விவோ v 7+ ன் வடிவம் இணையவாசிகள் அனைவருக்கும் பிடித்துப் போனது ஏன் என்று தெரியுமா
நடிகர்களுக்கான தனி ஆடை வடிவமைப்பாளர்களை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் ஸ்மார்ட் போன்களுக்கென தனி வடிவமைப்பாளர் இருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா! இந்த புதுமையை விவோ செய்திருக்கிறது. பேஷன் டிசைனர் மனிஷ் மல்கோத்ராவை இதற்கென பிரத்யேகமாக நியமித்து இந்த அற்புதத்தை செய்திருக்கின்றனர்.
இதன் நிறம் காதலின் நிறமான சிவப்பு நிறத்தால் ஆனது. அதில் இன்பினிட்டி உருவத்தை வரைந்திருக்கின்றனர். மேலும் தங்க நிறத்தில் எம்பாஸ் செய்யப்பட்ட இதய வடிவம் ஒன்றும் இருக்கிறது. இதன் 24 எம்பி செல்ஃபீ கமெரா மற்றும் 18:9 டிஸ்ப் ளே இதனை மேலும் பிடித்தமானதாக ஆக்குவதில் வியப்பில்லை.
காதலர்கள் பரிசளித்துக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ள இந்த போன் குறிப்பிடத்தக்க காலம் வரைதான் விற்பனை செய்யப்படும் என்பதால் இதனை வாங்க அனைவரும் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகின்றனர்!
காதலுக்கென்றே வடிவமைத்த இந்த சிறப்பு விவோ v 7+ ரக செல்போன்கள் பற்றி நம் வலைத்தளவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்,
அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
1.மேகக் கய்
பேஷன் மற்றும் அழகு வலைதளத்தில் எழுதி வரும் மேகக் இந்த அழகிய போனை இவர் திறந்து பார்க்கும் வீடியோவை இதில் இணைத்திருக்கிறார்.முதன் முதலில் வரும் எதுவும் பொக்கிஷம்தான் இல்லையா! காதலோ பரிசோ மனத்துக்குப் பிடித்த செல்போனோ.. முதல் விற்பனையில் வாங்கிய நிமிடங்கள் அழகானதுதான்
2. ஆஷ்னா பஹ்வானி
தனது காதலர் தனக்கு இந்த அழகிய போனைப் பரிசளித்தை பற்றியும் அந்த உற்சாக நிமிடங்களையும் இவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
3. தற்பெருமை பத்திக் கவலைப்படாத அன்ஷிடா ஜூனிஞ்சா
வாழ்க்கைமுறை பற்றி பிளாக் எழுதி வரும் இவர் இந்த சிறப்பம்சம் கொண்ட போன் வந்ததை காதலர் தினமாக கொண்டாடுகிறார். மல்கோத்ராவிடம் இருந்து வந்த அன்பு பரிசாகவே இந்த போனைப் பார்க்கிறாராம். விவோ v 7+ இவரது நாளை இனியதாக மாற்றியதாகவும் கூறுகிறார்.
4. நடாஷா ஷ்ரோர்த்தி
இவரும் வாழ்க்கை முறை பற்றி எழுதி வரும் இன்னொரு பிளாக் எழுத்தாளர்தான். விவோ v 7+ன் ஸ்டைல் மற்றும் நிறம் இவரைக் கவர்ந்ததாக இந்த வீடியோவில் கூறுகிறார்.
5. ஜாஸ் சகு
பெண்மையின் பெருமைக்குரிய உதாரணம் என்று கூறப்படும் இவர் பேஷன் மற்றும் வாழ்க்கை முறை பற்றி பிளாக் எழுதி வருகிறார். செல்போன் என்பது நம்மை அடையாளப் படுத்தக் கூடிய ஒரு முக்கிய அம்சமாக மாறியிருக்கிறது எனும் இவர் விவோ v 7+ பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்