logo
ADVERTISEMENT
home / அழகு
லைட் லிப்ஸ்டிக்ஸ் : அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூச பிடிக்காதவர்களுக்கு பிரபலங்கள் பரிந்துரைக்கும் இலகுவான நிறங்கள்

லைட் லிப்ஸ்டிக்ஸ் : அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூச பிடிக்காதவர்களுக்கு பிரபலங்கள் பரிந்துரைக்கும் இலகுவான நிறங்கள்

லிப்ஸ்டிக்ஸ் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு ஒப்பனை பொருள். சிலர் அதை பளிச்சிடும் நிறங்களில் பூசிக்கொண்டு செல்வார்கள் சிலர் அதை புசாதது போன்ற தோற்றத்தை விரும்புவார்கள். நீங்கள் ஒரு வேலை இரண்டாவது வகை என்றால் இது உங்களுக்கான தொகுப்பு !

இன்றைய கால கட்டத்தில் ட்ரெண்டில் லிப்ஸ்டிக்ஸ் பல் வேறு நிறங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் நம் பிரபலங்கள் அணிந்திருப்பதுபோல் நீங்களும் சில இலகுவான நிறங்களை தேர்ந்தெடுத்து அதை அழகாய் அணிந்து கொண்டு வெளியில் செல்ல சில யோசனைகள். இதோ !

பேபி பிங்க் –

3

படம்

ADVERTISEMENT

பிங்க் பெரும்பாலான பெண்களிற்கான ஒரு நேர்த்தியான நிறம். அதில் பல ஷேட்ஸ் இருந்தாலும் மிக இலகுவான (light) பேபி பிங்க் நிறம் உங்கள் ‘ -அணியாத -தோற்றத்தை பெற உதவும். இதில் நீங்கள் ஜோதிகா அணிந்திருப்பது போல க்ளோஸி தோற்றத்தையும் அடையலாம்.

இங்கே வாங்குங்கள்

நுட் நிறம் –

7

படம்

ADVERTISEMENT

சமந்தாவின் இந்த நுட் நிறம் உங்கள் தினசரி வேலைகள், அலுவலகம், என்று அனைத்திற்கும் பொருந்தும் ஒரு நிறம். இதை நீங்கள் எந்த நிற ஆடையிலும் அணியலாம் என்பதினால் பயணத்தில் தவறாமல் எடுத்து செல்ல வேண்டிய அந்த ஒரு நிறம் இதுவே !!

இங்கே வாங்குங்கள்

கோரல் டச் –

8

படம்

ADVERTISEMENT

தமன்னாவை போல உங்கள் நிறம் வெளிறைய நிறம் என்றால் இதுபோல ஒரு கோரல் நிறம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை ஒரு ஸ்வாட்ச் செய்து அதற்கு மேல் தேவை பட்டால் ஒரு கிளாஸ் அல்லது வாசலின் தடவலாம்.

இங்கே வாங்குங்கள்

பழுப்பு நிறம் –

4

படம்

ADVERTISEMENT

உங்கள் சருமம் மீடியமில் இருந்து அடர் நிறமாக இருந்தால் இந்த பழுப்பு நிறம் உங்கள் சருமத்தின் நிறத்துடன் ஒற்றுப்போய்விடும். அதனால் நீங்கள் லிப்ஸ்டிக் (lipstick) அணியாதது போல் ஒரு நச்சுரல் தோற்றதை காண்பிக்க உதவும். அதிதி ராவ் வை போல் நீங்களும் இதை அசத்தலாக அணிந்து தன்னம்பிக்கை உடன் உங்கள் வேலைகளை பார்க்கலாம் !

இங்கே வாங்குங்கள்

நுட் நிறத்தில் இனொன்று –

5

படம்

ADVERTISEMENT

நுட் நிறத்தில் சில இலகுவான நிறமும் உள்ளது, அடர் நிறத்திலும் உள்ளது. ஆகையால், முதலில் உங்கள் நிறத்தை நீங்கள் நன்கு அறிய வேண்டும். அதற்கு பிறகு இதை போல ஏதேனும் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். த்ரிஷாவின் க்ளிட்டர் அடைகளிற்கும் இது போன்ற பழுப்பு மற்றும் நுட் கலவையில் உள்ள நிறங்கள் பயனளிக்கும்.

இங்கே வாங்குங்கள்

மேலும் படிக்க – சரியான வழியில் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக் )பயன் படுத்துவது எப்படி? சில சுவாரசியமான குறிப்புகள்!

பர்ர்ப்பில் பிங்க் –

6

ADVERTISEMENT

படம்

மீசைய முறுக்கு பட கதாநாயகி ஆத்மிக்காவின் அணைத்து புகைப்படங்களிலும் அவர் லைட்டான லிப்ஸ்டிக்கை தான் அணிந்திருப்பார். இதற்கு சாட்சி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம். இதுபோல ஒரு ஊதா மற்றும் பிங்க் நிறத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு கலவையை நீங்களும் முயற்சிக்கலாம்.

இங்கே வாங்குங்கள்

பெர்கெண்டி நிறம் (burgandy Color)

9

ADVERTISEMENT

படம்

மெகா ஆகாஷ் அணிந்திருப்பது போல ஒரு பெர்கண்டி மெரூன் நிறம் உங்கள் உதடுகளை நச்சுரல் ஆக காட்ட உதவும்.இதில் இருக்கும் ஒரு மேட் தோற்றம் இதை இன்னும் இயல்பாக காட்ட உதவும். ஒரே ஒரு மிதமான ஸ்வாட்ச் செய்து நொடியில் கிளம்ப இந்த நிறம் அவசியம்.

இங்கே வாங்குங்கள்

எங்கள் டிப் – ஒரு லிப் பாம் மை முதலில் பூசிக்கொண்டு அதற்கு மேல் இந்த லிப்ஸ்டிக்க்கை பூசினால் உங்கள் உதடு ஈரப்பதத்துடன் இருக்கும்.மேலும் நிறம் மாறாமல் காப்பாற்றலாம் !

ADVERTISEMENT

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

24 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT