தீபாவளி என்று சொல்லிவிட்டாலே, அனைவருக்கும் குதூகலம் தாம். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அந்த ஒரு நாளுக்காக ஒரு வருடம் காத்திருப்பார்கள். இந்த திருநாளில் அனைவரும் இனிப்பை பகிர்ந்து, புத்தாடைகள் அணிந்து, மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். மேலும் இந்த நாளை சிறப்பாக்குவது, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பரிசுகள் தான். நீங்கள் நேசிப்பவருக்கு ஒரு ஆச்சரியத்தக்க பரிசை தந்து, இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாகக எண்ணுகின்றீர்களா?
அப்படியென்றால், உங்களுக்காக இங்கே சில பரிசு பொருள் வாங்கும் யோசனைகள்;
1. தீபாவளி புது வரவு ஆடைகள்
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடைகள். எத்தனை ஆடைகள் வாங்கினாலும் மகிழ்ச்சிதான். அந்த வகையில், உங்கள் ஆண்பானவர்களுக்கு, நீங்கள் தீபாவளி புது வரவாக, கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புது வகை ஆடைகளை உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கு பரிசாக தரலாம்.
இனிய தீபாவளி மேற்கோள்களையும் படியுங்கள்
2. இனிப்பு வகைகள்
பல கடைகளில், தீபாவளி (diwali) சிறப்பு அறிமுகங்கள் என்ற விதத்தில் பல இனிப்பு வகைகள் இருக்கும். நீங்கள் வழக்கமாக வாங்கும் இனிப்பு வகைகளை விட, இப்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இனிப்பு சற்று சுவாரசியமாக இருக்கும். மேலும் அது புதிதாக இருப்பதால், ஆச்சரியத்தையும் தரும்.
3. வீட்டு உபயோக பொருட்கள்
இன்று பல கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உங்கள் வீட்டில் தினமும் உபயோகப்படுத்தப்படும் பொருட்களிலும் சில புதிய வரவுகள் உள்ளன. அதனை நீங்கள் கண்டறிந்து உங்கள் மனைவி, சகோதரை, அம்மா என்று உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளிக்கலாம்(gift). இது அவர்களை நிச்சயம் மகிழ்ச்சி அடைய செய்யும்.
4. வண்ண விளக்குகள்
தீபாவளி என்றாலே, பிரகாசமான ஒளியை பிரதிபலிக்கும் தினமாக இருக்கும். வீட்டை அலங்கரிக்க பல புதிய வண்ண வண்ண விளக்குகள் கடைகளில் கிடைகின்றன. அதிலும், சிறப்பாக திபாவளிக்கேன்றே பல புதிய படைப்புகள் இருக்கும். அப்படி நீங்கள் ஏதாவது ஒரு புது வரவை பார்த்தால், அதனை உங்கள் பிரியதிற்குரியவர்களுக்கு கொடுக்கலாம்.
5. நகை ஆபரணங்கள்
இது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்றவாறு பல புதிய நகை ஆபரணங்கள் கடைகளில் தீபாவளி புது வரவாக இருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு கை காப்பு, மோதிரம், சங்கிலி என்றும், பெண்களுக்கு வளையல், மோதிரம், காதணி என்றும் பல வகை இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவார ஒரு புது வடிவமைப்பில் தேர்வு செய்து உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளிக்கலாம்(gift idea).
6. கை கடிகாரம்
இணையதள கடைகளில் பல வகை கை கடிகாரங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கிடைகின்றன. மேலும் குழந்தைகளுக்கும் தனியாக புது வடிவிலும், வகையிலும் கிடைகின்றன. இவை மிக மலிவான விலையில், தரமான நிறுவனத்தில் இருந்து கிடைக்கும். இவை நிச்சயம் ஒரு நல்ல தீபாவளி பரிசாக இருக்கும்.
7. வீட்டு அலங்கார பொருட்கள்
வீடுகளை அலங்கரிக்க வேண்டும் என்றாலே அது ஒரு தனி சுவாரசியமான விடயம். குறிப்பாக தீபாவளி கொண்டாட்டத்திற்காக வீடுகளை அலங்கரிக்க வேண்டும் என்றால், குறைவில்லா மகிழ்ச்சி உண்டாகி விடும். இந்த வகையில், நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு, உறவினர்களுக்கும் வீட்டு அழகார பொருட்களை பரிசளிக்கலாம். இணையதள கடைகளில் பல வகை அலங்கார பொருட்கள் கிடைக்கும். அவை சுவாரசியமாக இருப்பதோடு, நியாமான விலையிலும் இருக்கும்.
8. டைனிங் செட்
ஒரு குடும்பம் என்று வந்து விட்டாலே, நிச்சயம் அனைவரும் ஒன்று கூடி உணவு உண்ண சில பாத்திரங்களும், பிற பொருட்களும் தேவைப்படும். அந்த வகையில், பிரத்தியேகமாக, டைனிங் செட் என்று, ஒரு குடும்பம் சேர்ந்து உணவு அருந்த தேவைப்படும் அனைத்து பாத்திரங்களும் மொத்தமாக கடைகளில் கிடைகின்றன. இவை பார்க்க அழகாகவும், எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளன. இந்த வகை பரிசுகளை நிச்சயம் உங்கள் அம்மா, மனைவி மற்றும் சகோதரி விரும்புவார்கள்.
9. செடி வகைகள்
உங்கள் மகன், மகள் அல்லது சகோதரி என்று உங்கள் குடும்பத்தினர்கள் யாராவது அதிகம் செடிகளை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றார்கள் என்றால், நீங்கள் புது வகை போன்சாய் அல்லது வேறு வகை செடிகளை பரிசளிக்கலாம். இது அவர்கள் செடிகளை வளர்க்க ஊக்கவிப்பத்தோடு, ஒரு நல்ல தீபாவளி பரிசாகவும் இருக்கும்.
10. ஏலேக்ட்ரோனிக் பொருட்கள்
உங்கள் குழந்தைகள் அல்லது சகோதரி, சகோதரர்கள் கணிணி, மடி கணிணி, ஸ்மார்ட் போன் மற்றும் இது போன்ற ஏலேக்ட்ரோனிக் பொருட்களை பயன்படுத்துகின்றார்கள் என்றால், அது சார்ந்த, தங்களது பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் உபயோகப்படும் உபரி பொருட்களை பரிசளிக்கலாம். இது அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க – எளிமையான மற்றும் சுவையான தீபாவளி பலகாரங்கள்!பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!