இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?.. நிவேதா பெத்துராஜை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?.. நிவேதா பெத்துராஜை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

'அடியே அழகே அழகே அடியே' ஒருநாள் கூத்து படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ்க்கு(Nivetha Pethuraj) என்றே எழுதி வைத்தது போல இந்த பாடல் அவருக்கு மிகவும் பொருந்திப் போனது. இன்றும் பல காதலர்களின் பேவரைட் டியூனாக இப்பாடல் இடம் பெற்றுள்ளது.இந்த படத்துக்குப் பின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பொன் மாணிக்கவேல், பார்ட்டி, ஜகஜால கில்லாடி
மற்றும் பெயரிடப்படாத விஜய் சேதுபதி படம் ஆகியவை நிவேதா பெத்துராஜின்(Nivetha Pethuraj) கைகளில் உள்ளன. மதுரைப்பொண்ணு என்பதால் சமூக வலைதளங்களில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on
தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு அவ்வப்போது தனது புகைப்படங்கள், சிறு வீடியோக்கள் போன்றவற்றை நிவேதா சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். அதேபோல சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை நிவேதா(Nivetha Pethuraj) தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட, சமூக வலைதளம் முழுவதும் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளது.பாதுகாப்பு கருதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்ளே செல்போன் எடுத்துச்செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை மிகத்தீவிரமாக கோயில் நிர்வாகம் பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பிரசாதம் வைத்துக்கொண்டு நிவேதா(Nivetha Pethuraj) தனது தோழியுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பகிர, உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் பர்மிஷனா? என நெட்டிசன்கள் அவரை வைத்து செய்துவிட்டனர்.


இதனைத்தொடர்ந்து தனது புகைப்படங்களை அவசர அவரசமாக சமூக வலைதளங்களில் இருந்து நிவேதா நீக்கியுள்ளார். எனினும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


என்ஜிகே அப்டேட் எங்க?தேர்தல், ஐபிஎல் என சமூக வலைதளங்கள் திருவிழா கோலம் பூண்டிருக்க, வழக்கம்போல என்ஜிகே அப்டேட் குடுங்க என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை சூர்யா ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.இன்று காலை தண்ணீர் குறித்த விழிப்புணர்வு ட்வீட் ஒன்றை போடும்போது சத்தியமாக பிரபு இப்படி எதிர்மறையாக வந்து நிற்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த ட்வீட் கீழே எங்களுக்கு என்ஜிகே அப்டேட் வேணும் என அடம்பிடித்த சூர்யா ரசிகர்கள் தற்போது வழக்கம்போல #NGKUpdate என்னும் ஹேஷ்டேக்கை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.