'தல'யின் காலில் என் தலை.. பிரபல நடிகையின் 'வைரல்' போஸ்ட் உள்ளே!

'தல'யின் காலில் என் தலை.. பிரபல நடிகையின் 'வைரல்' போஸ்ட் உள்ளே!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர் அஜீத்குமார். வெற்றி,தோல்வி,பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதைத் தாண்டி தியேட்டர்களில் இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைப்பதால் 'ஓபனிங் கிங்' என பெயரெடுத்தவர். தல என ரசிகர்களாலும், சக நடிகர்களாலும் அழைக்கப்படும் அஜீத் ஒரு ட்ரெண்ட் செட்டரும் கூட. சால்ட்&பெப்பர் லுக்கில் வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ட்ரெண்ட் செட் செய்தவர்.


எந்தவொரு பொது நிகழ்ச்சிகள், பட விழாக்கள், ப்ரோமோஷன்கள், பேட்டிகள் என எதிலும் தலைகாட்ட மாட்டேன் என சொல்லி அதனை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறார் அஜீத்(Ajith). இந்த அமைதியான குணத்தால் ரசிகர்கள் மட்டுமின்றி இளம் நடிகர்கள், நடிகைகள் பலரும் தல அஜீத்தை தங்களது ரோல்மாடலாகப் பாவித்து வருகின்றனர்.திரையில் மட்டுமே அவரைப்பார்க்கும் வாய்ப்பு என்பதால் அவரது படங்கள் வெளியாகும் தினமன்று திரையரங்குகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பேனர்கள், போஸ்டர்கள், அன்னதானம், செடிகள் பரிசளிப்பு என தல மீதான தங்களது பாசத்தை ரசிகர்கள் பல்வேறு விதங்களிலும் வெளிப்படுத்துவர்.சமீபத்தில் அஜீத்(Ajith) ரசிகர்கள் பாஜக கட்சியில் சேர்ந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தான் எந்தக்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன். எனது பெயரையோ, படங்களையோ எந்தவித அரசியல் நிகழ்வுகளிலும் பயன்படுத்தக்கூடாது என அஜீத்(Ajith) அறிக்கை விட்டார். அவரின் இந்த வெளிப்படையான அறிக்கையை பலரும் பாராட்டினர்.


இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான இவரின் விஸ்வாசம் படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்தது. படம் வெளியாகி சுமார் 70 நாட்களைக் கடந்தும் இன்னும் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் விஸ்வாசம் வெற்றி நடைபோட்டு வருகிறது. தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத்(Ajith) நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் அஜீத் மிகவும் பிஸியாக இருக்கிறார்.அடுத்ததாக மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அரசியல் படமொன்றிலும், சிவா இயக்கத்தில் ரீமேக் படமொன்றிலும் அஜீத்(Ajith) நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை ஸ்ரீரெட்டி(Sri Reddy) தனது பேஸ்புக் பக்கத்தில் தல அஜீத் குறித்து போஸ்ட் ஒன்றைப்போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்  நடிகர் அஜீத்தை புகழ்ந்து இருப்பதோடு, அவரை ஒருதலையாகக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


தமிழ், தெலுங்கில் உள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் குறித்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட ஸ்ரீரெட்டி(Sri Reddy) தற்போது சென்னையில் குடியேறி படங்களில் நடித்து வருகிறார்.


அஜீத்(Ajith) குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் போஸ்ட் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டில் ஸ்ரீரெட்டி(Sri Reddy) கூறி இருப்பது இதுதான்:-''அஜீத்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ.சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர்.குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜீத். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல" என தெரிவித்துள்ளார். 


வழக்கமாக தனது பேஸ்புக் பதிவுகளில் ஹீரோக்களை திட்டி பதிவிடும் ஸ்ரீரெட்டி, முதன்முறையாக தல அஜீத்தைப் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கு அஜீத் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஹீரோ ரஜினி தான் என ரஜினி ரசிகர்களும், விஜய் தான் என விஜய் ரசிகர்களும் தங்களது நடிகருக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர்.மொத்தத்தில் ஸ்ரீரெட்டியின் இந்த போஸ்ட் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.