'தளபதி 63' படத்தின் உண்மையான 'கதை' இதுதானா?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

'தளபதி 63' படத்தின் உண்மையான 'கதை' இதுதானா?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக விஜய்(Vijay) இருக்கிறார். அதேபோல இவரது படங்கள் வெளியாகும்போது சர்ச்சைகள் ஏற்படுவதும் தொடர் வாடிக்கையாகி வருகிறது. காவலன்,துப்பாக்கி தொடங்கி சமீபத்தில் வெளியான சர்கார் வரை இவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் கண்டிப்பாக சர்ச்சைகள் இருக்கும் என அவரது ரசிகர்களே பேச ஆரம்பித்து விட்டனர். அந்தளவுக்கு சர்ச்சைகளுடன் விஜய்(Vijay) படங்கள் வெளியாவது தொடர் வாடிக்கையாக உள்ளது.தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய்(Vijay) நடித்துவரும் தளபதி 63(Thalapathy 63) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் இணைந்து இருக்கிறார். இதுதவிர நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி போன்ற நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தீபாவளியைக் குறிவைத்து வெளியாகும் இப்படத்தின் கதை சமீபத்தில் அரசல்புரசலாக வெளியாகியுள்ளது.


அதன்படி தளபதி 63(Thalapathy 63) படத்தின் கதை இதுதானாம். கல்லூரி நண்பர்கள் விஜய், கதிர் இருவருக்கும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்களாக வரவேண்டும் என்பது தான் லட்சியம். காலச்சூழ்நிலையில் இருவரும் கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். இரு அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் கதிர் கொல்லப்படுகிறார். அது சாதாரணக் கொலை தான் என பலரும் நினைத்திருக்க அதன் பின்னால் இருக்கும் சதி விஜய்க்குத் தெரிய வருகிறது.நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும். கதிர் பயிற்சியளித்த அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என சவால்கள் விஜய் முன்
வரிசைகட்டி நிற்கின்றன. இதனை விஜய் எப்படி திறமையாக எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதை
வைத்துப்பார்க்கும்போது தெறி, மெர்சல் வரிசையில் தளபதி 63(Thalapathy 63) படமும் வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆளப்போறான் தமிழன்..


தெலுங்கு சூப்பர்ஸ்டார்


டோலிவுட் பிரின்ஸ் மகேஷ்பாபுவுக்கு கவுதம்(12) என்ற மகனும், சித்தாரா என்ற 6 வயது மகளும் உள்ளனர். அவ்வப்போது தனது மகன், மகள் மற்றும் மனைவியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை மகேஷ் வாடிக்கையாக வைத்துள்ளார்.அந்தவகையில் இவர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி 2 படத்தில் அனுஷ்கா, பிரபாசை ' கண்ணா நீ தூங்கடா,'' என்னும் பாடலை பாடுவார். 2-ம் பாகத்தில் இடம்பெற்ற அனுஷ்கா-பிரபாஸ் காதல் காட்சிகளுக்கு வலு சேர்ப்பது போல அந்தப்பாடல் அமைந்து இருக்கும். இந்த பாடலுக்கு தனது 6 வயது மகள் சித்தாரா அற்புதமாக நடனமாடுவதை மகேஷ்பாபு வெளியிட்டு இருக்கிறார்.
 

 

 


View this post on Instagram


 

 

What a talent👏👏👏👏👏😍😍😍 #MySitaPapa ❤


A post shared by Mahesh Babu (@urstrulymahesh) on
வெளியான சுமார் 48 மணி நேரத்தில் இதனை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதில் சித்தாராவின் நடனம் உண்மையில் தத்ரூபமாக இருப்பதாகவும், அவர் நடனம் அற்புதமாக இருக்கிறது என்றும் மகேஷ் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில் மகேஷ், மகள் சித்தாரா இருவரும் இணைந்து வீட்டில் நடனம் ஆடுவார்கள். மகன் கவுதம் சற்று கூச்ச சுபாவம் கொண்டவன் என்பதால் இதில் அவன் கலந்துகொள்ள மாட்டான் என்று இதுகுறித்து மகேஷ் மனைவி நம்ரதா தெரிவித்து இருக்கிறார்.


கண்ணா நீ தூங்கடா...


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.