என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா ! செய்து பாருங்கள் கொலாஜென் ஃபேஷியல் !

என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா ! செய்து பாருங்கள் கொலாஜென் ஃபேஷியல் !

மனித உடல் கொலாஜென் எனும் அற்புத பொருளால் ஆனது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் அதுதான் உண்மை. இது உங்கள் தசைகள், சருமம், ரத்தம், எலும்பு , இணைப்பு திசுக்கள், தசை நார்கள், குருத்தெலும்புகள் என எல்லாவற்றிலும் இருக்கிறது.


மனித உடல் கொலாஜென் (Collagen) என்கிற புரோட்டீன் ஃபைபர்ஸ் மூலம் உருவாகிறது. முதுமை அடையும்போது உடலில் நீர் மற்றும் கொழுப்புச்சத்து இல்லாமல் கொலாஜென் சுருங்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க இந்தச் சுருக்கம் அதிகரிக்கும்.


இந்த நேரங்களில் நீங்கள் ஊட்ட சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கூடவே நீங்கள் உங்கள் முகத்தில் பூசுவதற்கும் கொலாஜென் வேண்டியதிருக்கிறது. கடைகளில் கொலாஜென் என்று கேட்டால் ஜெல் போன்ற பதத்தில் கிடைக்கும். கொலாஜெனை முப்பது வயதிற்கும் மேல் உபயோகிக்கலாம்.பயன்பாடுகள்


முதிர்ச்சியான முகம் உள்ள அனைவருமே கொலாஜெனை வாரமிருமுறை தடவி பின்னர் முகம் கழுவினால் முகச்சுருக்கம் நீங்கி இளமை மலர்வது நிச்சயம்.


சில கடைகளில் கொலாஜென் மாஸ்க் கூட கிடைக்கிறது. இதனை அப்படியே முகத்தில் வைத்து அரைமணிநேரம் கழித்து நீங்கள் முகம் கழுவ முகம் பளிச்சென்று இருக்கும்.


இந்த மாஸ்க் தற்போது ஆரஞ்சு பிளேவரில் கிடைக்கிறது. ஆரஞ்சு சருமத்திற்கு மேலும் மெருகூட்டும் என்பதால் இந்த பிளேவர் உங்கள் முகத்திற்கு நல்லது.40 வயதுக்கும் மேலானவர்கள் உபயோகப்படுத்த வேண்டியது ஹீட் மாஸ்க் முறை. மிகவும் சுருக்கங்கள் கொண்டவர்களுக்கு இது அவசியம் தேவைப்படும். கொலாஜென் பேஷியலுக்கு முன்னர் இதனை முகத்தில் தடவலாம். இதனை தடவி ஒரு நிமிடம் முகத்தில் விட்டு விட வேண்டும். கொஞ்சம் சூடான தன்மையை கொடுக்கும். ஆனால் சரும துளை வழி சென்று அழுக்குகளை நீக்கி விடும் தன்மை கொண்டது இந்த ஹீட் மாஸ்க்.


உங்கள் முகத்தின் பிரகாசம் பேஷியலுக்கு முன்பாகவே பளிச்சிடும்.


ஆகவே ஆரோக்கியமான முக அழகிற்கு முதுமை தோற்றத்தை மறந்து இளமையாக மாற கொலாஜென் பேஷியல் உங்களுக்கு பெரிதும் உதவி செய்கின்றன. பிராண்டட் கடைகளில் தரமான கொலாஜென்களை வாங்கி பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். இப்போது ஆன்லைன் மூலமும் இதனை வாங்கி விடலாம்.வாரம் இரண்டு முறை இதனை நீங்கள் பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மாறி முகம் இளமை பொலிவோடு இருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.


மேலும் இதனுடன் நீங்கள் கொலாஜென் உணவு சப்ளிமெண்ட்கள் கிடைக்கின்றன. அதனை நீங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகென்ன எப்போதும் கல்லூரி மாணவி தோற்றத்தில் காண்பவரை அசத்துங்கள்!படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !


முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!


---                                                               


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.