logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
எப்படி தீபாவளி ஷோப்பிங்கை சிக்கனமாக உங்கள் பட்ஜெட்டிற்குள் செய்வது?

எப்படி தீபாவளி ஷோப்பிங்கை சிக்கனமாக உங்கள் பட்ஜெட்டிற்குள் செய்வது?

தீபாவளி(Diwali) நெருங்கிகின்றது என்றாலே, உங்கள் செலவுகளும் அதிகரிக்கப்போகின்றது என்று அர்த்தம். ஆனால், பல செலவுகளுக்கு  மத்தியில் நீங்கள் திட்டமிட்டே செலவுகளை செய்ய வேண்டும். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுபாட்டிற்குள் வைக்கவில்லை என்றால், தேவையற்ற கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகலாம், அல்லது உங்கள் சேமிப்பு வெகுவாக குறையலாம்.

நீங்கள் திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் உங்கள் தீபாவளி செலவுகளை செய்ய வேண்டும் என்று எண்ணினால், இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

1.   உங்கள் குடும்பத்தினர்கள் தேவையை முதலில் புரிந்து கொள்ளுக்னால்: தீபாவளிக்கு நீங்கள் ஷோபிங் செய்ய திட்டமிட்டால் முதலில் உங்கள் குடும்பத்தினர்களுக்கு என்ன தேவை, என்ன தேவை இல்லை என்று புரிந்து கொள்வது மிக முக்கியம். அப்படி செய்தால் மட்டுமே உங்களால் சரியாக திட்டமிட்டு, உங்கள் பட்ஜெட்டுக்குள் பொருட்களை வாங்க முடியும். இல்லையென்றால், நீங்கள் வாங்கும் பொருட்கள் வீணாகி விடக் கூடும். இதனால் செலவுகள் மட்டுமே மிஞ்சும். திட்டமிட்டு செலவு செய்வது மிக முக்கியம்.

2.   இனிப்பு பலகாரங்களை வீட்டிலேயே செய்யுங்கள்: தீபாவளி என்றாலே, முதலில் வருவது இனிப்பு பலகாரங்கள் தான். இதனை நீங்கள் கடைகளில் வாங்க முயற்சி செய்யும் போது நிச்சயம் அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகலாம். எனினும், வீட்டிலீயே நீங்கள் செய்யும் போது, அதிக அளவு இனிப்பு பலகாரங்களை குறைந்த விலையில், தரமாகவும் செய்து விடலாம்.

ADVERTISEMENT

 

Pixabay

3.   புத்தாடைகள்: இனிப்புக்கு அடுத்தபடியாக புத்தாடைகள், தீபாவளியின் சிறப்பாகும். புத்தாடை இல்லாத தீபாவளி என்பது, சற்று சிந்தித்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால், பட்ஜெட்டை பார்க்கும் போது, எப்படி அதிக செலவு செய்வது என்கின்ற கேள்வி உண்டாகலாம். இந்த குழப்பத்தை தவிர்க்க நீங்கள் இணையதள ஷோப்பிங்கில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் புத்தாடைகளை வாங்க முயற்சி செய்யலாம். அல்லது, சில கடைகளில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விலைகளில் துணிகளை விற்பனை செய்யும் இடத்தை கண்டறிந்து உங்களுக்குத் தேவையான ஆடைகளை வாங்கலாம். இது நீங்கள் பணத்தை சேமிக்க உதவுவதோடு, நீங்கள் விரும்பிய ஆடைகளையும் குறைந்த விலைக்கு வாங்க உதவும்.

ADVERTISEMENT

4.   பொருட்களை ஒப்பிட்டு வாங்குங்கள்: எதையும் அவசரப்பட்டு வாங்கி விடாமல், ஒரு கடைக்கு இரண்டு அல்லது மூன்று கடைகளில் நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை ஒப்பிட்டு, அதாவது விலை, தரம், நிறுவனம் போன்ற விவரங்களை ஒப்பிட்டு வாங்க வேண்டும். இப்படி செய்யும் போது, நீங்கள் தரமான பொருளை, மலிவான விலைக்கு வாங்க முடியும். எனினும், இதற்கு நீங்கள் சற்று நேரத்தை செலவு செய்ய வேண்டியது இருக்கும் தான்.

5.   தள்ளுபடி விலையை பாருங்கள்: அமேசான், பிலிப் கார்ட், இ பே போன்ற இணையதள கடைகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடிகள் பல இருக்கும். நீங்கள் மேலும் சிறப்பு கூப்பன்களையும் பயன்படுத்தி மேலும் விலை குறைவாக உங்களுக்குத் தேவையான பொருட்களை தீபாவளிக்கு வாங்கலாம். இப்படி செய்யும் போது, மொத்த விலையில் இருந்து நிச்சயம் நீங்கள் நல்ல சேமிப்பை செய்யலாம்.

 

ADVERTISEMENT

Pixabay

6.   மின்னுவதெல்லாம் பொன்னல்ல: எப்போதும் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பார்க்க புதிதாக, நல்ல பலபலப்பாக இருப்பதால், அவை தரமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் வெளி தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை நன்கு சிந்தித்து, நீங்கள் கொடுக்கும் விலைக்கு, வாங்கு பொருள் தகுதியானதா என்று பார்த்து பின்னர் வாங்க வேண்டும். இல்லையென்றால், அந்த பொருளை தவிர்த்து விடுவது நல்லது

7.   கடனில் பொருட்கள் வாங்காதீர்கள்: பிறர் தீபாவளியை ஆடம்பரமாக கொண்டாடும் போது உங்களுக்கும் அப்படி செலவு செய்து கொண்டாட வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும். ஆனால், அது ஆபத்தானது. உங்கள் பட்ஜெட் என்னவென்பதை நன்கு சிந்தித்து பின்னர், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே ஒரு பொருளை வாங்க வேண்டும். அது தவிர்த்து, கடன் வாங்கியாவது விரும்பிய பொருளை வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். மேலும், நீங்கள் வாங்கும் பொருள் உண்மையாகவே உங்களுக்கு தேவைப்படுமா என்று பார்த்து பின்னர் வாங்க வேண்டும்.

8.   மாதாந்திர தவணையில் பொருட்களை வாங்காதீர்கள்: எந்த காரணம் கொண்டும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு மாதாந்திர தவணையில் கடன் வாங்கி பொருட்கள் வாங்குவதோ அல்லது நேரடியாக பொருட்களை தவணை முறையில் வாங்குவதோ வேண்டாம். இது உங்களை நிச்சயம் கடனாளியாக்கி விடக் கூடும். அதனால், உங்களிடம் இருக்கும் பணதிற்குல்லேயே பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடுவததே சிறந்தது.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

16 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT