ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் (Raksha Bandhan Quotes In Tamil)

ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் (Raksha Bandhan Quotes In Tamil)

ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரராக கருதும் ஆண்களின் கையில் வண்ணமயமான ராக்கி கயிறுகள் கட்டுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பு. ராக்கிகள் கட்டப்பட்ட ஆண் அந்தப் பெண்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை மதங்களையும் தாண்டி நேசத்தைக் கொண்டிருப்பதால் பொதுவாக தற்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. Table of Contents

  pixabay

  ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்று பொருள். இந்த நாளில், ஓர் ஆ‌ண் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக் கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 26ம் தேதி இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  Also Read மகளின் நாள் மேற்கோள்கள்

  ரக்‌ஷா பந்தன் கவிதைகள் (Raksha Bandhan Quotes In Tamil)

  • இந்த ரக்‌ஷா பந்தன் தினத்தில் நான் கடவுளிடம் பிராத்திக்கிறேன் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் அன்பின் பிணைப்பு தொடர்ந்து வலுவடைய வேண்டும். எனக்கு ஒரு சகோதரராக மட்டுமின்றி எப்போதும் ஒரு நல்ல நண்பராக இருந்தீர்கள்.  எனக்காக எப்போதும் இருந்ததற்கு நன்றி. 

  மேலும் படிக்க - இவ்வளவு நாள் நாம் வணங்கி வந்த தெய்வங்கள் ஏலியன்ஸ்சா.. ? புராணங்களை ஆய்வு செய்யும் நாசா..

  • உடன் பிறந்தவர்களுக்கு நன்றாக தெரியும் ஒருவருக்கொருவர் இதயத்தில் என்ன இருக்கிறது என்று. வாழ்க்கையின் சிறந்த சில தருணங்களை அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றின் பிணைப்பு விலைமதிப்பற்றது. 
  • அன்பு எவ்வழியிலும் தூவப்படலாம். பெற்றோரிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து, வாழ்க்கைத் துணையிடம் இருந்து, சகோதரர்களிடம் இருந்து. இதில் அண்ணனாக வரும் உறவு நம்மை அக்கறையாய்ப் பார்த்துக் கொள்ள தம்பியாய் வரும் உறவுகளை நாம் அரவணைத்துக் கொள்கிறோம்.
  • சில நேரங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட ஒரு சகோதரனாக இருப்பது சிறந்தது.
  • காலங்கள் கடந்து நீ ஒரு மூளை நான் ஒரு மூளை என்று இருந்தாலும் நம் சொந்தம் எனும் பந்தத்திற்கு என்றுமே அழிவு இல்லை. என்றும் நீ என் வாழ்வில் சகோதரனாக தொடர வேண்டும்.

  சகோதரர்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படியுங்கள்

  pixabay

  • ஒரு சகோதரன் மீதான காதல் போன்ற வேறு காதல் எதுவுமில்லை. ஒரு சகோதரனிடமிருந்து வரும் காதல் போன்று மற்றவை இருப்பதில்லை. 
  • ஒரு சகோதரனை நல்ல நண்பராகவும், ஒரு சகோதரியை நல்ல பெண்ணாகவும் வாழ்க்கையில் பெற்றிருப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்களே! 
  • சகோதரர், சகோதரிகளுடன் இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவர்கள் உயர்ந்து செல்வதைப் பார்ப்பதற்கு ஏதோ ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது. அவையே வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களாகும். 

  Also Read : நேர்மறை மேற்கோள்கள்

  சகோதர்களுக்கான கவிதைகள் (Raksha Bandhan Quotes For Brothers)

  • நாங்கள் வளர்ந்தவுடன் என் சகோதரர்கள் என்னை பற்றி கவலைப்படாதது போல் செயல்பட்டார்கள், ஆனால் அவர்கள் என் வாழ்க்கை குறித்து சிந்திப்பதை நான் எப்போதும் அறிவேன்! 
  • சகோதரர் என்பவர் இயற்கையாக கிடந்த நண்பர். 
  • நான் என் ஆன்மாவை தேடினேன், கிடைக்கவில்லை. கடவுளை தேடினேன் அவரும் கிடைக்கவில்லை. என் சகோதரனை தேடினேன், நான் தேடிய மூன்றும் கிடைத்தது. 
  • நான் சிறந்த சகோதரரைத் தேர்வு செய்ய முடிந்தால் எப்போதும் உன்னைத் தான் தேர்ந்தெடுப்பேன். 
  • என் சகோதரர் என்பவர் எப்போதும் சார்ந்து இருக்க முடியும் என்று எனக்குத் தெரிந்த ஒருவர்!
  • நண்பர்கள் வந்து செல்கிறார்கள், ஆனால் என் அன்பான சகோதரரே நீங்கள் எப்போதும் என்னுடனே இருப்பீர்கள்!
  • என் ரகசியங்கள் அனைத்தையும் மறைத்தவர் நீங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்ய எனக்கு சுதந்திரம் அளித்த நண்பரும் நீயே என் உடன் பிறப்பே!

  காதலனுக்கான காலை வணக்க செய்திகளையும் படியுங்கள்

  சகோதரிகளுக்கான கவிதைகள் (Raksha Bandhan Quotes For sisters)

  • பத்து மாதம் என்னை சுமக்காமல் எனக்கு தாய் ஆனாள், தன் அன்பான அரவணைப்பிலும் நாசூக்கான கண்டிப்பிலும் எனக்கு தந்தாய் ஆனாள், பட்ட படிப்பு படிக்காமலே எனக்கு பாடம் சொல்லி தரும் குரு ஆனாள், அவள் தான் என் உடன் பிறந்த சகோதரி.
  • நான் எப்படி வாழ வேண்டும் என்று என் சகோதரிகள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 
  • சகோதரிகள் சிரிப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும், கண்ணீரைத் துடைப்பதற்கும் இறைவனால் படைக்கப்பட்ட உறவு.

  மேலும் படிக்க - அழகிய தோற்றத்திற்கு: ஆடைகளை உங்கள் தோல் தொனிக்கு ஏற்ப எவ்வாறு தேர்வு செய்வது ?

  pixabay

  • வாழ்க்கை என்னை உனக்கு சகோதரியாக்கியது. இதயம் நம்மை நண்பர்களாக்கியது. 
  • சகோதரிகள் அநேகமாக குடும்பத்திற்குள் போட்டி உறவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்தவுடன் 
  • உங்களுக்கு வலுவாக இருப்பார்கள். 
  • சகோதரி என்பவர் இதயத்திற்கு ஒரு பரிசு, அண்ணன்களுக்கு ஒரு நண்பர், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க பிறந்தவள்.
  • என் அம்மாவிற்கு பிறகு என் வாழ்க்கையில் எனக்கு பிடித்த சிறந்த பெண் நீ தான் சகோதரியே. என் இதயத்தில் உனது இடத்தை வேறு யாராலும் மாற்ற முடியாது. இனிய ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) வாழ்த்துக்கள் சகோதரியே.

  ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் (Rakhi Wishes)

  • என்றும் என்னுடனே இருக்கும், உயிருக்கு உயிராய், சண்டையிடும் கோழிகளாய், பாசத்தில் பரவசமாய், ரத்த பந்தத்தில் என் சொந்தமாய் விளங்கும் என் அண்ணாவுக்கு இனிய ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) நல்வாழ்த்துக்கள்.
  • எப்போதுமே நமக்குள்ளே வருமே வேற்றுமை.  அந்த வேற்றுமையிலும் ரத்த பந்த சொந்தத்தால் வளரும் நமக்குள்ளே ஒரு ஒற்றுமை. இனிய நல்வாழ்த்துக்கள் அண்ணா.
  • வாழ்க்கையில் என்றுமே வெற்றிகளே உன் படையலில் குவியட்டும். பல சாதனைகளை உனதாக்கி விருதுகள் உன் மனதை வலுவாக்கட்டும். என் உள்ளம் கனிந்த இனிய ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) வாழ்த்து என் சகோதரனே. 
  • இன்று உன் வாழ்க்கையில் நீ காணும் நாள் பொலிவோடும் என்றுமே நிலைத்து நிற்குமாறு உன் வாழ்வில் மாறுதல்களையும் தருமாறு அமைய வாழ்த்துக்கள்.

  Also Read : செல்ஃபி தலைப்பு

  pixabay

  • உன் எதிர்காலம் நீ நினைத்தவாறு அமைய உனக்கு கிடைக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்து உன் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறேன் என் சகோதரனே. 
  • நீ வேறு நான் வேறு இல்லை என் சகோதரனே நாம் எப்போதுமே ஒரு தாய் பிள்ளைகள். இந்த நாள் நம் பாசத்தை வெளிக்கொணர்ந்து ஒற்றுமையோடு செயல்பட வழி வகுக்கும் ஒரு நல்ல நாள் வாழ்த்துக்கள் ப்ரோ.
  • காலங்கள் கடந்து நீ ஒரு மூளை நான் ஒரு மூளை என்று இருந்தாலும் நம் சொந்தம் எனும் பந்தத்திற்கு என்றுமே அழிவு இல்லை. என் பணிவான  ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் என் சகோதரனே.
  • அன்புள்ள சகோதரரே, இந்த ரக்சா பந்தனில் நீங்கள் சிறந்த சகோதரர் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தான் என்னுடைய உலகம். இனிய ரக்சா பந்தன் வாழ்த்துக்கள். 
  • எத்தனை உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும் ரத்த பாசத்தினால் வரும் சகோதரன், சகோதரி உறவு என்றுமே உருக்கமானதே. வாழ்த்துக்கள் என் உடன் பிறப்பே.
  • நீ என்னை அடித்தாலும் நான் உன்னை கடிந்தாலும் இறுதியில் பாசம் என்ற ஒன்று வரும்போது அனைத்துமே மறைந்து போகும் ரத்த பிணைப்பில் இணையும்போது இனிய நல்வாழ்த்துக்கள் என் சகோதரனே.

  குறும்புத்தனமான செய்திகள் (Funny Raksha Bandhan Messages)

  • நாம் இதுவரை பூனை, எலி போன்று சண்டை போட்டு கொண்டிருந்தோம். இனி வரும் காலங்களிலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் உடன் பிறப்பே! 
  • குழந்தை பருவத்தில் கழித்த மறக்கமுடியாத நேரத்தை மகிழ்வித்தல் மற்றும் இந்த ஆண்டு புதிய நினைவுகளை உருவாக்க முயற்சி செய்வேன். 
  • வலிக்காமல் அடிப்பது எப்படி என்பது தங்கைகளுக்கு மட்டுமே தெரியும் அதுபோல் வலிக்காமல் வலித்தது போல நடிக்க அண்ணன்களால் மட்டுமே முடியும். 
  • எப்போது சண்டையிட்டாலும் என் பொய்யான அழுகையால் அனைத்தையும் விட்டு தரும் நல்ல உறவு சகோதரர்.

  திரைப்பட வசனங்கள் (Movies Dialogues)

  • எனக்கு உன்ன மட்டும் தான் அண்ணே புடிக்கும் - ஜில்லா 
  • என்ன தான் ஆயிரம் பெண்கள் தோழியாக இருந்தாலும் அக்கா தோழி போல பழகுவதற்கு ஈடாகாது என்ன தான் தவறு செய்தலும் சகோதரர்களை விட்டு தர மாட்டார்கள் அம்மாவை போல பாசம் கட்ட முடியும் என்றால் அது அக்காவால் மட்டுமே முடியும் - ஈசன் 
  • அண்ணன் சீர் அகிலத்தை மிஞ்சும் அவன் பாசம் பார்த்து வானம் அஞ்சும் - கொடிவீரன் 
  pixabay

  • என் தங்கச்சிக்கு அவ ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்க வேண்டும்  - உல்லாசம் 
  • நான் என்னைக்கும் உன்ன எதிரியாக நினைக்கவில்லை அண்ணா - அய்யா 
  • தம்பிகளை எதிர்த்து ஒரு படையே வந்தாலும் அண்ணன்கள் முன்னே நிற்க வேண்டும் - சமுத்திரம் 

  பிரபலங்களின் வார்த்தைகள் (Celebrities Words)

  • "எனக்கு சகோதரர்களின் இராணுவம் கிடைத்துள்ளது" - சித்தார்த் சோப்ரா
  • ரக்சா பந்தன் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஒன்றாகும். இன்று சகோதரி பாதுகாப்பிற்காக சகோதரரின் மணிக்கட்டில் ஒரு புனித நூல் காட்டுகின்றனர் - பிரியங்கா சோப்ரா
  • எப்போதும் போல ... நான் உன்னை நேசிப்பேன், உன்னைப் பாதுகாப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் ... என்றென்றும்! 😝😝😝 ஐ லவ் யூ ஸ்மாலி - தீபிகா படுகோனே 

  pixabay

  • என் சகோதரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ராக்கி நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரையும் என் வாழ்க்கையில் பெற்றதற்கு நான் நன்றி சொல்கின்றேன். உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன்! - சோனம் கபூர்
  • சில உறவுகளுக்கு முடிவில்லை அது போல அண்ணன் தங்கை பாசத்தை பிரிக்க முடியாது - கங்கனா 

  உணர்ச்சிபூர்வமான செய்திகள் (Emotional Rakhi Messages)

  • நீங்கள் எப்போதும் என் சிறந்த நண்பராக இருந்தீர்கள். நான் பயணித்த பாதை சீராக இருப்பதை அவ்வப்போது உறுதி செய்தீர்கள். நான் உலகம் முழுவதும் தேடினாலும், உங்களை விட சிறந்த சகோதரர் இருக்க முடியாது. உங்களது வாழ்க்கை எப்போதும் சிறப்பாக இருக்கும். 
  • நாம் எப்போதும் நெருக்கமாக இருந்தோம். வாழ்க்கை நம்மை வெவ்வேறு பாதைகளில் வழி நடத்தியபோதும்
  • கூட ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம். கண்ணுக்கு தெரியாத நூல் போல நமது அன்பு நம்மை ஒருங்கமைக்கிறது. அதை நாம் நினைவு கொள்ள வேண்டும். நாம் இதுவரை மகிழ்ச்சியாக இருந்தது போலவே எப்போதும் இப்போம். 
  • நான்  தவறு செய்த போது என்னை திட்டினாய். என் வீட்டு பாடங்களை செய்து தந்தாய். எனக்கு மன கவலைகள் இருந்த காலங்களில் அழுவதற்கு ஒரு மடி தேடிய போது நீ இருந்தாய். அவை அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். அந்த நாட்களை நான் தற்போது நினைவு கூறுகிறேன். 
  • நாம் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை பெறுகிறோம். நிறையவற்றை இழக்கின்றோம். ஆனால் ஒரு விஷயத்தில் என்னை நம்புங்கள். நீங்கள் என்னை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள், நான் எப்போதும் இங்கே இருப்பேன், உங்கள் சகோதரியாக. 
  • ஆயிரம் சண்டைகள் நம் உடன் பிறந்த உறவுகளுக்கு இடையே வந்தாலும் இறுதியில் தன் அக்கா, தங்கை,அண்ணா அல்லது தம்பி போன்ற ரத்த பந்தத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நம்மை அறியாமலே நம் கண்கள் கலங்கி விடும்.
  • நம் கூட பிறந்த உறவுகள் என்றுமே இறைவன் நமக்கு துணையாக அனுப்பியிருக்கும் வரமே தவிர பாரங்கள் அல்ல.சகோதர, சதோதரிகள் என நிரம்பி வழியும் குடும்பங்கள் என்றுமே அழகானவைகள் தான்.
  pixabay

  • என் அன்பு உடன்பிறப்பே நீ அருகிலிருந்த தருணங்களின் இனிமையான நினைவுகள், தினமும் என்னை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நிமிடமும் நீ என்னுடன் இருப்பதாகவே உணருகிறேன்.
  • சுயநலமில்லாத அக்கறையுடன் கூடிய பாசம் உடன் பிறந்தவர்களிடம் மட்டுமே. எப்போதும் நான் குழந்தைதான் என் சகோதரர்கள் முன்பு. 
  • பாசம் என்ற ஒன்றை அறியாதவரும் அறிவார் அக்கா, தங்கைகள் கூட பிறக்கும்போது. 

  சகோதரிகளுக்கு வாழ்த்து கூறும் சகோதரரர்கள் (Rakhi Wishes For Sister Who Is Your Brother)

  • ஒரு சகோதரி என்பவர் யார் என்றால், நீங்கள் பேசும்போது கேட்பார்கள், சிரிக்கும் போது உடன் சிரிக்கிறார், மற்றும் நீங்கள் அழும்போது கையைப் பிடித்து ஆறுதல் சொல்வார். ஒரு சகோதரி இருப்பது ஒரு சிறந்த நண்பரை பெறுவதற்கு சமம். நீங்கள் என்ன செய்தாலும்  உங்களுடன் எப்போதும் இருப்பார். என் அன்பான சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள். 
  • அற்புதமான மற்றும் நம்பமுடியாதது உடன்பிறப்புகளே சகோதரிகள். நம் வாழ்க்கையை மிகைப்படுத்தி எல்லா நேரங்களிலும் பொறுப்புடன் செயல்படுவார்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே! 
  • தங்கை என்பவள் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்தாலும் பாசம் என்று வரும்போது அவளை போல் அன்பு காட்டுபவர்கள் யாரும் இல்லை அதே போல பிடிவாத குணங்களும் ஆங்காங்கே குவிந்திருக்கும்.

  வாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள் (Whatsapp Status To Wish Raksha Bandhan)

  • நாம் சொல்லாத விஷயங்களை கூட சகோதரிகளால் புரிந்து கொள்ள முடியும். யாருக்கும் தெரியாத வலியை அவளால் உணர முடியும். நான் என் சகோதரியை நேசிக்கிறேன்.
  • அன்னையாய் நீ அருகில் இருந்த நிமிடங்கள் தந்தையாய் நீ எனக்கு கிடைத்த உறவு.
  • ஒரு பெண் தன்னுடைய குறைகளை பெற்றோர்களிடம் சொல்லுவா, ஆனால் தன ஆசைகள், கனவுகளை அண்ணன்கிட்ட மட்டும் தான் சொல்லுவா! 
  • அண்ணன்களோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தன்னை தங்கச்சி என்று அழைக்க மாட்டார்களா என்ற ஏக்கம்! 
  • அண்ணனுக்காக கண்ணீர் விடுபவள் தங்கை எனில்.. தங்கைக்காக உயிரை விடுபவன் அண்ணன்..

  தூரத்தில் இருக்கும் உடன் பிறப்புகளுக்கான வாழ்த்துக்கள் (Raksha Bandhan Message For Long Distance Sibling)

  • அன்புள்ள சகோதரரே, நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் நலமுடன் வாழ்வாயாக. 
  • நம் தூரத்தில் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை சகோதரியே. என்னுடைய ராக்கி உன்னை சரியான நேரத்தில் வந்தடையும். உன் வாழ்க்கை என்றும் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 
  • சூரியன் இல்லாத நாள், சந்திரன் இல்லாத இரவு, போராட்டமில்லாத வாழ்க்கை, பயத்துடன் மரணம், உறவினர்கள் இல்லாத பண்டிகைகள், நண்பர்கள் இல்லாத வேடிக்கை என்றால் என்ன என்பதை என் சகோதரி என்னுடன் இல்லாத நாட்களில் உணர்கிறேன்.
  pixabay

  • அன்னையாய் நீ அருகில் இருந்த நிமிடங்கள், தந்தையாய் நீ எனக்கு தைரியம் கொடுத்த நிமிடங்கள் என்றுமே மறக்கமுடியாதவை. உங்களைப் போன்ற ஒரு சகோதரர் கிடைத்ததில் மகிழ்ச்சி.
  • நாங்கள் ஒருவருக்கொருவர் ஆத்ம தோழர்கள், மற்றும் இரகசிய சேமிப்பாளர்கள். ஆனால் நாங்கள் காதலர்கள் இல்லை, உடன்பிறப்புகள்!. 
  • நாம் இருவர் இடையிலான அற்பமான சண்டைகளை நன் தற்போது நினைவுகூறுகிறேன். நாம் ஒரே இடத்தில் இல்லாத போதிலும், நான் பகிர்ந்து கொண்ட மகத்தான காதல் என்றும் மாறாது உடன் பிறப்பே. 
  • ஒற்றுமையின் வலுவான பிணைப்பை நான் இன்று (raksha bandhan) நினைவில் கொள்கிறேன். எனக்கு சிறந்த பாதுகாவலராக இருந்ததற்கு நன்றி. 

  ரக்‌ஷா பந்தன் கவிதைகள் (Raksha Bandhan Kavithai)

  1. சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
  பூத்த உறவல்ல இது!
  இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
  பூத்த உறவிது!
  நானிருந்த கருவறையில்
  எனக்குப்பின் வந்த உடன் பிறப்பே!
  நான் தமக்கை என்ற பதவியை
  எனக்குத் தந்தவள் நீ!
  காற்றில் இரு பூக்கள் 
  உரசிக்கொள்ளும் கவிதைதான்
  உனக்கும் எனக்குமான
  மோதல்கள்!!
  இப்பொழுதெல்லாம்
  மோதல்களில் நீயே
  வெற்றிக்கொள்கிறாய்.. 
  நம் ஆயுதங்கள்,
  அதிகபட்சம் தலையணைகள்!
  காலங்கள் 
  வினாடிகளை விடவும் 
  வேகமாய் ஓடுகின்றன!
  பால்ய காலங்களை கடந்து -இன்று
  பருவ காலத்திலே நாம்!
  ஒரே அறையில்
  ஒன்றாக பயில்கிறோம் -பின்
  நன்றாக துயில்கிறோம்!
  எப்போதும் மகிழ்கிறோம்!!
  இருவரும் பிரியும் தருணங்கள்
  எதிர்காலங்களில் வரலாம்!
  சில கண்ணீர்காலங்களை
  அவை நமக்கு தரலாம்!
  அந்த கணங்களில் எல்லாம்
  என் கண்களின் வழியே வழியும்
  உனக்கும் எனக்குமான
  செல்ல மோதல்களின் நினைவுகள்!!!

  pixabay

  2. பார்த்தவுடனே பாசமாய்
  பண்பாக அக்கா என்றழைத்தாய்
  பயத்துடனும் அன்போடும்
  புன்னகையோடு எனை அண்மித்தாய்
  அணமித்த உன்னை இன்புடன்
  அரவணைத்தேன் தம்பியென
  பாசத்தோடும் கண்டிப்போடும்
  பாதுகாத்தேன் தம்பியுனை
  இருவரும் உறவுகள் ஆனோம்
  பிறந்த நாளின் போது
  பாயாசம் ஊட்டி விட்டதை
  மறக்க முடியாது நான்
  மயானம் செல்லும் வரை
  எவ்வளவோ கலகலப்பாக
  என் கூடப்பிறந்த தம்பி நீ
  என்றும் என் கூடவே இருப்பாயென
  நமகிடையில் இன்னோர் உறவை
  நினைத்துப் பார்க்கவேயில்லை
  வாசம் வீசும் நம் உறவுக்குள்
  வேசமின்றி நாசவேலை செய்ய
  பாசம் வைத்து சிலர் பழகி
  மோசம் செய்ததை நினைக்க
  கண்களில் கண்ணீர் அருவியென பாய
  வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக
  கோபம் தணித்து உனை எதிர்பார்த்து
  சோகத்தோடு காத்திருக்கின்றேன்
  ஒருமுறை உன் திருவாயை திற
  செருக்கை துளியின்றி மற
  வா வந்து அக்கா என அழை
  தா அன்பு முத்தங்கள் பல

  3. வெண்ணிலா
  கண்களில் என்ன
  கண்ணீரா?
  விழி நீர் துடை
  செருக்கறுத்து வாவென
  தம்பியை அழைப்பது
  இருக்கட்டும்
  நீயே தம்பியிடம் செல்
  உள்ள(த்)தை சொல்
  வரமறுத்தால்
  அமைதியாய் வா
  அணைக்க ஆயிரம்
  உறவுகள் உண்டு!

  பட்டுப்போன்ற மென்மையான உதடுகளுக்கு : வீட்டிலேயே லிப் ஆயிலை தயார் செய்வது எப்படி?

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன