வாழ்க்கை ரொம்ப 'வெறுப்பா' இருக்கும்போது.. இந்த மாதிரி 'சாங்ஸ்' கேட்டு இருக்கீங்களா?

வாழ்க்கை ரொம்ப 'வெறுப்பா' இருக்கும்போது.. இந்த மாதிரி 'சாங்ஸ்' கேட்டு இருக்கீங்களா?

வாழ்க்கையில(Life) எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்கவே முடியாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில(Situation) நம்ம எல்லாருக்கும் கஷ்டம்னு ஒண்ணு வரத்தான் செய்யும். ரொம்ப நம்பினவங்க நம்மள காயப்படுத்தும் போது, நம்ம காதலனோ-காதலியோ நம்மள விட்டு போகும்போது, பணம்-வேலை இல்லாம கஷ்டப்படும் போது, துரோகத்துக்கு ஆளாகும்போது எல்லாம் என்னடா இந்த வாழ்க்கைனு(Life), அவ்ளோ கடுப்பா இருக்கும்.


அந்தமாதிரி டைம்ல யாருமே நம்மகூட இருக்க மாட்டாங்க, எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. நாம மட்டும் இவ்ளோ கஷ்டப்படுறோம்ன்னு
தோணும். சிலநேரம் தற்கொலை எண்ணம்கூட தலைதூக்கும். அந்தமாதிரி டைம்ல நம்மள அறியாம ஏதாவது ஒரு விஷயம் நம்ம மனநிலைய மாத்தும்.அவ்ளோ ஏன் சிலநேரம் நமக்குப் புடிச்ச பாட்டுகூட(Songs) நமக்கு பூஸ்ட் சாப்பிட்ட மாதிரியான தெம்பக் கொடுக்கும். அப்படிப்பட்ட பாட்டுக்கள(Songs) இங்கே நாம பாக்கலாம்.


வெற்றிக்கொடி கட்டு

Subscribe to POPxoTV

படையப்பா படம் வந்து 20 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. ஆனா இன்னும் அந்த படம் இங்க எல்லாருக்கும் செம பேவரைட் தான். சொத்து முழுக்க
ரஜினி இழந்து திரும்ப அவர் எப்படி பெரிய பணக்காரர் ஆகறார் அப்படிங்கறது தான் கதை. அந்த படத்துல எல்லா பாட்டுமே சூப்பரா இருந்தாலும் இந்த
வெற்றிக்கொடி கட்டு பாட்ட மட்டும் யாராலும் அடிச்சுக்கவே முடியாது.இந்த பாட்டோட ஒவ்வொரு லைனும் நம்ம எனர்ஜிய சும்மா எக்கச்சக்கமா
தெறிக்க வைக்கும். எனக்குத் தெரிஞ்சு எல்லாரோட ஆல்டைம் பேவரைட் பாட்டா கூட இது இருக்கலாம்.ஒவ்வொரு பூக்களுமே

Subscribe to POPxoTV

நான் சின்ன வயசா இருக்கும்போது இந்த பாட்ட(Songs) எங்க கேட்டாலும் சிலிர்த்துப் போ சில்லறை எல்லாம் விட்டெறியத் தோணும். அந்தளவு
பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. இத பாடிப்பாடியே நெறைய பேரு பாடகி ஆகி இருக்காங்க, அப்படின்னா பார்த்துக்கோங்க. இந்த பாட்டு
வந்த புதுசுல யாராவது பசங்க கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்துட்டா போதும், நம்ம பொண்ணுங்க இந்த பாட்ட பாடி அவன ஜென்மத்துக்கும் இனிமே அழ மாட்டேன்னு சூடம் ஏத்தி சத்தியம் செய்யாத குறையா ஆக்கி வச்சிடுவாங்க. என்ன இருந்தாலும் இந்த பாட்டோட வரிகள் இன்னைக்கு கேட்டாலும் செமதான் போங்க.


நிமிர்ந்து நில்

Subscribe to POPxoTV

சரோஜா படத்துல கடைசில எல்லாருக்கும் தைரியம் வரும். கரெக்டா அதுக்கேத்த மாதிரி இந்த பாட்ட போட்டு பசங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏத்தி விடுவாங்க. சிவா, பிரேம்ஜி எல்லாருமே மொத்தமா நடந்து வர்ற மாதிரி சீன்ஸ், இதுக்கு மேல எதுவுமே இல்ல அப்படின்னு ஒரு சூழ்நிலை வர்றப்போ ஏதாவது ஒண்ணு செய்யத்தோணும்ல அத ஞாபகப்படுத்தும்.


எதிர்நீச்சல்

Subscribe to POPxoTV

சிவகார்த்திகேயன் பர்ஸ்ட் ஹீரோவா அறிமுகமான எதிர்நீச்சல் படத்துல இடம்பெற்ற இந்த பாட்டு நம்ம எல்லார் வாழ்க்கைலயும் கனெக்ட் ஆகற மாதிரியே இருக்கும். முயற்சி பண்ணினா எல்லாருமே ஜெயிக்கலாம்னு பாட்டுல சொன்ன சிவகார்த்தி, தன்னோட நெஜ வாழ்க்கைலயும் செமையா முயற்சி பண்ணி கோலிவுட் டாப் ஹீரோக்கள்ல ஒருத்தரா மாறிட்டார். இந்த பாட்ட கேட்டு நீங்களும் நெஜ வாழ்க்கைல நெறைய சாதிக்க வாழ்த்துக்கள்.


வேலையில்லாப் பட்டதாரி

Subscribe to POPxoTV

வேலையில்லாப் பட்டதாரி பசங்களோட வலிய இயல்பா பதிவு பண்ணதுதான் இந்த படம் தனித்துத் தெரியக்காரணம். வேலை வெட்டி இல்லாத தனுஷ் கடைசில வேலைக்கு போய் முன்னேறது தான் படத்தோட கதை. இந்த படத்தோட வெற்றிக்கு என்ஜினியரிங் பசங்க ஒரு காரணம்னா, இன்னொரு காரணம் இந்த பாட்டு தான்னு தாராளமா சொல்லலாம். அந்தளவு படத்தோட வெற்றிக்கு இந்த பாட்டும் ஒரு முக்கியக் காரணம் பாஸ்.


உங்களுக்கும் இதேமாதிரி எக்ஸ்ட்ரா எனர்ஜி தர்ற சாங்ஸ் ஏதாவது இருந்தா கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க பாஸ்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.