logo
ADVERTISEMENT
home / அழகு
உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை   தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !

சூரிய கதிர்களால் நம் சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் முக்கியமாக இரண்டு தோல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் – புற்றுநோய் மற்றும் வயதான தோற்றம். மேலும் , சன் டேன் எனும் சரும நிற மாற்றமும் ஏற்படலாம். இவை அனைத்தையும் தவிர்க்க சரியான சன் ஸ்கிரீன் லோஷன்னை பயன்படுத்த வேண்டும். சரி , வெப்ப காலங்களில் மட்டுமே இவை அவசியம் என்று நீங்கள் நினைத்தால் , அது தான் இல்லை! மழை காலங்களிலும், பனி காலங்களிலும் சரி சூரியனின் கதிர்கள் நம் மீது எப்பொழுதும் பாய்ந்து கொண்டே தான் இருக்கிறது. வளிமண்டலத்தில் ஓசோன் குறைவதால் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்மீது ஊடுருவிக்கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் எந்தக் காலமாக இருந்தாலும் உங்கள் சருமத்திற்குத் தேவையான ஒரு சன்ஸ்கிரீன் லோஷன் (sunscreen lotion) அவசியம். இதற்கான முழு விவரங்களை இங்கு காணலாம்.

சன் ஸ்கிரீன் லோஷன் : நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சன்ஸ்கிரீன் லோஷனை வாங்குவதற்கு முன் நீங்கள் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும் –

  1. யு. வி. எ(UVA) – இதில் அலைநீளம் அதிகமாக  இருப்பதால், உங்கள் சருமத்தின் உள் ஆழமாக புகுந்து இரத்த குழாய்கள், தோல் வலிமைகடும் என்று அனைத்திலும் பெரும் பிரச்சினைகளை உருவாக்கலாம்.  
  2. யு. வி. பி (UVB) – இதில் அலைநீளம் குறைவாக இருப்பதால் , தோலின் வெளிப்புற பகுதி, தோல் டி.என்.ஏ , மெலனின் உற்பத்தி , நிறம் மாற்றம் என்று அனைத்திலும்  லேசான பாதிப்புகளையும் உண்டாக்கலாம்.  

Pexels

ADVERTISEMENT

இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீங்கள் பார்க்க வேண்டிய இரண்டு காரணிகள் – எஸ் .பி .எஃப் (SPF) மற்றும் பி. எ(PA)  பெரும்பாலும் எஸ் .பி .எஃப் (SPF) என்னும் காரணியை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்து இருப்போம். இது யு. வி. பி ‘விற்கு (UVB) எதிராக பாதுகாப்பை அளிக்கிறது மற்றும் பி. ஏ (PA) எனும் காரணி யு. வி. எ ‘விற்கு (UBA) எதிராக உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது . ஆகையால்  இவை இரண்டும் இருக்கும் ஒரு சன்ஸ்கிரீன் லோஷனை நீங்கள் தேர்ந்து எடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

அதற்காக அதிக எஸ். பி.எஃப் மற்றும் பி ஏ உள்ளது அதிகமாக பாதுகாப்பு அளிக்கும் என்றும் முடிவுக்கு வந்து விட முடியாது!  உங்கள் சருமத்திற்கு ஏற்ற எஸ். பி. எஃப் மற்றும் பி .ஏ வை நீங்கள் சரியாக தேர்வு செய்தால் அதற்கான தீர்வை விரைவில் காணலாம்.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன் லோஷனை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எண்ணெய் சருமம்

எண்ணெய் கொண்ட சருமத்தில் மேலும் எண்ணெய் வராமல், இவ்வகை தோலுக்கு ஏற்ற ஜெல் , தண்ணீர் சார்ந்த சன்ஸ்கிரீன் லோசன்,மேட் ஃபினிஷ் உள்ள சன்ஸ்கிரீன் இவ்வகை தோலுக்கு பொருத்தமானது. இது உங்கள் சருமத்தில் பருக்கள் வர விடாமல் தேவையான பாதுகாப்பை அளிக்க உள்ளது.

வறண்ட தோல்

வறண்ட சருமத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய சன்ஸ்கிரீன் லோஷனில்  போதுமான அளவிற்கு ஈரப்பதம் இருக்க வேண்டும். இது உங்கள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி லாக் செய்து மேலும் சூரிய ஒளியிலிருந்து தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. அதிக கிரீம் போன்ற சன்ஸ்கிரீன் லோஷன்களும்  இவ்வகை சருமத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

ADVERTISEMENT

Pexels

சாதாரண தோல்

இதற்கு கிரீம் மற்றும் ஜெல்லிற்கு நடுவில் இருக்கும் லோஷன்களை தேர்ந்தெடுங்கள். இது உங்கள் தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து பாதுகாப்பு அளிக்கும்.

காம்பினேஷன் தோல்

 இதில் சருமம் சிறிது வறண்டதாகவும் எண்ணெய் கொண்டதாகவும் இருப்பதால், ஸ்பிரே  அல்லது லோஷன் அம்சத்தில் உள்ள சன்ஸ்கிரீன் வகைகள் மிகப் பொருத்தமாக இருக்கும். 

ADVERTISEMENT

உங்கள் தோல் தோனிக்கு ஏற்ற SPF தேர்ந்தெடுப்பதற்கான டிப்ஸ்

சன்ஸ்கிரீன் லோஷன் உங்கள் சருமத்திற்கு ஏற்ப எந்த அமைப்பில்  தடவினாள் தேவையான தீர்வை காணலாம் என்று பார்த்தீர்கள். அதேபோல் உங்கள்  தோல் தோனிக்கு ஏற்ற SPF தேர்ந்தெடுப்பது அவசியம். அதற்கான விவரங்களை இங்கு காணலாம் .

  1. உங்கள் தோலின் நிறம் வெள்ளை அல்லது வெளுத்த வெள்ளையாக  இருந்தால் சன் பெர்ன் எளிதில் ஆகலாம் ஆனால் உங்கள் சருமத்தின் நிறம் மாற்றத்திற்கான  சந்தர்ப்பங்கள் மிக குறைவாக உள்ளது. ஆகையால் இதற்கான எஸ்.பி.எஃப் (SPF) 30-50+ 
  2. உங்கள் தோல் வெளிர் நிறத்திற்கு மாநிலத்திற்கும் நடுவில் இருந்தால் சம்பவம் மிதமாக ஆகலாம் மற்றும் சருமத்தின் நிறம் மெதுவாக மாறிக்கொண்டு போகும் ஆக இதற்கானஎஸ்.பி.எஃப் (SPF) 15-30+
  3. உங்களது தோல் நடுத்தர நிறமாக இருந்தால் இதிலும் சனி பதிலாக கூடும் மற்றும் உங்கள் சருமத்தின் நிறம் நன்றாகவே மாறிவிடும் சூரிய ஒளியினால் நன்றாகவே மாறி விடும் ஆகையால் இதற்கான எஸ்.பி.எஃப் (SPF) 5-15+ 
  4. நீங்கள் அடர் நிறமாக இருந்தால் உங்கள் சருமம்  ஒளியினால் பாதிப்புக்குள்ளாகி விடும் மற்றும் உங்கள் சருமத்தின் நிறம் உடனடியாக மாறி விடும். ஆகையால் இதற்கான எஸ்.பி.எஃப் (SPF) 2-10
மேலும் படிக்க – அழகிய தோற்றத்திற்கு: ஆடைகளை உங்கள் தோல் தொனிக்கு ஏற்ப எவ்வாறு தேர்வு செய்வது ?

முகத்திற்கும் உடம்பிற்கும் வெவ்வேறு சன்ஸ்கிரீன் லோஷன்கள் அவசியமா ?

Shutterstock

ஆம் ! முகத்தில் இருக்கும் தோல் உடம்பை காட்டிலும் சிறிது மெல்லியதாக இருப்பதால் அதற்கேற்ற சன்ஸ்கிரீன் லோஷன்  அவசியம். இதற்கு நீங்கள் ஒரு சிறந்த ப்ரைமேற் அல்லது பவுண்டேசனுடன் SPF இருக்கும் சன்ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுக்கலாம். உடம்புக்கு ஏதேனும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் உடன் வரும் சன்ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுக்கலாம்.

ADVERTISEMENT

POPxo பரிந்துரைக்கிறது – லோட்டஸ் மேக்கப் எக்ஸ்பிரஸ் க்ளோ SPF 25 (ரூ 293) , நிவியா சன் ஸ்க்ரீன் லோஷன் அண்ட் மொய்ச்சர் SPF 50 (ரூ 189)

பட ஆதாரம் – Pexels, Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

16 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT