மகள்களுக்காக ஒரு தினம் – வாழ்த்துக்களும், கவிதைகளும்!

மகள்களுக்காக ஒரு தினம் – வாழ்த்துக்களும், கவிதைகளும்!

ஆணென்ன, பெண்ணென்ன(daughters), அனைவரும் சமம் என்று பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நவீன உலகத்தில், என்றும் மகள்களுக்கு ஒரு தனி இடம் பெற்றோரின் மனதில், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தந்தையின் மனதில் நிச்சயம் இருக்கும். இதை எந்த தந்தையும் மறுக்க முடியாது, எந்த மகளும் உணராமல் இருக்க முடியாது. அன்பையும், ஆசையையும், கொட்டி வளர்த்தாலும், ஒரு நாள் இன்னொருவன் வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்று தெரிந்தாலும், என்றும் அவள் என் வீட்டின் இளவரசி தான், என்ற தந்தையின் உறுதியும், இவ்வுலகில் எந்த திசைக்கு சென்றாலும், என் மகள் நற்பெயரும், புகழும் பெற்று வருவாள் என்கின்ற தாயின் நம்பிக்கையும், ஒரு மகளுக்கு (பெண்ணுக்கு) என்று ஊட்டச்சத்து போல அவலை ஊக்கவித்துக் கொண்டே இருக்கும். பெற்றோரின் அந்த உறுதியும், நம்பிக்கையும், வாழ்க்கையின் எந்த எல்லைக்கு சென்றும் சவால்களை சமாளித்து வெற்றி பெற அவளுக்கு அது வாழ்த்தாக இருக்கும்.

Table of Contents

  மகள் தின வாழ்த்துக்கள்(General Daughter's Day Quotes)

  1. முத்தம் கொடுக்கும்போது வெட்கப்படுவதில்
  காதலியை விட “மகள்களே” ஜெயிகின்றனர்!

  2. ஆண் குழந்தைகள் வீராப்பாக இருந்து கொண்டு
  காரியத்தை இழந்து விடுகிறார்கள்....
  பெண் குழந்தைகள் “அப்பா ப்ளீஸ் பா”
  என காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.....

  3. எத்தனை பெரிய பலசாலிகளையும்
  பெண் பிள்ளைகள் தன் சிரிப்பில் அடக்கிவிடுகிறார்கள்....

  4. ஒரு ஆண் கொஞ்சம் கொஞ்சமாக திருந்திகிட்டே வரான்னா...
  அவன் பெத்த பொண்ணு வளர்ந்துகிட்டே வரான்னு அர்த்தம்....

  5. அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
  மகள்களுக்கு அப்பா அடிமையென்று!

  6. உன்னைத் தூக்கிக் கொண்டு நடக்கும் தருணத்தில்
  உணருகிறேன், என் வாழ்க்கை என் என் கையில் என்று....

  7. அம்மாவின் இரண்டாவது மாமியை - மகள்!
  அப்பாவின் இரண்டாவது தாய் – மகள்!

  8. வேண்டும் என்றே நாம் விட்டுக்கொடுப்போம்,
  “ஜெயித்து விட்டேன், நான் தான் வெற்றி பெற்றேன்” என்ற
  மகளின் கூக்குரளுக்குள் அடங்கிப்போவது
  அனைத்து கர்வமும்....

  9. மருதாணி வைத்து விட்டு “நான் எப்படிப்பா சாப்பிடறது”
  என்று கேட்கும் குழந்தைகள், பேரழகு தான்....

  10. மனைவியின் பேச்சை கேட்காத கணவன் கூட
  மகளின் பேச்சை கட்டளை போல் கேட்பான்!

  மகளதிகார வாழ்த்துக்கள்(Daughter's Day Wishes)

  1. ஒரு ஆணுக்குள் நல்ல மாற்றங்கள் படிப்படியாக எட்டிப் பார்கின்றது என்றால்,
  அவன் மகள் வளர்ந்து கொண்டே இருகின்றாள் என்று அர்த்தம்!

  2. ஆண் குழந்தை வாரிசு என்றால்
  பெண் குழந்தை தெய்வம் தந்த பரிசு!
  இதை யாராலும் மறுக்க முடியாது

  3. ஒவ்வொரு ஆணும் தன்னை நம்பி வந்த மனைவியின் மீது அக்கறையும், அன்பையும் காட்டத் தொடங்குவது,
  அவன் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாய் மாறும் போது!

  4. எத்தனை நன்மைகளும், தியாகங்களும் ஒரு மனைவியோ, தாயோ ஆணுக்கு செய்தாலும், அவர்கள் ராணியாக முடியாது,
  மாறாக, ஆயிரம் தவறுகள் செய்தாலும், என்றும் அவனுக்கு தன் மகள் இளவரசியே!

  5. ஒரு பெண் குழந்தை என்றும் அம்மாவின் பொக்கிஷம்
  அப்பாவின் பெருமை!

  6. மனைவியின் பேச்சை கேட்காத ஆணும், தன் மகளின் பேச்சை மறு வார்த்தை இன்றி கேட்பார்கள்
  இது மகளதிகாரம்!

  7. இந்த பூமிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு – மகள்!
  ஒவ்வொரு பெற்றோரும் எண்ணி வியக்கின்ற அற்புதம் – மகள்!
  வாழ்க்கையின் அர்த்தத்தை ஒவ்வொரு நாளும் உணர்த்தும் புத்தகம் – மகள்!
  எங்கள் வாழ்க்கையை சரியான திசையில் எடுத்துச் செல்லும் திசைகாட்டி – மகள்!

  8. எத்தனை ஆண் குழந்தை ஒரு குடும்பத்தில் இருந்தாலும்
  ஒரு பெண் குழந்தைக்கு அது ஈடாகாது!

  9. வேறொருவன் வீட்டிற்கு சென்று விடுவாள் என்று தெரிந்தாலும்
  மனம் ஒத்துக்கொள்வதில்லை, அவள் பேரன் பேத்திகள் எடுத்து  கிழவியானாலும்,
  என்றும் எங்கள் வீட்டின் இளவரசி தான்!

  10.  ஒரு குடும்பம் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கின்றது என்றால்
  அந்த வீட்டில் மகள் வளருகின்றால் என்று அர்த்தம்!

  pixabay

  அப்பா - மகள் வாழ்த்துக்கள் – பொன்மொழிகள்(Father daughter quotes)

  1. உன்னை தூக்கிக் கொண்டு நடக்கும் அந்த தருணத்தில் உணருகிறேன்
  என் வாழ்க்கை என் கையில் என்று!
  அன்பு மகளுக்கு, தந்தையின் வாழ்த்துக்கள்!

  2. தூங்கும் பொழுது சிரிக்கின்ற குழந்தைகள் கடவுளுடன் பெசுகின்றார்கலாம்...!
  கபடமற்ற சிரிபிருக்கும் இடங்களில் கடவுள் இருப்பது சாத்தியம் தான்...!
  என் மகளின் சிரிப்பில் அதை உணர்ந்தேன்!
  அன்பு தந்தையின் வாழ்த்துக்கள்!

  3. எங்கள் வீட்டு இளவரசி மணம் முடித்து கணவனோடு போகையில்
  வாய் விட்டு அம்மா அழுதாலும்,
  முகத்தில் வலுக்கட்டாயமான புன்னகையோடு
  மனதிற்குள் அழுகையை மறைத்துக் கொண்டு
  கண்ணில் இருந்து மறையும் வரை வைத்தகண் வாங்காமல் மகள் போகும் பாதையை பார்த்து நிற்கும் தந்தையின் வாழ்த்து – ஒப்பற்றது!

  4. ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டாம் தாயாக இருப்பது அவனது மகள்!
  தன் தாயின் அன்பையும், அரவணைப்பையும் மகளிடம் காண்கிறான்
  ஏன், இன்னும் ஒரு படி அதிகமாகவே அன்பை பெறுகிறான்!
  என் மகளுக்கு தந்தையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  5. ஒவ்வொரு திருமணம் ஆன ஆணுக்கும் தான் யார் என்கின்ற புரிதலையும்
  தனது கடமை என்ன என்கின்ற புரிதலையும் உண்டாக்கும் அந்த தருணமே...
  மகளின் பிறப்பு....!
  என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த என் தேவதைக்கு, வாழ்த்துக்கள்!

  6. எத்தனை பெரிய பலசாலியாக நான் இருந்தாலும்,
  என் மகளின் ஒரு பொன் சிரிப்பில் அடங்கி விடுவேன்!
  என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!

  7. உன்னை என் தோளில் தூக்கிக் கொண்டு நடக்கும் அந்த தருணத்தில் உணர்ந்தேன்
  என் எதிர் காலம் இப்போது என் கையில் என்று!
  என் வாழ்க்கையை முழுமையாக்கிய என் மகள் – நீடூழி வாழ்க!

  8. நீ செய்யும் சின்னச் சின்ன குறும்புகள் அவ்வபோது சிறு கோபத்தை வரவழைத்தாலும்
  உன் உதட்டோரம் இருந்து வரும் அந்த புன்னகை, அத்தனை கோபத்தையும், ஆணவத்தையும் தவிடுபொடி ஆக்கிவிடுகின்றது!

  9. தேவதையை இதுவரை நான் நேரில் கண்டதில்லை,
  ஆனால் சற்று ஒரு நிமிடம் வியந்து நின்றேன்,
  என் மகள் உறங்கிக்கொண்டிருக்கும் போது
  தேவதை இப்படித்தான் இருப்பாளோ?

  10. தாயின் அன்பிற்கு ஈடில்லை என்று கூறுவது வழக்கம்
  ஆனால் ஒரு தந்தையின் அன்பிற்கு என்றுமே, எங்குமே நிகரான ஒன்றை கண்டு பிடிக்க முடியாது –மகளுக்கு ஒரு நிகரற்ற அன்பை பரிசாக தரும் போது!

  அம்மா மகள் வாழ்த்துக்கள் – பொன்மொழிகள்(Mother daughter quotes)

  1. நீ வளரும்போது, உன் அழகையும், திறமையையும், அறிவையும் கண்டு வியகின்றேன்!
  இது உன் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றது!
  என் கடமையை உணர்த்துகின்றது! – ஒரு தாயாய் என் மகளுக்கு!

  2. நான் சோர்ந்து போகும் போதெல்லாம், உன் முகத்தை ஒரு முறை பார்ப்பேன் – காத்திருப்பேன்
  உன் துளிர் விடும் புன்னகை எண்ணை ஊக்கப்படுத்தும் அந்த தருனதிர்க்காக!

  3. இயற்கை தந்த ஒரு மிகப்பெரிய அற்புதம் – மகள்!
  யாரும் மறுக்க முடியாத அற்புதம் – மகள்!
  என்றும் என் வாழ்க்கையின் அர்த்தம் – மகள்!

  4. ஒவ்வொரு நாளும் உன் மீது நான் வைத்திருக்கும் அன்பு நீ வளர்ந்து கொண்டு போவது போல வளர்கின்றது!
  என் அன்பு என்றும் தூய்மையானது – என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!

  5. நீ என்னிடம் மழலை மொழியில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் போகலாம்!
  ஆனால், என் வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய் நீ இருகின்றாய்!

  6. என் தாய்க்கு பின் அதே அன்பை, ஏன் அதை விட அதிக அன்பை நான் இன்னொரு தாயிடம் காண்கிறேன்!
  என் மகள் என்னும் உறவில்!

  7. சிறு வயதில் என் தாயிடம் நான் விளையாட பொம்மை கேட்டு அடம் பிடித்ததுண்டு –
  ஆனால் அதை விட ஒரு சிறந்த பரிசை இறைவன் எனக்கு தந்துள்ளான் – எனக்கு நீ மகளாய்!

  8. நீ எவ்வளவு பெரியவளாய் வளர்ந்தாலும், என்றும் எனக்கு குழந்தையே!
  உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் நான் கண்டு ரசிகின்றேன் – தாயாய்!

  9. நான் ஒரு சிறந்த தாயாய் மாறா நீயே காரணம்!
  அன்பின் மற்றுமொரு பரிமாணத்தை உன்னிடம் காண்கின்றேன் – என் மகள் என்னும் வடிவில்!

  10.  நான் தோற்று விடுவேனோ என்று அஞ்சி நின்ற நேரத்தில், உன் மழலை புன்னகையை காட்டி, மனதில் தைரியத்தை வரவளைத்தாய்!
  எத்தனை சவால்கள் வந்தாலும், அது காற்றோடு மறைந்து விடும் – என் மகள் என்னுடன் இருக்கும் போது!

  சிறந்த, ஊக்கமளிக்கும் மகளதிகாரம்(Special and Inspiring Daughter's Day Quotes)

  1. திக்கு அறியாது நின்று கொண்டிருந்த நேரம் – உன் பிறப்பு உணர்த்தியது ஒரு உண்மையை!
  இனி இது தான் எங்கள் பாதை என்று உன் பிஞ்சி விரல் காட்டிய திசையில் பயணிக்கத் தொடங்கினோம்!
  எங்கள் வாழ்க்கையும் முழுமை பெற்று – உன்னால் வாழ்க்கையின் அர்த்தத்தையும் புரிந்து கொண்டோம்!
  எங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!

  2. எங்கள் வாழ்க்கைக்குள் வந்த தேவதை!
  வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்த தேவதை!
  உன் புன்னகையால் சவால்களை உடைத்தெறிந்த தேவதை!
  எங்கள் வாழ்க்கையில் என்றும் நீ – எங்கள் மகளாய்!
  வாழ்க்கையின் அர்த்தம் தந்த மகளுக்கு வாழ்த்துக்கள்!

  3.  தேவதைகள் என்றும் மகளின் வடிவத்தில் இந்த மண்ணில் உலா வந்து கொண்டிருகின்றார்கள்!
  நான் கொடுத்து வைத்தவன், அந்த தேவதையில் ஒன்று எங்கள் மகளாய் இன்று!

  4. எங்கள் கண்ணுக்குத் தெரிந்த தெய்வம் ஒன்று எங்கள் வீட்டில் அவதரித்துள்ளது!
  வந்த அந்த தெய்வம் எங்கள் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் அட்சய பாத்திரமாய் நிரப்பிக்கொண்டிருகின்றது!
  எங்கள் மகளின் வடிவத்தில்!

  5. என் வாழ்க்கைக்கு முழுமையை தந்த மகள்!
  ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில்
  இது தான் வாழ்க்கை என்று திசை காட்டிய என் மகள்!
  என்றும் நிரந்த ஆனந்தத்தோடு வாழ – வாழ்த்துக்கள்!

  6. எங்களுக்கு மகளாய் நீ வந்து பிறந்தது உனக்கு எப்படியோ,
  ஆனால், எங்களுக்கு நீ மகளாய் வந்தது எங்கள் எத்தனை ஜென்ம தவம்!
  கதிரவனின் சுடரொளியாய் ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் எங்கள் மகளுக்கு – வாழ்த்துக்கள்!

  7. நீ எங்கள் வாழ்க்கையில் வந்த தருணம், அனைத்து மகிழ்ச்சியும் தேடி வந்தது –
  இத்தனை மகிழ்ச்சிக்கும் சொந்தக்காரி – நீ தான்!
  ஒவ்வொரு நொடியும் உன் புன்னகை சிந்தும் முகத்தை கண்டு வியந்து நிற்கின்றோம்!
  எத்தனை அழகு! அந்த அழகில் அன்பும் கலந்துள்ளது அல்லவா!

  8. உன் பிஞ்சி விரலால் என் விரலை பற்றியை அந்த கணம் தொலைந்து விட்டேன்!
  இன்று வரை எண்ணை காணவில்லை!
  உன் புன்னகை சிந்தும் அழகான முகத்தை கண்டு மலைத்து நிற்கின்றேன்!
  நான் எத்தனை அதிர்ஷ்டசாலி என்று!
  என் மகளுக்கு வாழ்த்துக்கள்!

  9. முதன் முதலாய் “அம்மா” என்று நீ அழைத்த அந்த தருணம் –
  தொலைந்து போனேன்!
  அன்று உன் அன்பில் விழுந்தவள் – இன்று வரை எழ முடியவில்லை!
  என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!

  10. உன்னை பார்க்கும் ஒவ்வொரு கணமும் என் வாழ்க்கையின் கடமையை

  உணர்த்திக் கொண்டே இருகின்றது!

  மகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் அது புரியும்!

  pixabay

  மகளதிகார வாழ்த்து அட்டை பொன்மொழிகள்(Daughter's Day Greeting Card wishes )

  1. நீ கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லாமல் போகலாம், ஆனால் உன் புன்னகையும், குறும்புத்தனமான கேள்விகளும், எண்ணை என்றும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கும்!
  என் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  2. இந்த உலகின் முதல் அற்புதம் – மகள்!
  வாழ்க்கையின் பல புரியாத புதிருக்கும் ஒரு புன்னகையில் பதிலளிக்க முடியும் என்றால் – அது என் மகளால் மட்டுமே முடியும்!

  3. எத்தனை அதிசயம் இந்த பிரபஞ்சத்தில் இருந்தாலும்
  என்றும் எனக்கு என் மகள் ஒரு தன்னிகரற்ற அதிசயம்!
  அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!

  4. இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் எனக்கு சிறப்பான நாளே!
  என் மகளின் புன்னகை நிறைந்த முகத்தை காணும் போது
  இளம் காலை கதிரவனும் தோற்று விடுவான்!
  என்றும் அன்புடன் – அம்மா – அப்பா!

  5. ஒவ்வொரு நாளும் எப்படியோ கடந்து கொண்டிருந்தது
  நீ எங்கள் வாழ்க்கைக்குள் வரும் வரை!
  ஒவ்வொரு நாளும் ஒரு புது பிறப்பாய் ஆனது – நீ எங்கள் வாழ்க்கைக்குள் வந்த பிறகு!
  எங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!

  6. இந்த உலகத்தில் எங்களுக்கென்று ஒரு அழகான வாழ்க்கை உள்ளது என்ற உண்மையை உணர்ந்தோம் – அவள் பிறந்த அந்த நொடிபொழுதில்!
  எங்கள் அன்பு மகளுக்கு என்றும் அன்புடன் – அம்மா – அப்பா!

  7. ஒவ்வொரு நாளும் இரசித்து இரசித்து வாழ்ந்து கொண்டிருகின்றோம்
  எங்கள் மகள் ஒவ்வொரு நாளும் வளருவதை பார்த்து!
  ஒவ்வொரு நாளும் எங்கள் கடமையை உணருகின்றோம்
  எங்கள் மகள் ஒவ்வொரு நாளும் பெரியவளாகிக் கொண்டிருப்பதை பார்த்து!
  எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் – அன்பு மகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

  8. எங்களுக்கான அங்கீகாரத்தை தந்தவள் நீ!
  எங்களுக்கான அடையாளத்தை தந்தவள் நீ!
  எங்களுக்கான வாழ்க்கையை தந்தவள் நீ!
  என்றும் உனக்காக வாழுந்து கொண்டிருக்கும் – அம்மா – அப்பா!

  9.  எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஆனந்தம் நிறைந்துள்ளது!
  எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நம்பிக்கை நிறைந்துள்ளது!
  எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் எதிர்காலம் தெரிகின்றது!
  எங்கள் மகளாய் நீ வந்த பிறகு!

  10. என் தாயின் அன்பை உன்னிடத்தில் காண்கின்றேன்!
  என்றும் என் தாயின் நினைவு எனக்கு வராமல் உன் நிகரற்ற அன்பால் அதனை மறைத்து விட்டாய்!
  என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்! 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.