logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
ஷாப்பிங் செய்யும் போது எப்படி பணத்தை சேமிப்பது?

ஷாப்பிங் செய்யும் போது எப்படி பணத்தை சேமிப்பது?

அனைவருக்கும் பிடித்த ஒரு விடயம் ஷாப்பிங். பண்டிகை காலம், விழாக்காலம் மற்றும் வீட்டில் நடைபெறும் சுப காரியங்களுக்கு மட்டும் அல்லாமல் இப்போது மக்கள் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஷாப்பிங் செய்யத் தொடங்கி விட்டார்கள். இதற்க்கு அதிகரித்திருக்கும் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் வருமானம் மட்டும் காரணம் அல்ல, விலை குறைவான பொருட்கள் எளிதாக கிடைப்பதும் மற்றும் பொழுது போக்கிற்காகவும் மக்கள் ஷாப்பிங் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

2

அத்யாவசியத் தேவைகளுக்காக ஷாப்பிங் செய்த காலம் போய் தற்போது தோன்றும்போதெல்லாம் ஷாப்பிங் செய்யும் நிலைக்கு மக்கள் மாறி விட்டார்கள். ஷாப்பிங் ஒரு அற்புத அனுபவம் தான். அது நிச்சயம் உங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சித் தருவதோடு உங்கள் குடும்பத்தினர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யும்.

பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மக்கள் எளிதாக ஷாப்பிங் செய்ய உதவும் வகையில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், மற்றும் ஷாப்பிங் செய்யக் சிறப்புக் கடன் என்று பல சலுகைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இதனால், தற்சமயம் கையில் பணம் இல்லை என்றாலும் மக்கள் இச்சலுகைகளை பயன் படுத்தி ஷாப்பிங் செய்யத் தொடங்குகிறார்கள். இறுதியில் அந்தத் தொகையைத் திருப்பிக் கட்ட முடியாமல் கடன்காரர்கலாகவும் மாறுகிறார்கள்.

ADVERTISEMENT

ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும் ஆசைகளை குறைத்துக் கொள்ள முடியாமலும் ஷாப்பிங் செய்து விட்டு, சேமிப்பை கரைத்து விட்டு பின் அவதிப் படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னதான் நீங்கள் ஷாப்பிங் செய்யும் முன் தீர்மானமாக நான் இதற்க்கு மேல் செலவு செய்ய மாட்டேன் என்று கூறி விட்டு கடைகளுக்கு சென்றாலும் வீடு திரும்பும் போது உங்கள் பட்ஜெட்டை மீறியே செலவுகளை செய்து விட்டு வந்திருப்பீர்கள்.

எப்படி ஷாப்பிங் செய்யும் போது பணத்தை சேமிப்பது? (How To Save Money While Shopping)

நிச்சயம் ஷாப்பிங் செய்வதை யாராலும் தவிர்க்க முடியாது. அத்யாவசியமோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ, நீங்கள் எந்த காரணத்திற்கு ஷாப்பிங் செய்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டால், உங்களால் ஷாப்பிங் செய்து கொண்டே பணத்தையும் சேமிக்க முடியும். இது ஒரு இனிய மற்றும் சுவாரசியமான ஷாப்பிங் அனுபவமாக உங்களுக்கு இருக்கும்.

எனினும், உங்களுக்கு எப்படி பணத்தை ஷாப்பிங் செய்யும் போது சேமிப்பது என்று தெரியவில்லை என்றால், உங்களுக்காக இங்கே சில உபயோகமான குறிப்புகள்;

1. உங்கள் பட்ஜெட்டை முதலில் தீர்மானியுங்கள்

3

ADVERTISEMENT

 

நீங்கள் ஷாப்பிங் செய்ய செல்லலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிப்பது உங்கள் பட்ஜெட். உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது (சேமிப்பு) மற்றும் எவ்வளவு தற்போது ஷோப்பிங்கிற்க்கு செலவு செய்யலாம் என்பதை முதலில் திட்டமிட வேண்டும். இவ்வாறுத் திட்டமிட்டு செயல்படும் போது தேவை இல்லாத பொருட்களை தவிர்த்து விட்டு தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்குவீர்கள். மேற்கொண்டு செலவு செய்ய என்ன மாட்டீர்கள். இதனால் உங்கள் பணம் சேமிக்கப் படும்.

2. பட்டியல் போடுங்கள்

நீங்கள் ஷோபிங் செய்ய திட்டமிட்டால் முதலில் உங்களுக்குத் தேவையான பொருட்களை பட்டியலிடுங்கள். இப்படி செய்யும் போது உங்களுக்கு முதலில் அத்யாவசியமான பொருட்களை பட்டியலில் சேர்த்து விட்டு பின், குறைந்த தேவை இருக்கும் பொருட்களை பின்னர் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு பட்டியலிடும் போது நீங்கள் கடைக்கு சென்றால் என்னத் தேவையோ அதனை முதலில் வாங்குவதோடு தேவை இல்லாத பொருட்களை தவிர்க்கவும் உதவும்.

3. மிக அத்யாவசிய பொருட்களை முதலில் வாங்குங்கள்

4

ADVERTISEMENT

ஒருவேளை உங்களிடம் குறைந்த பணமே உள்ளது என்றாலோ அல்லது குறிப்பிட்டத் தொகைக்குள் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலோ, முதலில் அத்யாவசியப் பொருட்களை வாங்குங்கள். இதனால் நீங்கள் அத்யாவசியம் இல்லாத அல்லது பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்று தளர்வான சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

4. வீடு திரும்பும் போது நிச்சயம் பணம் மீதம் கொண்டு செல்ல வேண்டும்

இது பெரும்பாலாநோர்களால் செய்ய முடியாமல் போகலாம். நாம் எப்போதும் தேவைக்கு அதிகமாகவே கொஞ்சம் பணம் குடும்பத்தினர்களோடு ஷாப்பிங் செல்லும் போது கொண்டு செல்வது இயல்பு. ஆனால் திரும்பும் போது பட்ஜெட்டை மீறி செலவு செய்திருப்பது போக வீடு திரும்பும் போது எதுவும் கையில் மீதம் இருப்பதும் இல்லை. இனி நீங்கள் ஷாப்பிங் செய்யப் போனால், வீடு திரும்பும் போது பட்ஜெட்டை மீறி செலவு செய்ய மட்டேன், மாறாக திட்டமிட்டதை விட அதிக பணம் வீடு திரும்பும் போது திருப்பி கொண்டு செல்வேன் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள். இது நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது சேமிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

5.கடைகளையும் பொருட்களின் விலைகளையும் ஒப்பிடுங்கள்

5

இதற்க்கு நீங்கள் அதிகம் சிந்திக்கத் தேவை இல்லை. ஷாப்பிங் செய்வதற்கு முன் உங்களுக்குத் தேவையான பொருட்கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு, குறைந்தது இரண்டு அல்லது மூன்று கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருட்களையும் அதன் விலையையும் ஒப்பிட்டு பின்னர் எது உங்களுக்கு மலிவாகவும் தரமாகவும் இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு அங்கு வாங்கினால் நீங்கள் சிறிது பணத்தை சேமிக்க உதவும்,

ADVERTISEMENT

6. விருப்பம் இல்லாத போது ஷாப்பிங் செய்யாதீர்கள்

இது மிக முக்கியமான விடயம். உங்களுக்கு ஷாப்பிங் செய்ய இப்போது மூட் இல்லை என்றால் அதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், உங்களுக்கு விருப்பம் இல்லாத போது, உங்களுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதை சரியாக தீர்மானிக்க முடியாமல் போகலாம். இதனால் நீங்கள் அனாவசியமாக தேவைப் படாத பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை வீணாக்க நேரிடும். அதனால் விருப்பம் இருக்கும் போது மட்டுமே ஷாபிங் செய்வது நல்லது.

7. சரியான நபருடன் ஷாப்பிங் செல்லுங்கள்

6

நண்பர்களுடனும், குடும்பத்தினர்களுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்வது ஒரு நல்ல அனுபவமே. இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். ஆனால் அவ்வாறு செய்யும் போது நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழல் நேரிடலாம். ஒருவேளை உங்கள் நண்பர் அதிகம் செலவு செய்பவராக இருந்து உங்களையும் சில பொருட்கள் வாங்கச் சொல்லி நிர்பந்தித்தால் நீங்கள் விருப்பம் இல்லாமலும், தேவை இல்லாமலும் செலவு செய்ய நேரிடும். இதனால் உங்களால் சேமிக்க முடியாமல் போகலாம்.

8. சிறப்புத் தள்ளுபடி சலுகை இருக்கும் போது ஷாப்பிங் செய்யுங்கள்

அதாவது, பண்டிகை காலங்களில், ஆடித் தள்ளுபடி, புது வருட சிறப்புத் தள்ளுபடி, வருட இறுதி கிளியரன்ஸ் விற்பனை என்று இருக்கும் சிறப்புத் தள்ளுபடி நேரங்களில் ஷாப்பிங் செய்வதால் உங்களுக்கு கொஞ்சம் பணம் சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் நீங்கள் வாங்கும் பொருட்களில் பெரிதாக எந்த மாற்றமும் அல்லது தரத்தில் குறைவோ ஏற்படப் போவதில்லை. அதனால், தள்ளுபடி விற்பனை காலத்தை பார்த்து பொருட்கள் வாங்க முயற்சி செய்யுங்கள்.

ADVERTISEMENT

9. ஆன்லைன் ஷாப்பிங்

7

இன்று பெரும்பாலான மக்கள் வசதிக்காகவும், நேரமின்மைகாகவும், தேவையற்ற பயணத்தை தவிர்ப்பதற்காகவும் மேலும் பல சிறப்பு சலுகைகள் பெறுவதற்காகவும் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது நிச்சயம் உங்கள் வீட்டின் அருகே இருக்கும் கடைகளை விட இங்கு விலை குறைவாகவே இருக்கும். மேலும் அனேகக் ஆன்லைன் கடைகளில் உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை தருவதற்கு எந்த பணமும் வசூலிப்பதில்லை. இது முற்றிலும் இலவசமாகவே இருக்கிறது. அதனால் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே நீங்கள் பணம் கட்டுவீர்கள். இது நீங்கள் பணம் சேமிக்க ஒரு நல்ல வழியாக இருக்கும்.

10. சீசன் நேரங்களில் ஷாப்பிங் செய்வதை தவிர்ப்பது நல்லது

குறிப்பாக தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை, கிருஸ்துமஸ் பண்டிகை, ரமலான் பண்டிகை என்று பண்டிகைக் காலங்களில் அனைத்து கடைகளிலும் புது வரவுகள் மற்றும் புது அறிமுகங்கள் ஏராளமாக இருக்கும். இது துணிக்கடைகளுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பொருட்களுக்கும் சேரும். அந்த பண்டிகை காலங்களில் நீங்கள் வாங்க முயற்சி செய்தால் கண்டிப்பாக சீசன் அல்லாத சமயங்களில் வாங்குவதை விட விலை சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் சீசன் நேரங்களில் பொருட்களை வாங்குவதை தவிர்த்து சற்று முன்பாகவோ அல்லது சீசன் முடிந்த பின்னரோ வாங்கலாம். இதனால் நீங்கள் சேமிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

11. உங்கள் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்

8

ADVERTISEMENT

உங்கள் ஷோப்பிங்கை சிறிது நாட்களுக்கு தள்ளிப் போடுவதால் உங்கள் தேவைகள் மாறும் மற்றும் குறையும். இன்று உங்களுக்குத் தேவை என்று தெரியும் பொருள் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு தேவைப் படாமல் போகலாம். மேலும் நீங்கள் இருக்கும் பொருட்களை வைத்து சமாளிக்கவும் கற்றுக் கொள்வீர்கள் இதனால் தேவையற்ற செலவுகள் குறைந்து நீங்கள் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

12. உங்களுக்கென்று சில விதிமுறைகளை வைத்துக் கொள்ளுங்கள்

ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் பணத்தை சேமிக்க எண்ணினால், உங்களுக்கென்று சில விதிமுறைகளை வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. எடுத்துக்காட்டாக, இத்தனை பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும், பட்ஜெட்டை மீறி செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தேவை இல்லாத பொருட்களை எந்த காரணத்தைக் கொண்டும் வாங்கக் கூடாது என்று, உங்களுக்கென சில விதிமுறைகளை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள் பணத்தை சேமிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

13. உங்கள் செலவுகளை கண்காணியுங்கள்

9

பெரும்பாலோனோர்கள் மாத இறுதியில் வீட்டுப் பட்ஜெட்டில் துண்டு விழும் வரை தங்கள் செலவுகளை கண்காணிப்பதே இல்லை. இதனால் கிரெடிட் கார்டை பயன் படுத்தவும், நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கவும் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இது உங்கள் சேமிப்பை பெரிதும் பாதிக்கிறது. அதனால் நீங்கள் எப்போதும் உங்கள் செலவுகளை, குறிப்பாக ஷாப்பிங் செய்யும் போது உங்கள் செலவு மீது அதிகம் கவனிப்பு வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

குறைந்த செலவில் அல்லது சேமிப்போடு ஷாப்பிங் செய்ய இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். மேலும் இதனோடு நீங்கள் முடிந்த வரை எளிமையான சிறு கடைகளில், உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்க முயற்சிப்பதால் சற்று விலை குறைவாக வாங்கலாம். பெரிய ப்ரண்ட் கடைகளில் நிச்சயம் ஏதாவது ஒரு விதத்தில் நீங்கள் வாங்கும் பொருளுக்கான விலை அதிகமாக வைத்து விற்கப் படலாம். அதே நேரத்தில் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நம்பகமான ஆன்லைன் கடைகளிலேயே பொருட்கள் வாங்குவது நல்லது. பல பொய்யான மற்றும் ஏமாற்றும் ஆன்லைன் கடைகள் அதிகம் இப்போது உள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடும், சேமிப்போடும் ஷாப்பிங் செய்ய வாழ்த்துகிறோம்.

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,பேக்செல்ஸ்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT
01 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT