எள் விதையானது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருபவை, பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியவை. பல நோய்களுக்கு அருமருந்தானவை. இத்தனை நற்குணங்கள் கொண்ட எள் விதையை நம் உணவில் பலவழிகளில் பயன்படுத்தவும் முடியும்.
எள் விதை எந்த அளவில் எப்படி சாப்பிட வேண்டும்?
எள் விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
எள் விதை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க வளைவுகள்?
எள் விதை தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் கேள்விகள்?
எள் விதை என்பது (Sesame Seeds) ஒரு மருத்துவ மூலிகை செடி. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று நிரங்களில் பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் மிகச் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு. எள் விதைகளில் எண்ணெய் எடுக்கப்படுகின்றது, ஆனால் பொதுவாக இதை எள் எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்றே அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் விஷேட தன்மை கொண்டது.
இது ஒருபக்கம் இருக்க, பல விதைகளை நாம் அவற்றின் பலன்களை அறியாமலே அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இங்கே, எள் விதைகளின் மருத்துவப் பயன்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பார்ப்போம்.
Also Read About தோலுக்கான அத்தி
அநேக வீடுகளில் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் குளிர்ச்சியையும் இந்த எண்ணெய் தரும். கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை எள் முற்றிலுமாக தடுக்கின்றது. உடலுக்கு நல்ல செரிமானத்தை தரும் என்பதால் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பார்கள். ஆனால் அதை விட அதிகம் பலன் தரக்கூடியது எள் தான். எள்ளை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் அல்லது சமையலில் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். அதை விட அதிகமாக சேர்த்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எள் விதையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால் நமது உடல் தேவையான சத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை செரிமானம் செய்ய கால தாமதம் ஆகும். இதனால் அளவாக எடுத்துக்கொள்வதே மிகவும் நல்லது.
Also Read : வேப்ப இலைகளின் நன்மைகள்
எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள். அதற்கு இந்த எள்ளு விதைகளை சாலட்டுகள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்களின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடலாம்.
எள்ளு விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சீசேமோல், அழற்சி எதிர்ப்பு பண்புகளான பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
Also Read About வெல்லம் ஆரோக்கியத்திற்கு நன்மைகள்
இரும்பு சத்தினால் ஏற்படும் இரத்த சோகை குறைபாட்டினை நீக்கும் தன்மை எள் விதையில் உள்ளது. வெள்ளை நிற எள்ளை விட கருப்பு நிற எள்ளில் அதிக இரும்பு சத்து உள்ளதால் இரத்த சோகையை தடுத்து இரும்பு சத்துக்களை உடலுக்கு அதிக அளவில் தருகின்றது.
எள்ளில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
Also Read
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் என் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதனால் தான் அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். எந்த வித நோயும் அவர்களுக்கு இருந்ததாக பெரிதாக சான்றுகள் இல்லை. உணவே மருந்தாக உண்டு வழமுடன் வாழ்ந்தனர். இந்த எள் எண்ணெய் எந்தெந்த நோயை போக்க வள்ளது.
வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 சதவீதம் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஃபோலிக் அமிலம் தேவையோ அதில் 25 சதவிதத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.
எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து மற்றும் நார் சத்துக்கள் உள்ளதாக விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளை காண்போம்.
1. சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
2. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
3. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது
4. கொழுப்பின் அளவை குறைக்கிறது
5. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது
எள் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் முற்றிலுமாக நீக்கி நல்ல பளபளப்பை தர கூடியது.
Also Read : சருமத்திற்கான கெமோமில் தேநீர்
மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.
எள்ளு விதையில் மக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எள்ளு விதை அல்லது எள்ளு எண்ணெய் சர்க்கரை நோயைத் தடுப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும் இது ஹைப்பர் சென்சிடிவ் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா குளுக்கோஸை மேம்படுத்தவும் செய்யும். தினமும் 1 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால் இரத்ததில் இருக்கும் நீரிழிவு நோய்கான செல்கள் முற்றிலுமாக இரந்துவிடும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எள்ளு விதை மற்றும் சர்க்கரை நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த எள்ளு விதைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்தது. ஏனெனில் எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் முக்கிய சத்தாகும்.
எள்ளு விதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இரத்ததில் படிந்திருக்கும் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிபடியாக குறைக்கின்றது. ஏனெனில் இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள்ளு விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது.
எள்ளு விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் எள்ளு விதைகளை அன்றாடம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும்.
எள்ளுவிதையானது புற்று நோயை அடியோடு அகற்றவள்ளது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் இருப்பதால் இவை புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை துரத்த வல்லது.
ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான காப்பர், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து எலும்புகள், முட்டுகள் மற்றும் இரத்த நாளங்களை வலிமைப்படுத்தும்.
மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் தினமும் எள்ளு விதைகயை சாப்பிட்டு வந்தால், ஆல்கஹாலால் கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.
ஒரு கையளவு எள்ளு விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளையாவது சாப்பிடுங்கள்.
எள்ளில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
சிறுநீரகம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
சிலர் எப்போதும் ஒருவித மன அழுத்ததில் இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.
எடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள் எள் பொடியை தினமும் எலும்பிச்சை மற்றும் தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் போன்று உருவாக்கி கொள்ளவும். தினமும் ஒரு உருண்ட காலை எழுந்ததும் உண்டு வந்தால் எடை குறைய தொடங்கும்.
நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வாயில் இருக்கும் துருநாற்றம் குறையும். வாய்க்கு நல்ல ஆரோக்கியத்தை எள் எண்ணெய் தருகின்றது. தேவையற்ற பூச்சிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு புத்துணர்ச்சியை தருகின்றது.
தினமும் உணவில் எள்ளை அல்லது காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் ஊர வைத்த எள்ளு தண்ணீரை குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கி சருமம் பொலிவடையும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி போன்ற நோயிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கும்.
எள் எண்ணெய்யிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய்யை கொண்டு தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். முடியின் அடிப்பகுதியில் இருக்கும் ஸ்கால்ப் நன்கு வளம் பெற்று முடி கொட்டுவது முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.
எள் விதை பவுடருடன் சிறிது கிராம்பு பொடியை சேர்த்து தினமும் காலை பள் துளக்கிய பிறகு தடவி வந்தால் பற்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் நல்ல பளபளப்பையும் பெறும். எள் விதை பொடியானது பற்களில் மேலுள்ள எனாமள்லை நன்கு உறுதி பெற செய்கிறது. நாம் உண்ணும் கடின உணவுகள் மற்றும் சத்து கோளாறுகளால் பற்களின் எனாமள்கள் தேய்ந்து விடுகின்றது. இந்த உராய்வை எள் விதையானது சரிசெய்கிறது.
30 வயதை தாண்டியவுடன் அனேகருக்கு முக சுருக்கம் ஏற்படும். அப்படியான முக சுருக்கம் உடையவர்கள் எள் விதையின் பொடியுடன் தேன் அல்லது பால் கலந்து இரவில் பேஸ் பேக் போன்று பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள் விதை பொடியை முகத்தில் தடவிய பிறகு சோப்போ, பேஸ் வாஸ் கொண்டோ முகத்தை கழுவக்கூடாது. 4 மணி நேரத்திற்கு முகத்தில் எந்த வித ரசாயணமும் பயன்படுத்த கூடாது. இதை தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
எள் விதை பவுடரை அரிசி மாவுடன் கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் போன்று தேய்க்க வேண்டும். இது முகத்திற்கு நல்ல பொலிவையும் இளமை தோற்றத்தையும் தருகின்றது. டெட் செல்களை அகற்றி முகத்திற்கு நல்ல ஈரபதத்தை தருகின்றது. முகம் எப்போதும் மினுமினுப்புடன் இருக்க நல்ல இளமை தோற்றத்தையும் தந்து பராமரிக்க உதவுகின்றது.
எள்ளு விதையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ், தையமின், நார்ச்சத்து, ஜிங்க், வைட்டமின் பி6, புரோட்டீன், ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோஃபேன் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் அதிக அளவில் உட்கொண்டால் நமது உடல் ஏற்றுக்கொள்ளும் திறன் இல்லாத போது அதிக படியான பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது.
தொடர்ந்து எள் விதையை எடுத்து வருவதால் சிலருக்கு தோல் சம்மந்தமான அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அளவுக்கு அதிகமாக எள் எண்ணெய் அல்லது விதையினை உட்கொண்டால் வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சிலருக்கு குடல் புற்றுநோய், குடலுறுப்பு அழற்சி, குடல் வால் தொற்று போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தொடந்து எடுக்கும் பட்சத்தில் வயிற்றுப் போக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மருத்துவரின் சரியான ஆலோசனையின்றி தொடர்ந்து எள் விதை உண்பதால் கருச்சிதைவு, முடி உதிர்வு, மார்பக புற்று நோய் மற்றும் துாக்கம் இன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது
ஏதேனும் வியாதிக்கு மருந்து எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துறையின் பேரில் எள் விதையை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் சரும அரிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தினமும் எள் விதையினை உணவில் எடுத்துகொள்வதால் விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் சத்து நம் உடலிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகின்றது. இதனால் செரிமான சக்தி இயற்கையாகவே கிடைக்கின்றது.
தினமும் எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதிகமான நன்மைகள் கொண்ட எள்ளை தினமும் எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது
கட்டாயம் உண்டு. எனெனினும் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது நல்லது
மாதவிடாய் போன்ற பிரச்சணைகளால் அவதிபடுவோர் மற்றும் மாதவிடாய் நிற்கும் நேரத்தில் எள் விதையானது நல்ல பலனைத் தரும்
கற்பிணி பெண்கள் எள் விதையை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஒவ்வாமை காரணமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது
குழந்தைகளுக்கு எள் வதையானது ஏற்றது தான் என்றாலும் தினமும் கொடுப்பது அவ்வளவு நல்லது கிடையாது.
பட ஆதாரம் - gifskey,pexels,pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறுபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும்.
அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்