நார்த் இண்டியன்ஸ் போல கண்ணாடி மேனி வேண்டுமா ! தலைமுடி முதல் கால்நுனி வரை அழகிற்கு உத்தரவாதம் தரும் ஒரே எண்ணெய் இதுதான் !

நார்த் இண்டியன்ஸ் போல கண்ணாடி மேனி வேண்டுமா ! தலைமுடி முதல் கால்நுனி வரை அழகிற்கு உத்தரவாதம் தரும் ஒரே எண்ணெய் இதுதான் !

உங்கள் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஒரே ஒரு எண்ணெய் உதவுகிறது என்றால் அதனை உபயோகிக்காமல் இருக்க முடியுமா என்ன. அப்படிப்பட்ட அற்புத எண்ணெய் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.


கடுகு எண்ணெய் (Mustard oil ) என்பது பொதுவாக வடமாநிலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியர்களில் பெரும்பாலோர் நல்ல நிறமோடும் பொலிவோடும் கண்ணாடி மேனி கொண்டு விளங்க இந்த கடுகு எண்ணெய் தான் காரணம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா !


வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !கடுகு எண்ணெய் பொதுவாக இதய நோய்களை தடுக்கிறது, உடல் வலியை போக்குகிறது, மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணி போன்ற பல ஆரோக்கிய விஷயங்களை நாம் ஏற்கனவே கேட்டிருப்போம். ஆனால் தலைமுடி முதல் கால்நுனி வரை நம் அழகையும் பேணி காக்க வல்லது கடுகு எண்ணெய்.


சரும அழகிற்கு கடுகு எண்ணெய் ஒரு வரப்பிரசாதம். இது ஒரு இயற்கையான சன்ஸ்க்ரீன் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா. உண்மை அதுதான். இதனை சருமத்தில் தடவுவதன் மூலம் மேனி நிறம் அதிகமாகும். மேலும் கரும்புள்ளிகளை நீக்கும்.


கார்காலத்தின் மொத்த நிறமே.. பெண்மை எழுதும் கண்மை நிறமே ! கருமையான அடர்த்தியான கூந்தலுக்கான குறிப்புகள் !கடுகு எண்ணெய் ஒரு இயற்கையான க்ளென்சரும் கூட. கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து உடல் முழுதும் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்னர் குளித்து வந்தால் கண்ணாடி மேனி உங்களுக்கும் வசப்படும்.


கருப்பான உதடுகளால் கவலைப்படுகிறீர்களா. தினமும் தூங்கும் முன் கடுகு எண்ணெய்யை உதடுகளில் தடவி விட்டு உறங்குங்கள். இப்படி செய்வதனால் உதட்டின் நிறம் மேம்படும். மென்மையான மிருதுவான உதடுகள் உங்களை மேலும் அழகூட்டும்.


தேவதை சருமத்தில் தென்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்புருவங்கள் அடர்த்தியாக வேண்டும் என்பவர்கள் தினமும் இரவில் புருவங்களில் இந்த எண்ணெய்யை தடவி வர ஒரு மாதத்தில் அடர்த்தியான புருவம் கிடைக்கும்.


பளிச்சென வெண்மையான பற்கள் வேண்டுபவர்கள் பல் தேய்த்து முடிந்ததும் கொஞ்சம் கடுகு எண்ணெய் நான்கு துளி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து வாயில் ஊற்றி கொஞ்ச நேரம் வைத்திருந்து கொப்பளித்தால் பற்களில் உள்ள நோய்கள் நீங்கி பளிச் பற்கள் கிடைக்கும்.


சேலை கட்டும் வாசனை பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் ! சம்மர் ஸ்பெஷல் !அடர்த்தியான கருகரு கூந்தல் வேண்டுவோர் தினமும் இரவு மயிர்க்கால்களில் எண்ணெய் படும் அளவு தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து விடவும். அதன் பின்னர் தலைக்கு குளியல் கேப்பை போட்டு கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் தலையை ஷாம்பூவால் அலசுங்கள். கடுகு இளநரையையும் போக்கும் வல்லமை கொண்டது.


நீளமான தலைமுடி வேண்டும் என்பவர்கள் தினமும் தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து தலைமுடியில் தடவி வந்தால் நீளமான கருமையான முடி உங்களுக்கு கிடைக்கும்.


மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---                    


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                       


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.