'சிக்கு புக்கு ரயிலே ' என்று ரயிலில் பயணம் செய்ய ஆசையா? இந்த பயண ஒப்பனை அத்தியாவசியங்களுடன் செல்லுங்கள் !

'சிக்கு புக்கு ரயிலே ' என்று  ரயிலில் பயணம் செய்ய ஆசையா? இந்த பயண ஒப்பனை அத்தியாவசியங்களுடன் செல்லுங்கள் !

பயணம்  நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்! நீங்கள் ரயில் பயணத்தை விரும்புபவர் என்றால் இது உங்களுக்கான நற்செய்தி ! இந்திய ரயில்வே , தமிழ்நாட்டின் (தமிழ்நாடு) அணைத்து வரலாற்று மிக்க கோவில்கள்  மற்றும் அதன் சிறந்த கட்டிடக்கலைகளை காண்பிக்க புதிய பயணங்களை அறிவித்திருக்கிறது. இந்த ரயில் (rail) பிப்ரவரி 28ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு மார்ச் 3ஆம்  தேதி சென்னைக்கு மீண்டும் வந்து சேரும் என்று அறிவிக்க பட்டுள்ளது.


பயணம் என்றாலே... அடுத்து எங்கே செல்லலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்ற ஏற்பாடுகளில் இறங்குவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். எந்த ஊரில் என்ன விசேஷம், அதன் வரலாறு, அதற்க்கு என்ன அணியலாம், அங்கு உணவில் எது சிறந்தது, ஷாப்பிங், கோவில், சுற்றுலா தளங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


உங்கள் பயணம் (travel) மூன்று நாட்களாக இருக்கலாம் அல்லது ஒரு வாரத்திற்கு மேல்  இருக்கலாம். நீண்ட பயணங்களிற்கு நீங்கள் குறைவாக பேக் செய்வது அவசியம். இது உங்கள் பேட்டியின் எடையை குறைக்க உதவும். பயணம் செய்யும் நேரங்களில் உங்களுக்கு தேவையான ஒப்பனை பொருட்கள்  அனைத்தையும் கொண்டு செல்லுவது கடிமான விஷயம். ஆகியனால், தேவைக்கேற்ப அதை எவ்வாறு பேக் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.


பவுண்டேஷன் -


உங்கள் மேக்கப்பில்  பவுண்டேஷன் அவசியம் தான். ஆனால் அதை முழு பாட்டிலில் எடுத்து செல்லுவது கடினம். அதை ஒரு சிறிய மாத்திரை பெட்டியில் நிரப்பி எடுத்திக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் நிறத்திற்கு ஏற்ற பிபி கிரீம் ஒன்று இருந்தால் போதும்.


foundation box


இதை இங்கே வாங்குங்கள்


மொய்ச்சுரைசர் -


இது மிக அவசியம். இதையும் உங்கள் மாத்திரை பேட்டி அல்லது ஏதேனும் ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக்கொள்ளுங்கள்.இதை நீங்கள் எளிதில் பேக் செய்யலாம்.சில மொய்ஸ்சுரைசர் சன்ஸ்க்ரீன் உடன் வரும். அப்படி ஒன்றை எடுப்பது இன்னும் சிறந்தது.


லிப்ஸ்டிக்ஸ் -


நாம் கொண்டு செல்லும் அணைத்து நிறங்களுக்கு ஏற்ற உதடு சாயத்தை எடுத்து செல்லமுடியாது. அது உங்கள் பையில்  இடத்தை அடைக்கும். அதனால், ஒரு நுட் லிப்ஸ்டிக் பொதுவாக நீங்கள் எந்த உடைக்கும் அணிய , மேலும் ஒரு சிவப்பு லிப்ஸ்டிக் இருந்தால் போதும்.


கண்களுக்கு -


காஜல்/கண் மை , ஐ ஷாடோ என்று அனைத்தையும் எடுத்து செல்ல முடியாது! அதனால் ஒரு கருப்பு நிற காஜல்,உங்கள் ஆடைகளிற்கு பொருந்தும் ஒரு பொதுவான நிறத்தில் ஐ ஷாடோ மற்றும் லைனரை எடுத்துக்கொள்ளுங்கள். சில பொருட்களில் பல பயன்கள் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு மேட் லிப்ஸ்டிக் இருந்தால் அதை லிப்ஸ்டிக், ப்ளஷ் , ஐ ஷாடோ , லைனர் என்று பல பயன்கள் இருக்கிறது. இதை போல இருக்கும் பொருட்களை எடுத்து செல்லுங்கள். 


Untitled design %2827%29


இதை இங்கே வாங்குங்கள்


மற்றவை -


இரவில் படுக்கும் முன் தேவை படும் மிசெளர் நீர் ( micellar water - உங்கள் ஒப்பனையை துடைத்து எடுக்க) இதை ஒரு சிறிய பாட்டிலில் எடுத்து கொள்ளுங்கள் . இதற்கு மாற்றாக, வெட் மேக்கப் வாய்ப்பசையும் (wet wipes) நீங்கள் பயன்படுத்தலாம்.


உங்கள் சருமம் எண்ணெய்  பசை கொண்டது என்றால், ப்ளோட்டிங் பபெர்ஸ் அவசியம் ( புகைப்படங்களில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டாமா?!)


மேக்கப் பை -


இதுவும் (இதுதான்) முக்கியமான ஒன்று! உங்கள் பை உங்கள் ஒப்பனை பொருட்களை சிறந்த முறையில் வைக்க / உங்களுக்கு உதவும் முறையில் இருக்க வேண்டும்.


 travel pouch


இதை இங்கே வாங்குங்கள்


அப்போ... நீங்க இந்த பயணத்திற்கு ஏற்ற ஒப்பனை பொருட்களுடன் , ரயிலில் தமிழ்நாட்டை சுற்றி வர தயார் தான?


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  ,இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.