ஷாப்பிங் உங்களுக்கு பிடித்த ஒரு விஷயமாக இருந்தால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். சென்னை தென் இந்தியாவில் இருக்கும் பல்வேறு விஷயத்திற்கான ஒரு மிகப்பெரிய மையமாகும். இங்கு சில்லென்ற குளிர் காற்று வாங்க பீச் ஒரு பக்கம் இருந்தால் மற்றொரு பக்கம் இங்கு மிகச் சிறந்த ஷாப்பிங் மால்கள் உள்ளது .ஷாப்பிங் என்றால் யாருக்குதான் பிடிக்காது?!
இங்கு பல்வேறு வகையான பேரங்காடிகள் இருந்தாலும் உங்கள் ஷாப்பிங்கிற்கு (shopping) உதவும் வகையில் அதிகபட்ச பிராண்டுகள் உள்ள மால்கள், விலை மலிவிலும் மற்றும் ஆடம்பரத்திலும் உள்ள பொருட்கள் கொண்ட மால்கள்,மேலும் உங்கள் பொழுதுபோக்கிற்கு தேவையான விஷயங்கள் அதாவது திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் கொண்ட சிறந்த மால்களின் பட்டியலை நாம் இங்கு பார்க்கலாம்!
1. ஃபோரம் விஜயா மால் (Forum Vijaya Mall)
வடபழனியில் இருக்கும் இந்த ஃபோறம் விஜயா மால்லில் , நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாடி கட்டிடத்தில் உங்களுக்கு பல்வேறு வகையான பிராண்டட் பொருட்கள் கிடைக்கும்.ஆடைகளுக்கு , எலெக்ட்ரோனிக்ஸ்,ஒப்பனை பொருட்கள், அணிகலன்கள், என்று அணைத்து பொருட்களையும் இங்கு நீங்கள் வாங்கலாம். வெஸ்ட்ஸைட் , பிபா ,லீவிஸ் ,குளோபல் தேசி ,எஸ்டெல், கலர் பார், தாமினி,லெனோவா என்று பல்வேறு பிராண்டுகள் இங்கு உள்ளது.
இது பிடிக்காவிட்டால், இங்கு இருக்கும் டாட்டூ மையத்தில் நீங்கள் டாட்டூ இட்டுக்கலாம், ஐ மாக்ஸ் இல் (IMAX) அல்லது ட்ரிக்ஸ் 7D (TRIX) வேர்ல்ட் சினிமாவில் படம் பார்க்கலாம். பசித்தால், இதில் உள்ள 42 உணவன்கள் உங்களுக்கு ருசியான உணவை வழங்க இருக்கிறது. ஃபோறம் மால் உங்கள் அலுப்பை கழிக்க நிச்சயம் ஒரு அற்புதமான இடம்.
முகவரி : என்.எஸ்.கே. சேலை, ஆற்காடு சாலை, வடபனானி, சென்னை, டி.என்.என் 600026
தொலைபேசி : 044 4904 9000
நேரம் : 10:00 AM- 10:00 PM
https://www.forummalls.in/forum-vijaya/
2. எக்ஸ்பிரஸ் அவென்யூ ( Express Avenue )
தென்னிந்தியாவின் மிக பெரிய கெம்மிங் மையம் என்று கருதப்படும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் , சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ளது. எக்ஸ்பிரஸ் உள்கட்டமைப்புக்கு சொந்தமான இந்த மால் , சென்னையின் சிறந்த மால்களில் ஒன்றாகும். இங்கு உங்களுக்கு கிடைக்காத பொருளே இல்லையென்ற வகையில் அணைத்து வகையான பொருட்களும் உள்ளது. உடைகள், அணிகலன்கள், கை பைகள் , எலெக்ட்ரோனிக்ஸ் , கிப்ட் பொருட்கள், கேமிங் , விளையாட்டு பொருட்கள், காலணிகள், உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஸ்பா , சலூன் , உணவகம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்!
முகவரி : எண்: 2, கிளப் ஹவுஸ் ரோடு, மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, சென்னை
தொலைபேசி : 044 2846 4646
நேரம் : வார நாட்களில் 10:30 AM – 09:30 PM
அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் 10:00 AM-10: 00 PM
https://www.expressavenue.in/
3. அம்ப்பா ஸ்கைவாக் பேரங்காடி(Ampa sky walk )
நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருக்கும் அம்ப்பா ஸ்கைவாக் சென்னையில் மற்றொரு பிரபலமான பேரங்காடி. இங்கு ஃபுட் கோர்ட் ,அனைத்து வகையான பிராண்டட் கடைகள், பிராண்டட் ஆடைகள், ஏழு திரைகள் கொண்ட திரையரங்கங்கள் என்று உங்கள் பொழுதுபோக்கிற்கு அனைத்தும் உள்ளது. இந்த மூன்று மாடி கட்டிடத்தில் இருக்கும் கடைகள் மற்றும் பொருட்கள் உங்கள் மனதை நிச்சயம் வென்றுவிடும். PVR சினிமாவில் படம் பார்க்க மறக்காதீர்கள்! இது போதாவிட்டால் உங்கள் பசிக்கு இங்குள்ள ஃபுட்கோர்ட்டில் சைனீஸ், அரேபியன் ,இந்தியன், கான்டினென்டல் என்று பல்வேறு வகையான உணவுகளும் உள்ளது. இந்த கோடை காலத்தில் நீங்கள் ரசிக்க, ருசிக்க மற்றும் உங்கள் நேரத்தை நண்பர்களுடனும் உறவுகள் உடனும் கழிக்க இதுவே சிறந்த இடம்!
முகவரி : அம்ப்பா ஸ்கைவால்க் மால், No.1, நெல்சன் மானிக்கம் ரோடு, சென்னை.
தோலை பேசி :044 3024 9494
நேரம் : 10:00 AM- 10:00 PM
http://www.ampaskywalk.com/
4. பெர்காமோ லக்சுரி மால் (Bergamo Luxury Mall)
இத்தாலியன் நகரம் பெர்காமோவின் பெயரை வைத்திருக்கும் இந்த மால் , நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு ஆடம்பரமான பேரங்காடி. அணைத்து ஆடம்பரமான பொருள்களைப் பார்க்கும் நபர்களுக்கும், ஒரு ஆடம்பரமான ஷாப்பிங் அனுபவத்திற்கு இது ஒரு சிறந்த மால் ஆகும். மேலும், இங்குள்ள பொருட்களின் விலை அதிகம் என்றதால், நீங்கள் உங்கள் பாக்கெட்டை காலி செய்ய விரும்பினால் இங்கு தாராளமாக செல்லலாம்! லூயி விட்டோன், ஹர்மான், கார்டன் போன்ற ஐரோப்பிய வர்த்தகங்கள் உட்பட இங்கே மேல் உச்சநிலை பிராண்டுகளை நீங்கள் காணலாம். மேலும், இங்குள்ள ஸ்டார்பக்ஸ் காபி, பார்பேகி நேஷன் உங்கள் பசியை போக்கும் !
முகவரி : 5/3, கதர் நவாஸ் கான் சாலை, ஆயிரம் விளக்குகள் மேற்கு, நுங்கம்பக்கம், சென்னை
தொலைபேசி :044 4202 9875
நேரம் : 10:00 AM- 08:30 PM
http://www.bergamo.in/
மேலும் படிக்க : உங்கள் ஷாப்பிங் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் 6 சிறந்த டிசைனர் பொட்டிக்குகள்
5. இஸ்பஹானி சென்டர் (Ispahani Center)
நீங்கள் தேர்வு செய்ய, ஆடம்பர பிராண்ட்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் தேடுகிறீர்களானால், இந்த மால் உங்களுக்கு சிறந்தது. இங்கு ஹை டிசைன் , ஸ்வரோஸ்கி, ரோடு குமார் ,ஜெலஸ் 21, இம்ப்ரின்ட், ஆர்ட் காரட் , அர்ச்சிஸ், மற்றி பிரவுன்,காபி டே என்று உங்கள் தேவைக்கு ஏற்ப ஆடைகள், கிபிட், காலணிகள், உணவகம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் உள்ளது. மேலும் இங்கு நீங்கள் அக்னேமேஸிஸ் எனும் நாட்டின் சிறந்த கேமிங் மையத்தில் விளையாடலாம், உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க சில சிறந்த சலூன்களும் உள்ளது. அதிக கூட்டம் இல்லாத , சிறந்த பொருட்களை எளிதில் வாங்க நினைத்தால் இந்த இஸ்பஹானி பேரங்காடியே சிறந்தது.
முகவரி: 123, நுங்கம்பாக்கம் உயர் ரோடு, திருமுர்த்தி நகர், நுங்கம்பாக்கம், சென்னை
தொலைபேசி : 044 28333697, 044 43434848
நேரம்: 10:00 AM-11:00 PM Espahani center
6.ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி (Pheonix Marketcity)
சென்னையில் மிகப் பெரிய ஷாப்பிங் மால் எது என்று நீங்கள் கேட்டால் அது ஃபீனிக்ஸ் மால் தான். ஆகையால் சென்னையில் அடி எடுத்து வைத்தால், இங்கு செல்ல மறக்காதீர்கள். ஃபீனிக்ஸ் மால் மும்பை, புனே , பெங்களூரு என்று மற்ற இடங்களிலும் இதன் கிளைகள் உள்ளது . இதில் 250க்கும் மேற்பட்ட இன்டர்நேஷனல் மற்றும் நேஷனல் பிராண்டுகளின் பொருட்களை இங்கு காணலாம். மேலும் படம் பார்க்க , 11 திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் அரங்கம், மற்றும் முதல் IMAX திரையரங்கம் இங்குதான் அமைக்கப்பட்டிருக்கிறது .இங்கு பிக் பஜார், ஆலன் சொலி ,கோஸ்டா காபி , ஃ பாப் இந்தியா , டபுள்யூ ஷாப் என்று பல கடைகள் உள்ளது. இங்கு நடமாடி பசி எடுத்தால், மேல் இருக்கும் புட் கோர்ட்டில் டொமினோஸ், ராஜதானி , டாங்கின் டௌனட்ஸ் என்று பல உணவகங்கள் உள்ளது .
முகவரி : 142, வேலாச்செரி ரோடு, இந்திரா காந்தி நகர், வேலச்சேரி, சென்னை.
தொலைபேசி : 044 6651 3007
நேரம் : வார நாட்களில் 11:00 AM- 10:00 PM
வார இறுதி நாட்கள் 10:00 AM-10:00 PM
https://www.phoenixmarketcity.com/chennai
7. சென்னை சிட்டி சென்டர் (Chennai City Center)
நகரின் மையப்பகுதிகளில் மிக அதிக விலையுள்ள ஷாப்பிங் மால்கள்லில் சிட்டி சென்டர் ஷாப்பிங் மாலும் ஒன்றாகும். இது 2006 ஆம் ஆண்டில் மைலாப்பூரில் நிறுவப்பட்டது. ஷாப்பிங் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்களின் ஐந்து மாடிகள் கொண்ட இந்த மாலில் அனைத்து பிராண்டட் மற்றும் ஆடம்பர பொருட்கள் உள்ளன. குஸ்ஸி, ஜியோர்டோனோ, டைடன், மூச்சி போன்ற பிராண்டுகள் இங்கு கிடைக்கும். நீங்கள் சுற்றி சோர்வடைந்துவிட்டால், அதை சரி செய்து உங்களுக்கு தெம்பு அளிக்க இங்கு சில சிறந்த உணவகங்கள் – அராபிய ஹட் , மேக் டி , கே.எஃப்.சி உள்ளது . ஐனோக்ஸ்சில் (INOX) படம் பார்த்து விட்டு, மேல் மாடிக்கு சென்றால் அங்கிருந்து தெரியும் மெரினா பீச்சையும் ரசித்து விட்டு வீடு திரும்பலாம்! உங்கள் நண்பர்களுடன் இங்கு செல்ல தயாராகிவிட்டிர்களா?
முகவரி : டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலாய், லோகநாதன் காலனி, மைலாப்பூர், சென்னை
தொலைபேசி :044 2847 7666
நேரம்: 10:00 AM- 10:00 PM
http://www.chennaiciticentre.com/
8. ஸ்பெக்ட்ரம் மால் (Spectrum Mall)
சென்னை மாநகரத்தில் நீங்கள் எங்கு வசித்தாலும், அதற்க்கு பக்கத்தில் ஒரு பேரங்காடி இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில், பெரம்பூரில் இருக்கிறது இந்த ஸ்பெக்ட்ரம் மால். இது வட சென்னையின் முதல் பேரங்காடி ஆகும். இதில் இருக்கும் இரண்டு மாடியில் , பல் வேறு விற்பனை நிலையங்களை அமைத்திருக்கிறாரகள். அடுத்து, படம் பார்க்க ஆசைப்பட்டால் இங்குள்ள 5 திரை உள்ள திரை அரங்கத்திற்கு செல்லுங்கள். நீங்கள் பட்ஜெட் ஷாப்பிங் செய்பவர்கள் என்றால், அதற்கு ஸ்பெக்ட்ரம் மாலே சிறந்தது. இங்குள்ள ஆர்சீஸ் ,பிக் பஜார்,ஜீனி ஜொனி , ஸ்பா ,ஒப்பனை கடைகள், உணவகங்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கும். பொறாதென்றால், இங்குள்ள பிரபல ஜான் பிரிட்டோ டான்ஸ் கம்பெனியில் டான்ஸ் கிளாஸ்ஸிற்கு சென்று வாருங்கள். பசிக்கு தோசைக்கல், தம் பிரியாணி, ரொட்டி வ்ராப் என்று பல வகை உணவகங்கள் உள்ளது! இது பொறாத என்ன உங்கள் கோடைகால பொழுதுபோக்கிற்கு ?!
மேலும் படிக்க : சீப் அண்ட் பெஸ்ட் பாண்டி பஜார் ஷாப்பிங் – எதையெல்லாம் வாங்கலாம் ?!
முகவரி :114 ஏ – 114 பி, காகித மில்ஸ் சாலை, கோபால் காலனி, பெரம்பூர், சென்னை
தொலைபேசி : 044 2670 3565
நேரம்: வாரம் நாட்கள் -10: 00 AM – 10: 00 PM
வார இறுதி நாட்கள்- 10:00 AM-11: 00 PM
http://spectrummall.in/
ஹாப்பி ஷாப்பிங்!
பட ஆதாரம் – wikipedia commons
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.