப்பிடலாம்.

ADVERTISEMENT

1. கருப்பட்டி சப்பாத்தி (Jaggery Chapati)

இனிப்பு சப்பாத்தி


என்னென்ன தேவை?


கோதுமை மாவு – 1 கப்

கருப்பட்டி துருவல் – தேவையான அளவு

ADVERTISEMENT

ஏலக்காய் தூள் – சிறிது

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 டீஸ்பூன்


எப்படி செய்வது?

ADVERTISEMENT


கருப்பட்டி துருவலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் அந்த நீரை வடிகட்டி அதில் கோதுமை மாவு, ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து பிசைய வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தேய்க்க வேண்டும். பின்னர் இதனை நெய் சேர்த்து தோசைக்கல்லில் போட்டு சுட வேண்டும்.

gifskey, pexels, pixabay, Youtube

2. ஜூஸ்களில் சேர்த்து பருகலாம் (Drink With Juice)

அனைத்து விதமான பழ ஜூஸ்களிலும் கருப்பட்டி சேர்த்து அருந்தலாம். சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்ட உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இனிப்புக்காக சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்க்கும் போது, செரிமான சக்தியை அதிகரிக்கும். மேலும் நாம் சேர்க்கும் சர்க்கரையின் பாதி அளவு கருப்பட்டி சேர்த்தாலே போதுமானது.

ADVERTISEMENT

3. டீ / காபியில் சேர்க்கலாம் (Add To Tea Or Coffee)

டீ அல்லது காபி போற்ற பானங்களிலும் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம். பாசிப்பயறு மற்றும் ஜவ்வரிசி பாயாசம் போற்றவற்றிலும் வெல்லம் சேர்த்து சாப்பிட எலும்புகள் வலு பெறும்.

கருப்பட்டியால் ஏற்படும் பாதிப்புகள் (Harmful Effects Of Jaggery)

கருப்பட்டி சாப்பிடுவது உடலுக்கு நன்மையே என்றாலும், ஒரு சில பாதிப்புகள் இருப்பது உண்மையே. கருப்பட்டி திறந்த முறையில் தயார் செய்வதால் பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பட்டி சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என காணலாம்.

ADVERTISEMENT

1. ஒட்டுண்ணி நோய் வாய்ப்பு (Raise Of Parasitic Infections)

கருப்பட்டி தயாரிக்கும் முறையில் பல்வேறு அசுத்தங்கள் கலந்துள்ளன. பெரும்பாலும் திறந்த வெளியில் கருப்பட்டி காய்ச்சப்படுவதால் அதில் ஏராளமான தூசுகள் மற்றும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பட்டிப்பாகு காய்ச்சப்பட்டு அப்படியே அச்சில் வைத்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த கருப்பட்டியில் உள்ள தொற்றுகள் உடலுக்குள் சென்று குடலில் ஏராளமான ஒட்டுண்ணி தொற்றுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கோடையால் பொலிவற்ற முகத்தை புத்துயிர் பெற செய்யும் சூப்பர் மேஜிக் டிப்ஸ்!

2. வெல்லம் அஜீரணத்திற்கு வழிவகுக்கும் (Can Lead To Indigestion)

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அறிந்ததே. கருப்பட்டி அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

3. உடல் எடை அதிகரிப்பு (Increase The Weight)

கருப்பட்டியில் இரும்பு, மினெரல்ஸ் சத்துக்கள், 100 கிராமில் 385 கலோரிகள் இருப்பதால் உடலுக்கு தேவையான சக்தியை தர வல்லது. இதனால் தொடர்ந்து கருப்பட்டி சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்னை ஏற்படும். குறிப்பாக இடுப்பை சுற்றியுள்ள தசைகள் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

4. மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும் (May Cause Constipation)

கருப்பட்டி சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகளவில் கருப்பட்டி சாப்பிடும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும். குறிப்பாக கற்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளல்தால், அவர்கள் குறைந்த அளவில் கருப்பட்டி சேர்த்து கொள்வது நல்லது.

5. ஒவ்வாமை பிரச்னை(Allergy Issue)

வெல்லம் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். புதிதாக கருப்பட்டி சேர்த்து கொள்ளும் போது ஒவ்வாமை ஏற்படும். அதனால் வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

கருப்பட்டி தொடர்பான கேள்விகள் (FAQ)

1. கருப்பட்டி தினமும் சாப்பிடுவது நல்லதா? (Is it safe to eat jaggery everyday?)

கருப்பட்டி தினமும் சாப்பிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது உடலில் இருந்து மோசமான நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் பெண்கள் கருப்பட்டி கலந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வர மென்சுரஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் டயட்டில் இருப்பவர்கள் குறைந்த அளவில் எடுத்து கொள்வது நல்லது.

2. கருப்பட்டியில் கால்சியம் சத்துகள் உள்ளதா? (Does jaggery contain calcium?)

ஆம். கருப்பட்டியில் போதுமான கால்சியம் சத்துகள் உள்ளன. பாலுடன், கருப்பட்டி சேர்த்து தினமும் இரவில் அருந்தி வர உடலுக்கு தேவையான கால்சியம் சத்துகள் கிடைத்துவிடும். இதனால் இடுப்பு வலி, மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். கால்சியம் சத்துகள் மட்டுமல்லாது விட்டமின் பி, துத்தநாகம், ஜின்க், மினெரல்ஸ் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட  சத்துக்களும் உள்ளன.

ADVERTISEMENT

3. சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தலாம்? (Can we eat jaggery instead of sugar?)

தாராளமாக பயன்படுத்தலாம். சர்க்கரைக்கு உள்ள இனிப்பை விட கருப்பட்டியில் அதிகமாக உள்ளது. கருப்பட்டியில் 65 முதல் 85 சதவிகித சுக்ரோஸ் உள்ளது. கருப்பட்டியில் எந்த விதமான ரசாயமும் இல்லை. கரும்பில் இருந்து இயற்கையான முறையில் கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. கருப்பட்டி சுத்திகரிக்கப்படாததால் மிகவும் மெதுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்துவது நலமே.

4. கருப்பட்டி உடலுக்கு நல்லதா இல்லையா? (Jaggery is good for health or not?)

கருப்பட்டி சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட நச்சுகள் வெளியேறி உடல் தூய்மையடையும் என்பதால் கருப்பட்டி சாப்பிடுவது  உடலுக்கு நல்லது. உடலில் நோய் எதிர்பு சக்தியை அதிகரித்து எவ்வித நோய்களும் தாக்காமல் தடுக்கிறது. பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால் கருப்பட்டி உடலுக்கு நன்மை தரும்.

5. நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடலாமா? (Is jaggery allowed for diabetics patients?)

கருப்பட்டி சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடுவதை தவிர்க்கலாம் அல்லது மிகவும் குறைந்த அளவு மட்டும் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உணவை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே மருத்துவர்கள் பரிந்துரையின் படியே கருப்பட்டி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஆலிவ் ஆயிலின் மருத்துவ நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

18 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT