தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்! மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம்! (Father's Day Quotes & Wishes In Tamil)

தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்! மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம்! (Father's Day Quotes & Wishes In Tamil)

எமது உடலின் மூலக்கருவாகவும், எமது பெயரின் முதல் பெயராகவும் அமைந்து எமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருந்து அன்போடு எம்மை வளர்த்தெடுத்து நாம் இப் பூவுலகில் பேரோடும் புகழோடும் வாழ வழி அமைத்து கொடுத்த தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாள் தான் தந்தையர் தினம்.


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பெறுகின்றது. உலகிலேயே முதல் முறையாக 1910 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் என்ற பெண்மணியே. அன்னையர் தினத்தை தொடர்ந்து தந்தையார் தினம் கொண்டாடப்படுவதால் அன்னை, தந்தை என இருவரையும் இத்தருணத்தில் இத்தினங்கள் பூர்த்தி செய்கின்றன.


தந்தையர் தின பாச கவிதை


தந்தைக்கான திரைப்பட டைலாக்குகள்


பிரபலங்களின் வார்த்தைகள்


மகளின் தந்தையர் தின வாழ்த்துக்கள்


குறும்பு தனமான தந்தையர் தின வாழ்த்து


தாத்தாவிற்கான வாழ்த்துக்கள்


தந்தையர் தின கவிதைகள்


Father's Day Gift Ideas in English


தந்தை கௌரவிக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் (Special Wishes For Fathers)


 1. எத்தனை செல்வங்கள் வந்தாலும் உன் விரல் போல் ஆதரவு இல்லை தந்தையே

 2. விடு விடு.. வாழ்க்கை முழுவதும் விட்டு கொடுக்கும் பெரிய உள்ளம் உனக்கு தந்தையே

 3. மழலையில் கைபிடித்து வாழ்க்கையின் பாதைக்கு அழைத்து சென்ற அப்பாவை நினைவில் கொள்வோம்.

 4. மழலையின் சிரிப்பில் வாழ்க்கையை தொலைத்து, தியாகத்தின் செம்மலாய் நிமிர்ந்து நிற்கும் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

 5. அன்பை, ஆசைகளை, ஆதரவுகளை தன்னலமின்றி வெளிப்படுத்தும் தன்னிகறற்ற உறவு தந்தை


Also Read: ஒவ்வொரு உறவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes In Tamil)


தந்தையர் தின பாச கவிதை (Father's Day Quotes In Tamil)


 1. அந்த நாட்களில் என் அப்பாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு, ஓடி பிடித்து, ஒளிந்து விளையாடும் நினைவுகள் இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கி விடுகிறது.

 2. என்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.

 3. “எவ்வளவு செலவு ஆனாலும் சரி நான் இருக்கிறேன் நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்து எடுத்து படி” – என்று சொல்லும் மனம் தந்தையை தவிர வேறு எவருக்கு வரும்?

 4. சர்வமும் எங்களுக்காக உழைத்து தேய்ந்த என் கருணை கடல் அப்பாவுக்கு தெரிந்தது எல்லாம் வீடு,வாசல், பிள்ளைகள் மட்டுமே

 5. என்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.


happy fathers day002


இனி அன்பான உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்!


தந்தைக்கான திரைப்பட டைலாக்குகள் (Dialogues From Movie)


 1. நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய், நடக்கின்ற தூரம் பார்த்து மலர்களாய் மாரினாய்  இந்த உலகத்தின் முட்கள் எல்லாம் முள்முடியாக்கனாய் - நான் மகான் அல்ல

 2. பூமியை உருவாக்கியது தெய்வம் என்றால் அந்த தெய்வங்கள் எல்லாம் தோற்று போவது தந்தையின் அன்பில் - கேடி பில்லா கில்லாடி ரங்கா

 3. வெற்றி யாரிடமிருந்து பரிக்கப்படக்கூடாது, உன்னுடையதாக இருக்க வேண்டும் - ராம்

 4. பிரச்சணையை தேடி போகிறவன் பெரியாளாகிறான், சொந்தத்தை தேடி போகிறவன் மனிதனாகிறான் - அப்பா

 5. மகனிற்கும் பிள்ளைக்கும் செய்வதில் மகிழ்ச்சி காணும் தந்தைக்கு தனக்கு வாங்குவதில் மகிழ்ச்சி இல்லை -  தியாகி


பிரபலங்களின் வார்த்தைகள் (Father's Day Quotes From Celebrity)


 1. அப்பா தான் என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் - சிம்பு

 2. நான் கண்ட முதல் தெய்வம் என் தந்தை - சிவகார்த்திகேயன்

 3. அப்பா தான் என் நம்பிக்கை - நீயா நானா கோபிநாத்.

 4. அப்பா கொடுத்த ஊக்கம் தான் என் நடிகை வாழ்க்கை - ராதிகா

 5. நான் ஜெயிக்க அப்பா பல முறை தோற்றுள்ளார் - விஜய்


Also Read : வாழ்க்கையைப் பற்றிய உந்துதல் மேற்கோள்கள்


மகளின் தந்தையர் தின வாழ்த்துக்கள் (Father's Day Message From Daughter)


 1. நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.

 2. தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்.

 3. நான் தெய்வத்திடம் வேண்டினேன், “என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் தேவை…!” தெய்வம் சொன்னது, “மிகவும் பேராசை கொள்கிறாயே  என்று…!”.

 4. எனக்கு முன்பே பூமியில் பிறந்து, என்னை காக்க வேண்டி அவரின் மகளாக பெற்று எடுத்து, என்னை கண்ணில் வைத்து தாங்கும் தேவதூதன் என் செல்ல “அப்பா”.

 5. ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆண் மகனின் மீது காதல் முதலில் உண்டாகிறது என்றால் அது தந்தையாக தான் இருக்கும்.


ரக்‌ஷா பந்தன் கவிதைகள் (Raksha Bandhan Quotes)


happy fathers day005


Also Read 20 Best Gift Ideas For Father's Day In Tamil


குறும்பு தனமான தந்தையர் தின வாழ்த்து (Funny Father's Day Quotes)


 1. என்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.

 2. தந்தையும் குழந்தை ஆகிறான் தன் பிள்ளை தன் மீது ஏறி அமர்ந்து விளையாடும்போது.

 3. தந்தையே! எனக்கு மீண்டும் உன்னிடம் குழந்தையாக மாறி உன் பாச அரவணைப்பில் மிதந்து கிடைக்க ஆசை.

 4. பிஞ்சு நடை பழகி உன்னுடன் ஓடி விளையாடிய நாட்கள் இன்னும் என்னுள் நினைவுகளாய் தந்தையே

 5. மாங்காய் அடித்து, அடுக்கரையில் திண்பண்டம் திருடி நாம் அடித்த லுட்டிகள் என்னை இன்னும் மகிழ்விக்கின்றது.


தந்தையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படியுங்கள்


தாத்தாவிற்கான வாழ்த்துக்கள் (Quotes For Grandfather)


 1. நீ காண முடயாத உயரத்தை நான் காண உன் கழுத்தில் தூக்கி இந்த உலகத்தை உயரமாக காட்டிய தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

 2. அப்பா வேலைக்கு செல்ல அன்னையும் அப்பாவுமாக அனு தினமும் என்னுடன் சிறு பிள்ளையாய் மாறும் தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

 3. கொஞ்சி பேசி படுக்கையில் பகிர்ந்து உருண்டு உன் மார்பை என் தலையனையாய் மாற்றிய என் தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்

 4. தந்தைக்கு தெரியாமல் மிட்டாயை காக்கா கடி கொடுத்து ஒளித்து வைத்து என் சந்தோஷம் காண மகனிடம் சிறு பிள்ளையாய் திட்டு வாங்கிய என் தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

 5. நான் நடைபழக நடைவண்டியாய் நீ மாறி, நான் சிரிக்க யானையாய் இன்னும் என்னென்ன விலங்காய் நீ மாற செய்த லூட்டிகள் இன்னும் என் நினைவில் இருக்கிறது தாத்தா


happy fathers day004


Also Read : தந்தை மகள் மேற்கோள்


கணவருக்கான தந்தையர் தின வாழ்த்துக்கள் (Father's Day Message From Wife To Husband)


 1. நம் பிள்ளைகள் உன் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்து அன்பில் கரையும் அத்தருணம் இன்பமானது கணவரே

 2. குழந்தைகளின் கணவிற்காக அப்பாவாக நீ செய்த தியாகம் அனைத்தும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது கணவரே

 3. வயிற்றில் சுமந்தது நானாக இருந்தாலும் மார்பிலும், தோலிலும் சுமந்து பிள்ளைகளை நீ வளர்க்க தாயாக மாறிய தருணம் உன் மீது கொண்ட காதலை அதிகரிக்கிறது கணவரே

 4. கொஞ்சி பேசிய தருணம், காதல் ததும்ப நீ செய்த தியாகம், மகனிற்காக பொறுப்பாக நீ மாறிய பொழுதுகள் அனைத்தும் என்னை கட்டிப்போட்டது உன் அன்பில் கணவரே

 5. பிள்ளைகளை வளர்க்க நீ பட்ட துயரம், கஷ்டத்தை காட்டாமல் பிள்ளைகளுக்கு நீ கொடுத்த கல்வி என அனைத்தும் உனக்கு பிள்ளையாக பிறக்க தூண்டுகிறதே கணவரே


மேலும் படிக்க தமிழில் சிறந்த வெற்றி மேற்கோள்கள்


தந்தையர் தின கவிதைகள் (Father's Day Poem)


1. நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் “அப்பா” 


2. நேர்வழி நின்றொழுகி
நீரமைத்த வழியதனில்


சீர்பெற எமை வளர்த்தீர்!


காலத்தின் மாற்றங்களோ - யுத்த


கோலத்தின் கோரங்களோ


ஞாலத்தில் எமையணுகாமற் காத்தீர்!


இவள் தந்தை “எந்நோற்றான் கொல்” என


இவள் தன்னால் இயன்றளவு முயன்றேநும்


மகள் என்றுநீவிர் மார்தட்டி


அகம்குளிரச் சிறந்து வாழ்வாள்...


வையத்தில் வாழ்வாங்கு வாழும்வரைநல்


ஆயுள் உவகை ஆரோக்யம் மனநிம்மதி


எய்தியே நீவிர்வாழ ஏத்தினேன் இறைகழலை....


தமிழ்க்கிழவி


3. காலையில் ஆறு மணிக்குள் எழுந்து


பிள்ளைகளுக்கு பள்ளி உள்ளதோ இல்லையோ


அவர்களையும்


சேர்த்து எழுப்பி


நேற்றின் கலைப்போடு முகமுதிர்ந்து


முடிதிருத்த சவரக்கத்தி எடுத்தால்


அது துறுப்படித்திருக்கும்


அதை மாற்றினால் இன்னொரு செலவு வருமே என் எண்ணி


அந்த கத்தியிலேயே சவரம் செய்து


குளித்துவிட்டு சாப்பிட வந்தால்


நேற்று மிஞ்சிய சாதமும்


இன்றைய தோசையும் இருக்கும்


சுவை வாய் வரைதான் என்று பழையசாதத்தையும் சலிக்காமல் சாப்பிட்டு


வேலைக்கு செல்ல பறப்பட்டால்


வண்டியிலோ எரிபொருள் இருக்காது


பிள்ளைகளை வேறு பள்ளியில் விட வேண்டும்


சரி என சொல்லி


பேருந்தில் ஏறி


பிள்ளைகளையும் பேருந்தில் ஏற்றி


பள்ளியிலே விட்டு விட்டு


அலுலகம் சென்றால் முதலாளி கேட்பார் "ஏன் தாமதம்?" என்று


நடந்ததை முழுதும் அவரிடம் கூறி வேலையில் அமர்ந்தால்


குழுவின் தலைவர் கேட்பார்


"சென்ற வாரம் சொன்ன வேலை எங்கே?" என்று


அவரிடம் சாக்குபோக்கு சொல்லி


வேலைக்கு திரும்பினால் நேரம் போவதே தெரியாது


மதியம் சாப்பிட நினைத்து பையை எடுத்தால்


எடுத்து வைத்த பை வீட்டிலிருக்கும்


வெளியில் வாங்கி சாப்பிட மனமுமில்லாமல்


பிறரிடம் கேட்க துணிவுமில்லாமல்


அன்று முழுதும் பட்டினியே வேலை செய்து


மாலை வரை உழைத்து


இன்னும் சற்று நேரம் உழைத்தால்


இன்னும் கொஞ்சம் வருமானம் வருமே என எண்ணி


ஐந்து மணிக்கு முடிக்க வேண்டிய வேலையை


எட்டு மணி வரை நீட்டித்து உழைத்து


வீடு திரும்ப பேருந்து நிறுத்துமிடம் வந்தால்


பேருந்தே வராது பின்


ஒன்பது மணிக்கு வரும் பேருந்திலேறி


நெரிசலில்,


காலோ மிதிபட


தலையோ இடிபட பயணித்து


வெறும் கையோடு வீட்டுக்கு சென்றால்


பிள்ளைகள் ஏதாவது கேட்பார்களென்று


வீட்டுக்கு முன்னறே இறங்கி அருகில் உள்ள கடையில்


பண்டங்கள் வாங்கி


வீட்டுக்கு தேவையானதையும் வாங்கி


வீடு வரை நடந்தே வந்தால்


காலையில் தேய்த்த சட்டை


வியர்வை வாடையோடு கசங்கியிருக்கும்


அதை தான் நாளையும் போட வேண்டுமென்று பத்திரப்படுத்தி


வாங்கிவந்ததை மனைவியிடம் கொடுக்க


"மதியம் சாப்பிட்டீரா?" என கேட்க


"வெளியில் வாங்கி சாப்பிட்டேன்" என பொய்யுரைத்து


பிள்ளைகளுக்கு பண்டங்களை கொடுத்து விட்டு


இரவு சாப்பாட்டை முடித்து மேஜையில் அமர்ந்தால்


அருகில் அழுகிய நிலையிலோர் ஆப்பிளிருக்கும்


தன் குழந்தைகளுக்கு அப்பழத்தின் அழுகா பக்கத்தை கொடுத்து


அழுகிய பக்கத்தை மட்டும் முகம் சழிக்காமல் உண்டு முடித்தால்


பிள்ளை கேட்கும்


"அப்பா இந்த பாடம் சொல்லி தாப்பா" என்று


இருந்த கலைப்போடு அதையும் சொல்லி கொடுத்து


பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு


படுக்க சென்றால் தடீரென மின்சாரம் துண்டிக்கும்


பிள்ளைகளுக்கு வியர்க்குமே என அருகில் அமர்ந்து


விசிறிக்கொண்டே


நாளையும் இந்நாள் மாதிரி அமையக்கூடாது என்று நினைத்தபடியே காலையில் எழ அலாரம் வைத்துவிட்டு


விசிறியபடியே தூங்கி


நாளையின் கனவுகளோடு முடிகிறது


4. முற்பிறவியில் நாங்கள் செய்த நன்மை


இப்பிறவியில் எங்கள் தந்தையாய் நீங்கள்


கண் அசைவிலே எங்கள் ஆசைகளை பூர்த்தி செய்வாய்


நிராசை ஏதுமில்லை அதனால் மறுபிறவி தேவையில்லை


அயர்ச்சி இன்றி உழைத்து - வாழ்க்கையில்


வென்ற சுயம்பு நீங்கள்!


கர்வம் கொள்கிறோம் நீங்கள் எங்கள் தந்தை எனும்பொழுது


என்றும் உங்கள் வழிகாட்டுதலுடன் நடப்போம்


இவர்கள் என் பிள்ளைகள் என நீங்கள் கர்வம் கொள்ளும் நாளுக்காக...


5. என் வாழ்கை பற்றி எனக்கு அறிய வைத்தாய்


நம் நட்பிற்கு நீ நல்ல இலக்கணமாய் திகழந்தாய்


திறமையை ஊக்கவிக்கும் சிறந்த அலோசகராய் அமைந்தாய்


உன் அன்பினின் மூலம் கடவுளின் சிறப்பை உணரசெய்தாய்


என் வெற்றிக்கு நீ ஒரு சான்றாய் விளங்கினாய்


தோளின் மீது சாய்ந்து இன்பத்தினை பகிர வைத்தாய்


அன்பு எனும் மந்திர சொல்லை உணர வைத்தாய்


உன் வேர்வை சிந்தி என் கண்ணீர் துளி விழாமல் காப்பவர்


நீ கடந்து சென்ற பாதையில் என்னை நடக்க செய்தாய்


நான் நடந்து செல்லும் பாதைக்கு வழி நடத்தி துணையாக இருந்தாய் உன் மந்திர சொற்களால் என்னை நல்ல மனிதனாய் உருவாக்கினாய்


happy fathers day003


You Might Also Like


Children's Day Wishes


Father's Day Quotes in English


Father's Day Wishes in English


Fathers Day Thoughts in Hindi


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo