அழகிய தோற்றத்திற்கு: ஆடைகளை உங்கள் தோல் தொனிக்கு ஏற்ப எவ்வாறு தேர்வு செய்வது ?

அழகிய தோற்றத்திற்கு:  ஆடைகளை  உங்கள் தோல் தொனிக்கு ஏற்ப எவ்வாறு தேர்வு செய்வது ?

பெரும்பாலும் ஆன்லைன் ஷோப்பிங்கில்  நீங்கள் வாங்கும் ஆடைகள் பொருத்தமற்றதாக அமைந்தால்   அதற்கான முக்கிய காரணம் உங்கள் சருமத்தின் நிறத்தை நீங்கள் கண்டறியாததுதான் . 

வண்ணங்களோ ஏராளமாக இருக்கிறது! அதிலிருந்து நம் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற ஆடையை தேர்ந்தெடுப்பது நிச்சயம் கடினமான ஒன்றாகும். உங்கள் திறமைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.   இதென்ன பெரிய விஷயம்? வாங்கிய ஆடையை அணிந்து கண்ணாடி முன் நின்று பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்த்தால் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், நீங்கள் உங்கள் ஆடைகளை இன்னும் எளிதாகவும் சிறந்ததாகவும் வாங்க, அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க ,  உங்களுக்கு ஏற்ற நிறங்களை நீங்கள் கண்டறிவது அவசியம்! 

இனி ஷாப்பிங் தளத்தில் மாடல்கள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கும்  , அதையே நீங்கள் அணிவதற்கும் ஏன் இத்தகைய வித்தியாசம் என்ற குழப்பத்தில் நீங்கள்  இருக்கத் தேவையில்லை! உங்கள் நிறத்திற்கு (skin color) பொருத்தமான ஆடையை (dress)  தேர்வு செய்வதற்கான படிப்படியான விளக்கங்களை கீழ் காணலாம். 

இலகுவான / வெளிர் தோல்

உங்கள் சருமத்தின் நிறம் வெளுத்த வெள்ளையாக பால்போன்ற நிறத்தில்  இருந்தாள் எல்லா வகையான அடர் நிறங்களை நீங்கள் முயற்சிக்கலாம். அதாவது பர்கண்டி, ரோஸ், கடற்படை நீலம், பாட்டில் பச்சை, அடர்  சாம்பல் போன்ற அனைத்து நிறங்களும் உங்கள் வெளிர் நிறத்திற்கு ஏற்றதாக அமையும். இது மேலும் உங்கள் முகத்தின் அம்சங்களை அழகாக முன்வைக்கும். 

இதற்கு முரணாக  ஏதேனும் ஒரு வெளிர் நிறத்தை (க்ரீம், வெள்ளை, பேபி பிங்க், ஸ்கை ப்ளூ ) அல்லது பிரகாசமான நிறங்களை ( பளிச்சிடும் சிவப்பு, பச்சை ) அணிந்தால் உங்கள் தோற்றத்தின் அம்சங்களை சரியாக முன்வைக்கை உதவாது. ஆகையால், அடர் நிறங்களை தேர்ந்தெடுங்கள்.


உதாரணத்திற்கு , 

 

Instagram

மாநிறமான தோல்

உங்கள் தோலின் தோணி மாநிறமாக  இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிறங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை விட சிறிது அடர் நிறமாகவோ அல்லது சிறிது பிரகாசமான நிறமாக இருக்க வேண்டும்.   

அதாவது க்ரீமி ஆரஞ்சு நிறம், மஞ்சள் நிறம், லாவண்டர், மெஜந்தா, இங்க் ப்ளூ போன்ற நிறங்களுடன் முக்கியமாக வெள்ளை நிறத்தை சேர்த்தால் மாநிற தோல் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இவ்வகை மாநிறம்  கொண்டவர்களுக்கு பெரும்பாலான நிறங்கள் பொருத்தமாக தோன்றினாலும் எது சிறந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

உங்கள் சருமத்தின் அடித்தள நிறம் ஒலிவ் கிரீன் அல்லது வெளிர்  மஞ்சளாக இருப்பதால் இந்த நிறங்களின் வரிசையில் இருக்கும் நிறத்தை தவிர்ப்பது நல்லது.  ஏனெனில் இது உங்கள் அம்சங்களை முன்னிலைப்படுத்தாது! 

உதாரணத்திற்கு, 

 

அடர் தோல்

இதுவரை நீங்கள் வெளிர் நிறம் கொண்டவர்கள் மட்டுமே எவ்வகையான நிறங்களையும் அணிந்து செல்லலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அது தவறு!  உண்மையில் அடர் வண்ண தோல் கொண்டவர்கள் மட்டுமே இந்த பலனை அனுபவிக்க முடியும். இவ்வகை தோல் கொண்டவர்கள் எப்பேர்ப்பட்ட பிரகாசமான நிறங்களாக இருந்தாலும் அணிந்து செல்லலாம் . இவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் ஒரே நிறத்தில்  தனது ஆடையை அணியாமல் இரண்டு அல்லது மூன்று நிறங்களில் , ஒன்றுக்கு மற்றொன்று முரணாக இருப்பதாக இருந்தால், தனது தோற்றத்தை இன்னும் அழகாக முன்வைக்கலாம். 

அதேபோல் இவர்கள் தவிர்க்க வேண்டிய நிறங்கள் பழுப்பு நிறம் மற்றும் அதன் வரிசையில் வரும் நிறங்கள் ஆகும் . ஏனெனில் இது இவர்களின்  நிறத்தோடு ஒற்று போவதால் அது ஒரு ஈர்க்கும் தோற்றத்தை அளிக்காது . 

உதாரணத்திற்கு,

 

Instagram

வெவ்வேறு தோலுக்கு (தொனி) ஏற்ற நிறங்களில் ஆடை களை நீங்கள் அணிந்தாலும் ஏதேனும் ஒரு நிறம் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தால் அதை முயற்சிப்பதில் தவறில்லை . 

அதேபோல் உங்கள் தோற்றத்திற்கு பளிச்சிடும் நிறங்கள் அழகாக அமையாது என்று நீங்கள் நினைத்தால் அதை வெறும் ஆடைகளில் மட்டுமில்லாமல் அணிகலன்கள் , பெல்ட், ஹாண்ட் பாக், காலணிகள்  என்று அந்த நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம் . இதுவே ஆடைகளை மிக சிறப்பாக அணிவதற்கான அடித்தளமாகும். 

இது மூலமாக உங்கள் தோல்   தோனிக்கு ஏற்ற நிறங்களை நீங்கள் கண்டறிந்து விட்டால் மேலும் பல வண்ணங்களுடன் ஆராய்ந்து உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து மகிழலாம்!! 

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.