பயணம் – நீங்கள் பகிர்ந்து கொள்ள சில சுவாரசியமான கவிதைகள்!

பயணம் – நீங்கள் பகிர்ந்து கொள்ள சில சுவாரசியமான கவிதைகள்!

பயணம் அனைவருக்கும் மறக்க முடியாத பல நல்ல ஞாபகங்களை தரும். ஒவ்வொரு பயணமும் ஒரு ஏதோ ஒரு தாக்கத்தை தருகின்றது. நீங்கள் பயணம் செய்யும் காரணம் எதுவாக இருந்தாலும் சரி, பயணம் செய்யும் அந்த காலகட்டம், உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயணத்தை (travel) ரசிகின்றார்கள். எத்தனை சோகங்களும், வலிகளும் மனதில் இருந்தாலும், சில மணி நேர பயணம் ஒரு புத்துணர்ச்சியை மனதிற்குத் தருகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு நீங்கள் பயண வாழ்த்துக்கள் கூற (பகிர்ந்து கொள்ள) எண்ணினால், உங்களுக்காக சில சுவாரசியமான பயண கவிதைகள்(quotes/message) மற்றும் பொன்மொழிகள் இங்கே!

Table of Contents

  சுவாரசியமான பயணம் பொன்மொழிகள் (Interesting travel quotes)

  1. லேசான மனதோடு ஒரு பயணம்.....
  கண்கள் தேடும் இறங்கும் இடம் வந்ததோ....
  மனம் தேடும் இன்னும் சில நேரம் இந்த பயணம் நீடிக்க ஏங்கும் ......
  பயணத்தூரம் தெரியவில்லை சற்றே
  இளைப்பாறுதல் இதம்தரும் என்றே
  தொடர்பயணம் மட்டுமில்லை வாழ்கைப்பயணமும் விரும்புவது இதையே சந்தோஷம் நிறைய நிறைய மீண்டும் ஒரு பயணம்.....

  2. அன்பு பேருந்தே!
  எந்த கலவரமானலும்
  முதல்கல் முதல் அடியை
  தலையில் வாங்கும்
  என் அன்பு பேருந்தே.!
  எத்தனை அனுபவம் உன்னோடு
  மக்களுக்காக அதிகமாக
  தீக்குளிப்பதும் நீதான்!
  உன்னோடு போகையிலே
  பட்டுபோன மரங்களும்
  என்னோடு ஓடிவரும்!
  உன் மடியில்
  தூங்குவதே சொர்க்கம்!
  சிலநேரம் உன்னுள்
  மொத்த தென்றலையும்
  அள்ளிக்கொடுப்பாய்!
  என் பயணம் உன்னால் இனிதானது!

  3.பேரூந்தில் நானும் ஜன்னலோரம்
  பேரூந்தில் நானும் இப்போ ஜன்னலோரம்,
  இயற்கை காற்றிடம் பெறும் முத்தம் கணக்கில்லா ஆயிரம்,
  புயலாய் வருதே தென்றலதும்,
  ஆனந்தக் கூத்தாடுதே நெஞ்சமதும்...
  சொல்லாத உணர்வுகள் இங்குண்டு நெஞ்சோரம்,
  நல்ல உணர்வுகள் அனுபவம் ஆகும் நேரம்,
  கண்ணீர் வழிந்திடும் கண்களின் ஓரம்,
  பொல்லாத ஆசைகளைக் கொன்று போடும் சிந்தனையதும்,
  பிறந்திடும் உற்சாக ஊக்கமதில்...

  4. பயணங்கள் எத்தனை!
  அழகானது என்பதை தீர்மானிப்பது பயணப்படும் சூழ்நிலை தான்...
  நெரிசல் இல்லா பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இருக்கை அமைந்துவிட்டால்
  பயணம் கசக்கவா செய்யும்...
  இனிமையான தென்றல்... கருமை சூழ்ந்த வானத்தில் ஒற்றை விளக்காய் நிலவு..
  மெல்லிசை ஒலியில் ஊஞ்சலாய் மிதந்து போகும் பேருந்து...
  தூக்கம் தழுவாத விழிகள்...இரைச்சல் இல்லாத அக்கம்பக்கம்...
  இருளிலும் நிழலாய் எதிர்புறத்தில் ஓடி கொண்டிருக்கும் பசுமையான மரங்கள்...
  காற்றோடு கலந்த சின்ன சின்ன தூறல்...
  கைகள் இறுக்கமாக அணைத்துக்கொண்டு தலை பதிக்க
  நினைத்து பார்த்து சிரிக்கும்படியான சில இனிய நினைவுகள்..
  இவை அத்தனையையும் ரசித்து கிறங்கும் கவித்துவமான மனது....

  சிறந்த பயணம் வாழ்த்துக்கள் (Best travel wishes)

  Pixabay

  5. நீலவானம் தொட்டிடும் நீலக்கடல்
  நீந்திடும் பாய்மரமோ பாற்கடலில்
  படகில் பயணம் பரவசம் தந்திடும்
  பாடிடும் மனமும் இசையுடன் பாடல் 
  இதயம் குளிர்ந்திடும் இன்பமுடன்
  இடரில்லா தென்றலும் தொட்டிடும் 
  சூழலும் நம் நெஞ்சை வீழ்த்திடும்
  சுழன்றிடும் உள்ளமும் மயங்கிடும்
  மோதிடும் அலைகள் பேசிடும் நம்மிடம்
  பேரின்பம் பெறலாம் வந்தால் இவ்விடம் !

  6. இரயில் பயணம்!
  முடிவில்லா தொலைவுகள்
  அளவில்லா நினைவுகள்
  அசைபோடும் பொழுதுகள்
  கரைந்தோடும் நிமிடங்கள்
  இரயிலின் ஓசையாய் தொடரும் உன் நினைவுகளோடு
  என் பயணம்!

  7. பேருந்தும் நானும்!
  பேருந்தே என்னை நீ ஏற்றி செல்கிறாய்
  வாழ்வே நீ என்னை கூட்டி போகிறாய்
  பயணங்கள் பேருந்தில் பழக்கப்பட்டன
  துயரங்கள் வாழ்வில் செதுக்கிவைப்பன
  நீ தேடும் வழியை உணர நேரம் ஆகலாம்
  விழி காட்டும் பாதையை நீ தீர்மானிக்கலாம்
  இருக்கை கிடைக்க நேரம் ஆகலாம்
  வாழ்வை வெல்ல துன்பம் எதிர்கொள்ளலாம்
  பயணத்தின் முடிவை தீர்மானிப்பதும் இல்லை
  துயரத்தின் பங்கை மறந்துபோவதும் இல்லை!

  8. பயணம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது..
  நண்பர்களுடனான பயணம் உற்சாக சிரிப்பினூடனோ
  கிண்டல், கேலி நிகிழ்வினிடனோ கழிகிறது ...
  உறவினர்களுடனான பயணம் பாதுகாப்புனூடனோ
  பதற்றத்துடனோ கழிகிறது..
  மனைவியுடனான பயணம் மத்திமமாகவே கழிகிறது...
  தனிமைப் பயணம் இன்னும் கடினம்..
  புத்தகமும் அலைபேசியுமாக கழிகிறது..
  ஆக.. பயணம்.. வெறும் பயணமாக மட்டுமே இருப்பதில்லை..!

  சாகச பயண வாழ்த்துக்கள் (Adventure travel wishes)

  9. கடல் பயணம் ஒரு சாகச பயணம்
  நீல வானம் !
  நிசப்தமான இரவு !
  கடல் அலையின் நடுவினிலே –
  கற்பனை குதிரை !
  தரை தட்டும் வரை – தொடரும் பயணம் !

  10. எத்தனை பயணம் செய்தாலும், சாகச பயணம் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும்!
  சுவாரசியம் மட்டும் இல்லை, சவால்களும் தான் இந்த பயணத்தில் நிறைந்துள்ளது!
  இந்த சாகச பயணம், நீண்ட வாழ்க்கையின் ஒரு பிரதிபலிப்பு!

  11. சாகச பயணம் கற்றுக்கொடுக்கும் பல உண்மைகளை!
  அது உங்கள் மனதில் உண்டாக்கும் தாக்கம், என்றும் மறையாததாக இருக்கும்!
  இந்த சாகச பயணத்தின் நினைவுகள், உங்கள் வாழ்க்கையில் கிடைத்த அற்புத பரிசு என்று கூறினால், அது மிகையாகாது!

  தனிமையில் ஒரு பயணம் (Solo travel quotes)

  Pixabay

  12. இரயில் பயணம்!
  இரயிலோடும் தடம் வழியே
  என் இரவோடிப் போகிறது!
  உறங்காமல் விழித்திருக்க,
  என் மனமெங்கோ மேய்கிறது.
  அடங்காத அலைபோலே..
  அழகான நினைவலைகள்!
  நிலவொளியில் காற்றோடு,
  என் மனம் வருடிப் போகிறது
  இந்த இரயில் பயணத்தின் போது அசைபோட!

  13. இரவு நேரத்து இரயில் பயணம்
  இது என் இரவு நேரத்து இரயில் பயணம்
  இமைகளை மூடி உறங்க நினைக்கும் போது,
  சிறு குழந்தையாய் அன்னையின் படியில் கிடந்த ஞாபகம் சற்றே எட்டிப் பார்க்க
  இந்த பயணம் என் மனதில் பல சுகமான ஞாபகங்களை கொண்டுவந்தது!

  14. அக்கறையாக அந்த இரவு பொழுதை
  பலர் உறக்கத்திலே உறைந்தனர்
  சிலர் அலைபேசியில் அலற்றினர்
  நானும் ஓட்டுனரும் மட்டும் பொறுப்பாய் ஓட்டினோம்...
  ஓட்டுனர் வண்டியை ஓட்டினார்
  நான் என் நினைவுகளை ஓட்டினேன்...

  நண்பர்களுக்கு பயண வாழ்த்துக்கள் (Travel wishes for friends)

  15. பேருந்தில் ஏறிய எல்லோரும் எடுத்தார்கள் பயணச்சீட்டு
  நானும் எடுத்தேன்...
  எடுத்து முடித்த பின்பு யாரோ டாட்டா சொல்வது போல் ஒரு சப்தம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கையில் கண்களில் ஏதோ எதிர்பார்ப்புடன் என் நண்பன்!

  16. இரயில் பயணம்!
  உடல் வலியின்றி தாயின் மடியிலே
  உறங்கியது போல சுகமான தாலாட்டு பயணம்/
  மலைப் பாதை, குகைப் பாதை அனுபவத்தில் உற்சாகமாய் குழந்தைகள்,குழந்தைகளாய் பெரியவர்கள்;
  பேருந்து, மகிழுந்து பயணத்தில் காண முடியா ஜன்னல் காட்சிகள்,
  பழகிய பத்து நிமிடத்தில் அத்தனை சுக, துக்கங்களையும் கொட்டி விடும்
  அல்லது உள்வாங்கிக் கொள்ளும் ரயில் சிநேகங்கள்!

  17. பயணங்களில்தான் உணரமுடிகிறது
  காதலின் தவிப்பையும்
  நட்பின் சிறப்பையும்
  இயற்கையின் வனப்பை ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது
  இங்குதான் சிபாரிசு இல்லாமல் சீட்டு கிடைக்கிறது
  முன்பின் அறியாத முகத்தின் சிரிப்பும்,
  சிலமணி நேரம் தான் என்று தெரிந்த வளர்ந்த நட்பும்
  இறுக்கமான இதயத்தை ஈரமாக்கி செல்கிறது..

  18. இரயிலே!
  இறங்கிடுவேன் இப்போது
  உணர்த்திடுவேன் உன் நட்போடு
  வாழ்க்கை என்னும் ஓட்டம்
  வெற்றியை நோக்கி
  பயணிக்க வேண்டுமாயின்
  பயணத்தை ரசிக்க தெரிந்திடு!!!

  19. நெடுந்தூரப் பயணத்தை இனிதாக ஆக்கும்
  குழந்தைக்கும் முதுமைக்கும் பாதுகாப்பு கவசம்
  இரவினில் இசையுடனே தாலாட்டு இசைக்கும்
  வழியெங்கும் புதுமுகங்கள் அறிமுகப் படுத்தும்
  இந்த இரயில் பயணம்!

  இன்ச்டாக்ரம் பயண வாழ்த்துக்கள் (Instagram travel quotes)

  Pixabay

  20. போன பாதைகள் எல்லாம் பெருமிதமாய்
  வரும் பாதைகள் எல்லாம் புதிராய் இருக்க
  விறுக்கென விழித்தேன் "சென்னை எல்லாம் இறங்கிக்கோ" என்ற சப்தத்தில்
  இந்த தடவை எட்டி பார்க்கவில்லை
  ஏனென்றால் கத்தியது நடத்துனர்
  இருந்தாலும் எட்டி பார்த்தேன்
  "சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது"

  21. விமானம்!
  சிட்டுக்குருவி போல சின்னதாய் விமானம்
  கண்களுக்கு தோன்றிய காலம் அவை...
  சைக்கிள் டயர் ஓட்டி கொண்டே
  விமானம் விரட்டிய அந்த நாட்களில்
  ஏனோ அதில் பயணிக்கும் ஆசை இருந்ததே இல்லை...
  இந்த உலோக பறவையின்
  பயணத்தின் ஜன்னல் வழியே
  எத்தனை அழகு அதிசயங்கள்...

  22. பல எதிர்பார்ப்புகளுடன் ஒரு பயணம்!
  கல்லூரி வாழ்க்கையை நோக்கி ஒரு பயணம்!
  பல கனவுகளுடன் ஒரு பயணம்!
  உறவுகளை மனதில் சுமந்து கொண்டு ஒரு தொலைதூர பயணம்!
  இந்த பயணம் தொடரும் இன்னும் நான்கு ஆண்டுகள்!

  23. அறியாத இடத்திற்கு பயணிக்கும் மாணவன்!
  புரியாத புதிர்களோடு ஒரு புதிய நகரம்
  இந்த பயணம் கற்றுக் கொடுக்கும்
  வாழ்க்கை என்றால் என்னவென்று!

  24. பல கனவுகளோடு தொடங்கும் இந்த பயணம்
  கல்லூரியை நோக்கி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு!
  உறவுகளை கனத்த மனதோடு பிரிந்து,
  வெற்றி பெற்று பட்டப்படிப்பை முடித்து திரும்ப வேண்டும் என்ற
  ஒரே குறிக்கோளோடு தொடங்கும் இந்த பயணம்
  வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  வாட்ஸ் ஆப் / குறுஞ்செய்தி பயண வாழ்த்துக்கள் (Whatsapp travel quotes)

  25. நீர் நிலம் காற்று
  இதை படைத்தவன் எவன்
  அவனை தேடியே போகிறது
  எனது பயணம்!

  26. இரயில் பயணங்கள் பல
  வழி தடங்கள் என்று நினைத்தேன்!
  அது பல மனங்களின் வலி தடங்கள்
  என்று புரிந்து கொண்டேன்!

  27. பயணத்தில் இளைப்பாறுதல்!
  பயணத்தூரம் தெரியவில்லை, சற்றே
  இளைப்பாறுதல் இதம்தரும் என்றே
  தொடர்பயணம் மட்டுமில்லை
  வாழ்கைப்பயணமும் விரும்புவது இதையே!

  28. பயணம்!
  காலைச் சுற்றினும்
  தோல்வி யெனும் அரவம்
  கொண்ட உறுதி
  நெஞ்சம் முழுதும் பரவும்
  புற்றீசலாய் சிற
  கிரண்டும் உதிரும்
  ஊர்ந்தாவது இலக்கு
  நோக்கி தொடரும் பயணம்

  29. மாநகரின் பரபரப்பான சாலையில்
  அதிசயமாய் எதிர்படும்
  முந்தய தலைமுறையின்
  இருசக்கர வாகனத்தில் ஏறி
  பால்யம் நோக்கி பயணிக்கிறது மனம்!

  30. பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்..
  என் ஜன்னல்ஓரப் பயணங்கள்
  காற்றோடு கடந்தகாலத்தையும் கிசுகிசுகின்றன..

  மகிழ்ச்சியூட்டும் பயண வாழ்த்துக்கள் (Happy travel wishes)

  Pixabay

  31. பயணம் ஒன்று கிளம்பப் போகின்றேன்
  பயணம் ஒன்று கிளம்பப் போகின்றேன்
  பார்ப்பவர் பைத்தியமென்று சொல்லும் அளவுக்கு- உற்சாகத்தோடு பயணம் செய்யப் போகிறேன்!

  32. தொடர் வண்டி பயணம்
  இரு தண்டவாள பயணம் முடிவில்லா பயணம்
  ஒன்று சேர்ந்த பயணம் நாட்டை ஒன்றிணைக்கும் பயணம்
  தாயின் தாலாட்டு பயணம்!
  நம்முடன் பயணம் செய்வோரின் நட்பு வளர்க்கும் பயணம் 
  எந்நாளும் நமக்காக ஓடி ஓய்வு அறியா பயணம்
  நம் இல்லத்தில் இருப்பதை போன்ற உணர்வளிக்கும் பயணம் 
  என்றும் இனிய பயணம் எப்போதும் இனிமை சேர்க்கும் பயணம்
  தொடர் வண்டி பயணம் !

  33. அழகான பயணம்
  நீண்ட தொடர் வண்டி பயணம்
  சன்னல் ஓர குளிர் காற்று
  எதிர் பாரா பல முகங்கள்
  உதட்டின் புன்னகையோடு
  புது உற்சாகம்..
  புது விதமான பூரிப்பு....
  பயணம் தரும் புது அனுபவம்!

  34. பயணம் மெல்ல மெல்ல அழகானது
  பூட்டாத பூவால்
  கலப்படம் இல்லாத காற்றால்
  கரையேறிய குப்பையால்
  ரோலர் கோஸ்டரான பாலத்தினால்
  நான் பயணித்த பேருந்து மட்டும்
  அலட்டி கொள்ளாமல் பயணித்தது
  அயர்ந்து போனேன்...

  35. அழகான பயணம்!
  நீண்ட தொடர் வண்டி பயணம்
  சன்னல் ஓர குளிர் காற்று
  எதிர் பாரா பல முகங்கள்
  உதட்டின் புன்னகையோடு புது உற்சாகம்..
  தனிமை மனதோடு கதை பேசும்
  சந்தோஷம் நிறைய நிறைய மீண்டும் ஒரு பயணம்.

  36. முதல் விமான பயணம்!
  காற்றை கிழிந்து பேரூந்து பயணம், கல்லூரி சென்ற தருணம்
  தடதட சத்தத்துடன் இரயிலில் வெளியூர் பயணம்
  நினைவுகள் கண்மூடி திறந்த நேரத்தில் மெல்ல வந்து போனது
  ஆயிரம் எண்ணங்கள் அலைப்பாய சில்லேன்று ஒருகாற்று வருட
  உணர்ந்தேன் நான் இருப்பது இப்போது
  சென்னை விமான நுழைவாயில்
  வெளிநாட்டு வேலை அதைவிட மனதில் முக்கியமாக
  முதல் விமான பயணம்.

   

  மேலும் படிக்க - குறைந்த செலவில் வயநாடு போகணுமா ! வழி இருக்கு வாங்க !மேலும் படிக்க - நீண்ட பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியுடன் தோன்றுவது எப்படி?

  பட ஆதாரம் - Shutterstock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!