எளிமையான மற்றும் சுவையான தீபாவளி பலகாரங்கள்!

எளிமையான மற்றும் சுவையான தீபாவளி பலகாரங்கள்!

தீபாவளி நெருங்கிகின்றது. இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில், உங்கள் மனதில் எந்த வகையான பலகாரங்கள் செய்யலாம் என்கின்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல வகை பலகாரங்கள் இருந்தாலும், எளிமையாகவும், விரைவாகவும் தயார் செய்ய சில பலகாரங்களை (diwali recipe/dish) நீங்கள் விரும்புவது இயல்பே.

அப்படி நீங்கள் சுவையான மற்றும் விரைவாக செய்யக்கூடிய பலகாரத்தை (ரெசிபி) தேடிக்கொண்டிருகின்றீர்கள் என்றால், உங்களுக்காக, இங்கே சில

1. மடக்கு பூரி

Pinterest

 • தேவையான கோதுமை மாவு, நெய் மற்றும் உப்பு எடுத்துக் கொளவும்
 • இதனுடன் சிறிது சுடு தண்ணீர் சேர்த்து பூரி மாவு போன்று பிசைந்து கொள்ளவும்
 • சிறிது துருவிய தேங்காய், சர்க்கரை, மற்றும் உடைத்த முந்திரிப் பருப்பு எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இது பூரணத்திற்கு
 • இப்போது பூரிக்கு செய்வது போன்று கோதுமை மாவை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
 • இதன் நடுவில் பூரணத்தை வைத்து சோமாசு போன்று மடக்கிக் கொள்ளவும்
 • ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காயவிடவும்
 • எண்ணை காந்த பின், அதில் மடக்கு பூரியை போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது சுடச் சுட மடக்கு பூரி தயார்

இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் படியுங்கள்

2. நெய்யப்பம்

Pinterest

 • தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்
 • ஒரு பாத்திரத்தில் வெல்ல பாகு காய்த்து எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு பழுத்த வாழைப்பழத்தை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 • தேவைப்படும் அளவு அரிசி மாவு மற்றும் கோதுமை மாவை லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு பாத்திரத்தில், வறுத்த மாவுகள் இரண்டையும் போட்டு, இதனுடன் வறுத்த தேங்காய்ம், வெல்ல பாகு மற்றும் அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பததிற்கு கெட்டியாக கலக்கிக் கொள்ளவும்
 • இந்த மாவை அப்படியே சிறிது நேரம் விட்டுவிடவும்
 • இதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்
 • இப்போது ஒரு பணியாற சட்டியில் நாகு சூடானது, நெய் சேர்த்து, குழியில் மாவை பணியாரம் ஊற்றுவது போல ஊற்றவும்
 • இரண்டு பக்கமும் நன்கு திருப்பி போட்டு வேக விடவும். இப்போது சுடச்சுட நெய்யப்பம் தயார்

3. ஜவ்வரிசி லட்டு

Pinterest

 • தேவையான ஜவ்வரிசியை எடுத்து இரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்
 • ஒரு வாணலியில் நெய் ஊற்றி, நன்கு காய்ந்த பின் அதில் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்
 • பின்னர் இதனை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, நன்கு ஊறிய ஜவ்வரிசியை நெய்யில் போட்டு கட்டிபடாமல் நன்கு கிளறவும்
 • இப்போது இதனுடன், ஏலக்காய் பொடி, சிறிது மஞ்சள் தூள், குங்குமப்பூ மற்றும் தேவையான சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்
 • இந்தக் ஜவ்வரிசி கலவையை நன்கு வறுக்கவும். தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்துக் கொள்ளலாம்
 • இப்போது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்
 • இப்போது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே, இந்த கலவையை உங்களுக்குத் தேவையான அளவு உருண்டை பிடிக்கவும். இப்போது லட்டு தயார்

4. சீப்பு சீடை

Pinterest

 • உளுந்து மற்றும் பாசி பருப்பை வறுத்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
 • ஒரு பாத்திரத்தில் உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி மற்றும் அரிசி மாவு சேர்த்து, இதனுடன் தேவைக்கேற்ப உப்பும் சேர்த்துக் கொள்ளவும்
 • இதில் தேங்காய் பால் மற்றும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
 • தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
 • இந்த மாவை சீப்பு சீடை வடிவில் இருக்கும் தட்டு வைத்து முறுக்கு குழாய் பயன் படுத்தி பிழிந்து கொள்ளவும்
 • பின், இந்த பிழிந்த மாவை மோதிர வடிவத்தில் சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்
 • வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் இந்த மோதிர வடிவில் இருக்கும் சீதையை போட்டு நன்கு பொரிக்கவும்
 • பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும். இப்போது ருசியான சீப்பு சீடை தயார்

5. கார தட்டை

Pinterest

 • தேவையான கடலை பருப்பை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
 • ஒரு வாணலியில் சிறிது அரிசி மாவு எடுத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்
 • வாணலியில் உளுந்து பொடியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு கப் அரிசி மாவிற்கு, இரண்டு தேக்கரண்டி உளுந்து மாவு சேர்த்து கலக்கவும்
 • இதனுடன் உடைத்தகடலை மாவு, தேவையான உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 • தேவைபட்டால் சிறிது பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கருவேப்பிள்ளை  சேர்த்துக் கொள்ளலாம் 
 • மாவில் சிறிது சூடான எண்ணை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்
 • இந்த தயாரித்த மாவை உருண்டை பிடித்து, தட்டை போல தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
 • வாணலியில் எண்ணை ஊற்றி, நன்கு காய்ந்ததும், இந்த தட்டையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தட்டை தயார்.

 

மேலும் படிக்க - தீபாவளி பர்ச்சேஸ் ஆரம்பிச்சாச்சா! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெண்டிங்னு தெரிஞ்சுக்கலாமா !

பட ஆதாரம்  - Pinterest, Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!